Friday, June 2, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/03/large/1000941.jpgகோகுல்ராஜ் கொலை வழக்கில் 2 பேர் தண்டனை குறைப்பு - யுவராஜ் உட்பட 8 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 2 பேரின் ஆயுள் தண்டனையை 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ், பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் நாமக்கல்லை சேர்ந்த சுவாதி என்ற வேறொரு சமூக பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு கடந்த 2015 ஜூன் 23-ம் தேதி சென்றுள்ளனர். அப்போது, ஒரு கும்பல் கோகுல்ராஜை கடத்தியது. பிறகு, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...