Thursday, February 1, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, ஏற்கெனவே, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை சமீபத்தில், காணொலி வாயிலாக வழங்கியுள்ளது. தொடர்ந்து, தற்போது உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192173.jpg“இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் அல்வா கிண்டியுள்ளார்கள்” - அமைச்சர் உதயநிதி @ இடைக்கால பட்ஜெட் 2024

சென்னை: மக்களவையில் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், இடைக்கால பட்ஜெட் குறித்த தனது கருத்தை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். தனது சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது.

“ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/01/xlarge/1192171.jpg“பொய்களால் கோர்க்கப்பட்ட மோசடி பட்ஜெட்” - திருமாவளவன் @ இடைக்கால பட்ஜெட் 2024

சென்னை: மக்களவையில் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் இடைக்கால பட்ஜெட் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

“மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் ‘இடைக்கால பட்ஜெட்’ முழுக்க முழுக்க பொய்களைக் கொண்டு கோர்க்கப்பட்டிருக்கிறது. மோடி அரசின் தோல்வியை காட்டும் பட்ஜெட் இது. 28 பக்கங்களைக் கொண்ட பட்ஜெட் உரையை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் படித்தார். 24 பக்கங்களைக் கொண்ட பட்ஜெட்டின் முதல் பகுதி முழுவதும் கடந்த ஐந்தாண்டு கால பாஜக அரசின் சாதனைகள் எனப் பலவற்றை அவர் பட்டியலிட்டார். 4 பக்கங்கள் மட்டுமே கொண்ட பட்ஜெட்டின் இரண்டாம் பகுதியில்தான் நேரடி மற்றும் மறைமுக வரிகள் பற்றியும் பொருளாதார நிலை குறித்தும் பேசப்பட்டிருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, January 31, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/01/xlarge/1191613.jpgஇபிஎஸ் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கு: மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இபிஎஸ் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை மாஸ்டர் நீதிமன்றம் மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/01/xlarge/1191610.jpgசட்டப்பேரவை கூட்டம் பிப்.12-ல் தொடக்கம்: பட்ஜெட் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரியில் தொடங்க இருந்த நிலையில், வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதல் உள்ளிட்ட காரணங்களால் பேரவையின் முதல் கூட்டம் தள்ளிப்போனது. இதற்கிடையே, கடந்த ஆண்டு தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரும் முடித்து வைக்கப்படாமல் இருந்தது. ஆளுநர் - தமிழக அரசு இடையிலான பனிப்போர் காரணமாக, ஆளுநர் உரை இல்லாமலே கூட்டத்தொடரை ஆரம்பிக்கலாமா என்ற பேச்சும் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/01/xlarge/1191609.jpgகுடியுரிமை சட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதை அரசு அனுமதிக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) 7 நாட்களில் அமல்படுத்தப்படும் என்று மத்திய பாஜக இணை அமைச்சர் கூறியுள்ளார். இலங்கை தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதா, சட்டம் ஆனதற்கு முழு முதல் காரணமே, நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, January 30, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/31/xlarge/1191507.jpgகுற்ற வழக்கில் 230 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி எவ்வாறு அமைச்சராக நீடிக்கிறார்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: குற்ற வழக்கில் கடந்த 230 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி எந்தஅடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஜாமீன் மனு குறித்து அமலாக்கத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பைபாஸ் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு, சென்னை புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே நிராகரித்து தள்ளுபடி செய்தது. இதையடுத்து, 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...