
தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பிறகு ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை மற்றும் இதர நகரங்களில் பல ஆண்டுகளுக்கு முன்புகட்டப்பட்டு சிதிலமடைந்த நிலையில் உள்ள 7,500 குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் ரூ.1,200கோடி செலவில் மறுசீரமைக் கப்படும். மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கான முழுத்தொகை செலுத்திய 10 ஆயிரம் குடும்பங்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள விற்பனைப் பத்திரங்கள் வழங்கப்படும். மறுவிற்பனை மூலம் தற்போது வசித்து வரும்குடியிருப்புவாசிகளுக்கு விற்பனை பத்திரம் வழங்க புதிய சமரச திட்டம் உருவாக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்