Wednesday, January 3, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/03/large/1177884.jpgராதாபுரம் வட்டாரத்தில் கனமழையால் அழுகிய தக்காளி செடிகள்: விவசாயிகள் கவலை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த தக்காளி செடிகள் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டில் 105 ஹெக்டேரில் தக்காளி, 170 ஹெக்டேரில் கத்தரி, 50 ஹெக்டேரில் வெங்காயம், 136 ஹெக்டேரில் வெண்டை பயிரிட வேளாண்மைத் துறையால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இந்த காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தில் பணகுடி, பழவூர், ஆவரைகுளம், மாடன்பிள்ளைதர்மம் உள்ளிட்ட ராதாபுரம் வட்டாரத்தில் தக்காளி உள்ளிட்ட காய்கறி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த வட்டாரத்தில் மழை குறைவாக பெய்வதாலும், நீராதாரங்கள் குறைவு என்பதாலும் பெரும்பாலான விவசாயிகள் காய்கறி மற்றும் பூக்கள் சாகுபடியை மேற்கொள்கிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...