Friday, November 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/11/large/1151941.jpgபுதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் நவ.14 முதல் பரவலாக மழை பெய்யும்

சென்னை: வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. வரும் 14-ம் தேதி முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது:

தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தமிழகத்தில் வரும் 14-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...