
சென்னை: சென்னையில் வெள்ள நீர் வடிகால்கள் இணைப்புப் பணிகளை விரைந்து முடித்திடுமாறு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடையாததால், கடந்த சில நாட்களில் பெய்த மழை நீர் தேங்கி அவை ஆறு போல காட்சியளிக்கின்றன. மற்ற பகுதிகளிலும் மழை நீர் வடிய தாமதம் ஆகிறது. மழைநீர் வடிகால் பணிகளில் 95% முடிந்து விட்டதாக மேயரும், 70% நிறைந்து விட்டதாக மாநகராட்சியும் கூறினாலும் கூட, பெரும்பான்மையான இடங்களில் துண்டு துண்டாக அமைக்கப்பட்ட கால்வாய்கள் இன்னும் இணைக்கப்படவில்லை. தண்ணீர் வடியாததற்கு அது தான் முக்கிய காரணம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்