
திருச்சி: திருச்சியில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பல்வேறு துறைகளில் ரூ.20,140 கோடி மதிப்பிலான திட்டங்களில் நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். திருச்சி என்ஐடியில் ரூ.41 கோடியில் கட்டப்பட்ட மாணவர் விடுதி, பல்வேறு ரயில் பாதைகள் மின்மயமாக்கம், இரட்டை ரயில் பாதை, 5 சாலை திட்டங்கள், ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டம் உட்படபல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த வகையில், விமானத் துறை, ரயில்வே, நெடுஞ்சாலை, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கப்பல் துறை, உயர்கல்வி என பல்வேறு துறைகளில் ரூ.20,140 கோடி மதிப்பிலான திட்டங்களில், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்