
மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் சென்றடையும் வகையிலும், துறையின் நடவடிக்கைகளை வட்டார மற்றும் உள்ளூர் அளவில் விரிவுபடுத்தும் நோக்கிலும் உலகிலே முதன்முறையாக உலக வங்கி நிதியுதவியுடன் ‘ரைட்ஸ்’ (RIGHTS) திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 6 ஆண்டுகளில் ரூ.1,702 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கவனித்து வருகிறார். இந்நிலையில் சட்டப்பேரவையில் வீட்டுவசதி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் மீதான உறுப்பினர்களின் விவாதத்துக்கு பதில் அளித்து, சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்