Friday, June 30, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/30/large/1031794.jpgகரததரம பசசரமய மறககககடத - பஜக பதககடட அனமத வழககல உயர நதமனறம உததரவ

மதுரை: ‘கருத்துரிமை, பேச்சுரிமையை மறுக்கக்கூடாது. நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கலாம்’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்ட பாஜக நிர்வாகி எஸ்.கார்த்திக்கேயன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ஜூலை 1-ல் பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி கரூர் மாநகராட்சி ஆணையரிடம் 8.6.2023-ல் மனு அளித்தோம். எங்கள் மனுவை நிராகரித்து மாநகராட்சி ஆணையர் 9.6.2023-ல் உத்தரவிட்டார். அதை ரத்து செய்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/30/large/1031795.jpgஇலவச வவசய மன இணபபகக இலகக நரணயபபதல தமதம - அனமத கடததம 2 ஆணடக கததரககம வவசயகள

சிவகங்கை: இலவச விவசாய மின் இணைப்புக்கு இலக்கு நிர்ணயிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், அனுமதி கிடைத்தும் 2 ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

தமிழக மின்வாரியம் இலவச விவசாய மின் இணைப்புகளை சாதாரண பிரிவு, சுயநிதி பிரிவு ஆகிய 2 பிரிவுகளில் வழங்குகிறது. சுயநிதி பிரிவில் ரூ.10,000, ரூ.25,000, ரூ.50,000 என மூன்று வகை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இதுதவிர தட்கல் திட்டம் மூலமாகவும் இணைப்பு வழங்கப்படுகிறது. தட்கல் திட்டத்தில் மோட்டாரின் குதிரை திறனுக்கு ஏற்ப, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, June 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/30/large/1031709.jpgஆளநரன நடவடகக சரய? - சடட நபணரகள வளககம

சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை சரியானதா, இல்லையா என்பது குறித்து உயர் நீதிமன்ற சட்ட நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/29/large/1030483.jpgபரதமரன நடவடககயல மனபரள ஏறறமதயல 3-வத இடம: எல. மரகன பரமதம

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று (ஜூன் 29ம் தேதி) நடைபெற்றது.

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ.11.90 கோடிக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: மீனவ சகோதரர்களுக்கும், மற்றவர்களுக்கும் மத்திய அரசு திட்டங்களை கொடுக்கிறது. அதற்கான தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கு சென்று விடுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/30/large/1030484.jpgசநதல பலஜ நககம | "ஆளநர சயதரபபத அதகர மறகட" - சமன கணடனம

சென்னை: செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்திருக்கும் ஆளுநரின் முடிவு எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில், "அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலிருந்து நீக்கி அறிவித்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தான்தோன்றித்தனமான செயல்பாடு எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, அமைக்கப்பட்டிருக்கும் மாநில அரசின் அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு எனும் மரபைத் தகர்த்து, அரசின் நிர்வாகத்தில் அத்துமீறி தலையிட்டு, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்திருக்கும் ஆளுநரின் முடிவு எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/29/large/1030479.jpgஆற வழச சலககக தணடபபடட ஏர மண - ஆயவ சயய தரவளளர மவடட நரவகததகக உயர நதமனறம உததரவ

சென்னை: ஆறு வழிச் சாலைக்காக ஏரி மண் கூடுதல் அளவு எடுக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவள்ளூர் தாலுகா சித்தம்பாக்கம் கிராமத்தை சேரந்த வழக்கறிஞர் ஜெ.மணிகண்டன் தாக்கல் செய்த மனுவில், "சித்தம்பாக்கம் கிராமம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமம். இந்த கிராமத்தில் 198 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி 500 ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. எங்கள் கிராமம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள கிராமங்களின் நீர் ஆதாரமாகவும் இந்த ஏரிதான் உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, June 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/29/large/1029467.jpgபரதமர மட தமழகததல படடயடடல பரமதன - பன. ரதகரஷணன கரதத

புதுச்சேரி: பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் பெருமைதான் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து பயனடைந்த பயனாளிகளை நேரடியாக சந்தித்து பேசும் மக்கள் இயக்க நிகழ்ச்சி நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளே வியக்கும் வகையில் இந்தியாவை முன்னேற்றியுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/28/large/1029465.jpgவவசயகளகக தஙகம வடதயடன கடய பயறச நலயம - ர.1.50 கடயல மதரயல தறபப

மதுரை: குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பத்தை 36 மாவட்ட விவசாயிகளுக்கு கடந்த 38 ஆண்டாக பயிற்சி அளித்து வரும் தமிழக வேளாண்மைத் துறையின் ஒரே பயிற்சி நிலையமாக மேலூர் விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் திகழ்கிறது.

இங்கு இதுவரை 40 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பயிற்சி நிலையத்திற்கு ரூ.1.50 கோடியில் தங்கும் விடுதியுடன் கூடிய புதிய கட்டிடத்தை நேற்று தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/28/large/1029464.jpgஜபமர அமதம தயபபல வஙகயல 7 ஆணடகளல 2200 லடடர தயபபல சகரபப - 2 ஆயரம கழநதகள பயன

புதுச்சேரி: தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. பிரசவத்துக்கு பிறகு, சில தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்காத நிலை, பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பதால் தனிமையில் வாடும் குழந்தைகள், ஆதரவின்றி மீட்கப்படும் தொட்டில் குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள் ஆகியோருக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற இடர்பாடுகளைத் தவிர்க்க தாய்ப்பால் வங்கி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 1989-ல் முதல் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. நாட்டில் நிகழும் பிரசவங்களை கணக்கில் கொண்டால் தாய்ப்பால் வங்கிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இருப்பினும் கடந்த சில வருடங்களாக தாய்ப்பால் வங்கியின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 100 தாய்ப்பால் வங்கிகள் இந்தியாவில் செயல்படுகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/28/large/1029421.jpgவலர பதய பரநத நலயததல அடபபட வசதகள எஙக! - ர.53 கட மககள பணம பசச?

வேலூர்: வேலூர் மாநகர மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புதிய பேருந்து நிலையம் ரூ.53 கோடியில் திறக்கப்பட்டு ஓராண்டாகிறது. வேலூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திறந்து வைத்ததுடன் பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனத்தால் செப்டம்பர் மாதம் தான் பேருந்துநிலையம் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும், பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்து ஓராண்டாகியும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, June 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/28/large/1029364.jpgதமழகம பதசசரயல 4 நடகளகக மதமன மழ

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 28) முதல் ஜூலை 1-ம் தேதி வரை 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/28/large/1029362.jpgகற சற நடததர தழல நறவன வளரசசகக அரச எபபதம உறதணயக இரககம - மதலவர ஸடலன உறத

சென்னை: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் தின விழா நேற்று அரசு விழாவாக நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/27/large/1027836.jpgமடடர அணயல இரநத டலட பசனததறக நர தறபப 13 ஆயரம கன அடயக அதகரபப

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 11 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (27ம் தேதி) மதியம் 13 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் நீர் இருப்பை பொறுத்து, காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டில் போதுமான அளவு நீர் இருப்பு இருந்தையடுத்து, உரிய நாளான ஜூன் 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து கடந்த 14 நாட்களாக 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் 3 மணி முதல் அணையில் இருந்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/27/large/1027834.jpgவகமடககம யனககல-பரயர நலயம உயரமடட பலம பணகள: நறவ தரவயல நல ஆரஜதம

மதுரை: மதுரை பெரியார் நிலையம் முதல் யானைக்கல் வரையிலான உயர் மட்ட பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில நெடுஞ்சாலைத் துறை வேகப்படுத்தியுள்ளது. தற்போது அதற்கான நிலம் ஆர்ஜிதம் பணிகளை நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாநகரில் பெரியார் பஸ் நிலையம் முதல் சிம்மக்கல், யானைக்கல், கோரிப்பாளையம், தல்லாக்குளம் வழியாக மாட்டுத்தாவணி வரை செல்லும் சாலை அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாகதான் மதுரையின் வடக்கு மற்றும் தெற்கு நகரப் பகுதிகளுக்கு தினமும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளும், மக்களும் சென்று வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/27/large/1027838.jpgர.9.97 கடயல கழவநர சததகரபப நலயம - மனமதரயல தயமயகம வக நத

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை நதியில் கலக்கும் கழிவுநீரை தடுக்கும் வகையில் ரூ.9.97 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.

மானாமதுரை நகராட்சியில் 27 வார்டுகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் வைகை ஆற்றில் விடப்படுகிறது. இதனால் ஆறு முழுமையாக மாசடைந்து நிலத்தடி நீர் நீர்மட்டம் பாதிக்கப்பட்டது. இதை தடுக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/27/large/1027833.jpg"இர சமகததகக இடய பரசசன ஏறபட வயபப" - மமனனன படததகக தட கர வழகக

மதுரை: மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை எடுத்து வருகிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, June 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/27/large/1027741.jpgமணவ மணவகள கலவயன மலம அறவயல மனபபனமய வளரததக களளஙகள - மதலவர ஸடலன அறவர

சென்னை: கல்வி மூலம் பகுத்தறிவு, சுயமரியாதை, அறிவியல் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று `சிற்பி' திட்ட நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

சென்னை காவல்துறை சார்பில் நடைபெற்ற `சிற்பி' திட்ட நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிற்பி திட்டத்தில் பயிற்சி முடித்த 5,000 மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார். மேலும், சிற்பி கீதம் என்ற சிற்பி திட்ட மாணவ, மாணவியருக்கான பாடலையும் வெளியிட்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/26/large/1026456.jpgமதர-நததம பதய நனக வழசசல டலகட கடடணம: எதரபபல சயலபடடகக வரவதல சககல?

மதுரை: சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த மதுரை-நத்தம் புதிய நான்கு வழிச் சாலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்ட புதிய டோல்கேட் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு இன்று செயல்படாட்டிற்கு வருவதாக இருந்த நிலையில் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டது.

மதுரை-நத்தம் நான்கு வழிச் சாலையையும், மதுரையில் இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் பாலத்தையும் சமீபத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நான்கு வழிச்சாலை, நத்தம் வழியாக துவரங்குறிச்சி வரை 63 கி.மீ., செல்கிறது. மதுரையில் ஊமச்சிக்குளத்திற்கும் சத்திரப்பட்டிக்கும் வரை இடையில் ஒரு கி.மீ., தொலைவு வரை மட்டுமே இந்த சாலை பழைய நிலையிலே உள்ளது. அப்பகுதியில் மட்டும் முழுமையாக புதிய சாலை போடவில்லை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/26/large/1026455.jpgஅரர அரக பழதடநத மலநல நரததகக தடடயல பளள மணவரகளகக ஆபதத

அரூர்: தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் ஒட்டுப்பட்டியில் அமைந்துள்ள பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியால் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பொ மல்லாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பழைய ஒட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது. இதன் அருகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. இப்பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பழைய ஒட்டுப்பட்டி, புது ஒட்டுப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/26/large/1026453.jpgமதலவர இரககயல ஏன அமரநதரககறன என எணணகறன - தமக எமஎலஏககள மனபக மதலவர ரஙகசம வதன

புதுச்சேரி: முதல்வர் இருக்கையில் ஏன் அமர்ந்திருக்கிறோம் என்று எண்ணுகிறேன் என்று பேரவைத்தலைவர், திமுக எம்எல்ஏக்கள் முன்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனையுடன் குறிப்பிட்டார்.

கரோனா தடுப்பு பணிக்கு கடந்த 9.9.2020ல் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர், ஏஎன்எம் ஆகியோர் ஒப்பந்த அடிப்படையிலேயே பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. அப்படியாக இதுவரை மூன்று முறைக்கு மேல் அவர்களுக்கு ஒப்பந்தம் நீட்டித்து தரப்பட்டுள்ளது. முன்னதாக அந்த செவிலியர்களுக்கு வாய்ப்பிருந்தால் பணி நிரந்தரம் செய்ய அரசு ஆலோசிப்பதாக தெரிவித்திருந்தது. இந்தநிலையில் அடுத்த மாதம் புதிய செவிலியர்களை தேர்வு செய்வதற்கு போட்டித் தேர்வை நடத்துவதற்கான பணிகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகின்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, June 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/26/large/1026187.jpgதயமப பணயளரகள 3-வத நளக வல நறததம: ஈரட மநகரடசயல கபபகள தககததல சகதர சரகட

ஈரோடு: தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கும் அரசின் முடிவைக் கைவிடக் கோரி, ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினமும் 250 மெ.டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இப்பணியில் 500-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் 1,200-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சியின் தூய்மைப் பணி உள்ளிட்ட பணிகளை தனியாருக்கு வழங்கு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 23-ம் தேதி முதல் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/26/large/1026355.jpgதமழகததல சல இடஙகளல இனற மழகக வயபப

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு.

தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் , புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 26) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல, வரும் 27, 28, 29-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, June 24, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/25/large/1025777.jpgசறத தறயனரன அனமத பறற சநதல பலஜய சநதகக மடயம - சகதரததற அமசசர தகவல

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை கடந்த 14-ம் தேதி அதிகாலையில் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/25/large/1025778.jpgதமழகததல படடயலன மககள மதன வனமறகள ஒடகக நடவடகக - மததய அமசசர ரமதஸ அதவல வலயறததல

சென்னை: தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் அனைவருக்குமான அரசாக உள்ளது. இதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம். ஜி20 தலைமையை இந்தியா ஏற்றது பெருமையாக உள்ளது. கடந்த 9 வருடத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அனைத்து துறைகளிலும் நல்ல முறையில் பணியாற்றி இருக்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/25/large/1025779.jpgதமழகததல அடதத 4 நடகளகக மழபயய வயபப - வனல ஆயவ மயம

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னைவானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன்25) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 26, 27, 28-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/24/large/1025324.jpgமனமதர அரக சறவளககறறல பல டன மமபழஙகள சதம - வலயம இலலததல பண வவசய வதன

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சூறாவளிக் காற்றால் பல டன் மா சேதமடைந்துடன், விலையும் இல்லாததால் பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக பெண் விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.

மானாமதுரை அருகே உள்ள மாங்குளத்தைச் சேர்ந்த பெண் விவசாயி ஹேமாதர்ஷினி. இவரது தோட்டத்தில் 3.5 ஏக்கரில் மா மரங்கள் உள்ளன. கல்லாமை, காசாலட்டு, ராஜபாளையம் சப்போட்டா, இமாம்பசந்த் உள்ளிட்ட ரகங்கள் உள்ளன. இங்கு விளையும் மாம்பழங்களை மானாமதுரை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/24/large/1025323.jpgநமப வககளதத தமழக மககள தமக அரச ஏமறறவரகறத: மதரயல ஜ.க.வசன கறறசசடட

மதுரை: மதுரையில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு ஹோட்டலில் அக்கட்சியின் நகர மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில், தமாகா மாநில தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், முன்னாள் எம்பிக்கள் என்எஸ்வி.சித்தன், சுப.உடையப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் விடியல் சேகர், கேஎஸ்கே.ராஜேந்திரன், தண்டபாணி, ராம்பிரபு, ராஜகோபால், மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி உள்பட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ஆகஸ்ட் 15ல் ஈரோட்டில் நடைபெறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/24/large/1025320.jpgதமழகதத கபபறற மடயத மதலவர ஸடலன பஹர சனற பரதமர உரவகககறரம: இபஎஸ வமரசனம

மேட்டூர்: தமிழகத்தை காப்பாற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின் பிஹார் சென்று அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி, சவுரியூர், காப்பரத்தாம்பட்டி, கரிக்காபட்டி பகுதிகளில் நங்கவள்ளி தெற்கு ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட அதிமுக கொடியை இன்று (ஜூன் 24) அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு ஏற்றி வைத்தார். முன்னதாக, அவருக்கு, கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, June 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/24/large/1024758.jpgவஙகககடலல கரணநதகக பன சனனம அமகக வரவல டணடர

சென்னை: வங்கக்கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், இப்பணிகளுக்கு விரைவில் ஒப்பந்தம் கோருவதற்கான ஆயத்த நடவடிக்கையில் பொதுப்பணித் துறை இறங்கியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள அண்ணா நினைவிட பகுதியில், அவருக்கு ரூ.39 கோடியில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகில் ரூ.81 கோடியில் வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/24/large/1024754.jpgகசசததவ ஒபபநததத ரதத சயய நதமனறததகக அதகரம இலல - தலம நதபத அமரவ உததரவ

மதுரை: கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தலைமை நீதிபதி கூறினார்.

சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்தது. 1974-ல் இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/24/large/1024753.jpgசநத ஊரல மதனம தறநதர கரககட வரர நடரஜன

சேலம்: சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் உருவாக்கியுள்ள கிரிக்கெட் மைதானத்தை அவரின் சக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர், கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் வலைபயிற்சி பந்துவீச்சாளராக இணைந்தார். அப்போது, அந்த தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து, அதே தொடரில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி 20 என 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் நடராஜன்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/23/large/1024748.jpgவயபரகள வரததல களயழநத ஒடடனசததரம கதர மடடசசநத

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே எஸ்.அத்திகோம்பையில் நடந்த குதிரை, மாட்டுச்சந்தைக்கு வியாபாரிகள், விவசாயிகள் வராததால் களை இழந்து காணப்பட்டது. எனினும், சந்தையில் அதிகபட்சமாக காங்கேயம் காளை மாடு ரூ.1 லட்சத்துக்கும், நாட்டு குதிரை ரூ.50,000-க்கும் விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே எஸ்.அத்திகோம்பையில் ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழா ஜூன் 20-ம் தேதி தொடங்கி ஜூன் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் குதிரை மற்றும் மாட்டுத்தாவணி நடைபெறுவது வழக்கம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, June 22, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/23/large/1024188.jpgவஙகககடலல கரணநதககபன சனனம அமகக ஒழஙகமற ஆணயம அனமத: 30-ககம மறபடட நபநதனகள

சென்னை: சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க 30-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் மத்திய கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.39 கோடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதன் அருகில் ரூ.81 கோடி மதிப்பில் வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/22/large/1024186.jpg"பக மடடம வநதத": சனன - லகமனய தலக எகஸபரஸ த வபதத கறதத தறக ரயலவ வளககம

சென்னை: சென்னை அருகே லோக்மான்ய திலக் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவல் குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட லோக்மான்ய திலக் விரைவு ரயில் இஞ்சினின் பின்புறம் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/22/large/1024184.jpgதமழகததன கணபத சநத சகநதகக தசய ஃபளரனஸ நடடஙகல வரத - கடயரசத தலவர வழஙகனர

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த செவிலியர்கள் இருவருக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

செவிலியர்களுக்கான 2022 மற்றும் 2023-ம் ஆண்டின் தேசிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கினார். புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 22, 2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதுகளை வழங்கினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, June 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/22/large/1024052.jpgதமழகததல 500 மதககடகள மட உததரவ - அரசயல கடச தலவரகள வரவறப

சென்னை: தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படுவதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/SYntgUF நள பயணமக தமழக பஜக தலவர அணணமல இனற லணடன பயணம

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று லண்டன் புறப்பட்டு செல்கிறார். அங்கு 6 நாட்கள் தங்கியிருக்கும் அவர், லண்டன் வாழ் தமிழர்களை சந்தித்து, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து பேசுகிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சி வளர்ச்சி பணிகளை கவனித்து வருகிறார். அனைத்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்ட ஏற்பாடுகள், அந்த கூட்டங்களுக்கு தலைவர்கள், மத்திய அமைச்சர்களை வரவழைப்பது ஆகிய பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/7nbDEtT டஸமக கடகள இனற மதல மடல | எஙக எததன கடகள... - தமழக அரச உததரவன மழ வவரம

சென்னை: சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று முதல் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. சிரமமின்றி கடைகள் மூடப்படுவதை மாவட்டஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து, டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, June 20, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/21/large/1022679.jpgஆமபர | சல வரவககம மறறம மமபலம பணகள - மததய இணயமசசர வ.க.சங நரல ஆயவ

ஆம்பூர்: ஆம்பூரில் ரூ.130 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மற்றும் உயர் மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகளை மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் நேற்று (20-ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை ரூ.130 கோடி செலவில் 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை - பெங்களூரு இடையில் நகர பகுதிக்குள் தேசிய நெடுஞ்சாலை செல்லும் ஒரே நகரம் ஆம்பூர் நகரமாகும். இதனால் எப்போதும் ஆம்பூர் நகர பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/20/large/1021185.jpgபகரத பணடகயடட தரபபவனததல கள கடடய ஆடடச சநத - ர.1 கடகக மல வறபன

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பக்ரீத் பண்டிகையொட்டி ஆட்டுச் சந்தை களை கட்டியது. இதில் ரூ.1 கோடி மேல் ஆடுகள் விற்பனையானது.

திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை ஆட்டுச் சந்தை நடக்கிறது. அதன்படி நேற்று அதிகாலையில் நடைபெற்ற சந்தையில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளாடு, செம்மறி ஆடு என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/20/large/1021184.jpgகரககட | தநத சலபன பறததக கணடதல மடயல இரநத கதகக மயனற மணவ - கபபறறய பண எஸஐ

காரைக்குடி: காரைக்குடியில் தந்தை செல்போனை பறித்துகொண்டதால் மாடியில் இருந்து குதித்த மாணவியை பெண் சிறப்பு எஸ்ஐ காப்பாற்றினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைஞர் சாலையில் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் வாடகைக்கு மாடி வீட்டில் குடியிருந்து வருகிறார். அவரது மகள் காவியா ஸ்ரீ இந்தாண்டு பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்ல உள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/20/large/1021181.jpgஆககரமபபகள அகறற நடடஸ அனபபம அதகரம ஊரடச தலவரகக இலல: உயர நதமனறம உததரவ

மதுரை: ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் அனுப்ப ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை இலங்கியேந்தலைச் சேர்ந்த யோகராஜன் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: புது தாமரைபட்டி அருகே உள்ள இலங்கையேந்தலில் தான் வசித்து வீட்டை ஆக்கிரமிப்பு என்று கூறி, ஆக்கிரமப்பை அகற்றுமாறு ஊராட்சித் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவரது நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, June 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/20/large/1020622.jpgசநதல பலஜ தனயர மரததவமனகக மறறபடடத எதரதத மலமறயட - உசச நதமனறம நள வசரககறத

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த 14-ம் தேதி கைது செய்தது. அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததால், ஜூன் 28 வரை ரிமாண்ட் செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/19/large/1020618.jpgதமழ மழ பசம கறஞச கறவரகளகக ரஜககர கடச மறற வரய வடகள வழஙக கரகக

மதுரை: தமிழ்மொழி பேசும் குறிஞ்சி குறவர்களுக்கு ராஜாக்கூர் குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கக்கோரி குறிஞ்சியர் மக்கள் சனநாயக இயக்கம் சார்பில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு அதன் மாநில தலைவர் விடுதலைநேயன் தலைமை வகித்தார். தலைமைக்குழு உறுப்பினர் பவானி முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட நிர்வாகிகள் முத்து காளீஸ்வரி, கீர்த்திகா, சித்ராதேவி, தமிழ்ச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/19/large/1020615.jpgஒறறமயக இரநதல கரநடகததப பலவலலலம - பதசசர கஙகரஸரகக தனஷ கணடரவ யசன

புதுச்சேரி: “ஒற்றுமையாக இருந்தால் கர்நாடகத்தைப் போல் வெல்லலாம்” என்று புதுச்சேரி காங்கிரஸாருக்கு கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ் யோசனை தெரிவித்தார்.

புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்பி அகில இந்திய தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நியமிக்கப்பட்ட வைத்திலிங்கம் எம்பி இன்று மாலை மாநிலத்தலைவராக வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் புதுச்சேரி பொறுப்பாளரும், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சருமான தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், பங்கேற்றனர். அதையடுத்து ஜெயராம் திருமண மண்டபத்தில் ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/19/large/1020620.jpg"ஒவவர வரமம தமக அமசசரகளன ஊழல அமபலம'' - பனமடய பதவ நகக கரம அணணமல

சென்னை: திமுக அமைச்சர் பொன்முடி வேண்டுமென்றே தமிழக அரசின் கருவூலத்துக்கு ரூ. 28.4 கோடிகளை இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, June 18, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/19/large/1020518.jpgதமழகதத வடடய வயல கறநதத

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு மேல் பதிவாகி வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 20 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

தற்போது வானிலை மாறியுள்ள நிலையில், இரு மாதங்களுக்குப் பிறகு நேற்று தமிழகத்தில் ஒரு இடத்திலும் அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் பதிவாகவில்லை. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 98 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/GXY9Z7n மவடடஙகளல இனற கனமழகக வயபப: வனல ஆயவ மயம தகவல

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/18/large/1018829.jpgவஷஜநதககளன கடகக மரநதகம அழஞசல: மரஙகள அறயம பயணததல பரசரயர தகவல

மதுரை: மதுரை தானம் அறக்கட்டளை, மதுரை கிரீன் மற்றும் ஹெச்சிஎல் பவுண்டேசன் சார்பில் 108-வது மரங்கள் அறியும் பயணம் ஞாயிறு அன்று நத்தம் சாலையிலுள்ள கேத்தாம்பட்டி சங்கிலி கருப்பு கோயில் காட்டின் பசுமை வளாகத்தில் நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சிதம்பரம் தலைமையில் பயணம் நடைபெற்றது.

இதில், அமெரிக்கன் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் ஸ்டீபன், கோயில் காடுகளிலுள்ள மரங்கள், செடிகள் குறித்து விளக்கி கூறினார். அப்போது அவர் கூறியதாவது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/18/large/1018827.jpgதரவணணமலயல சத சனறதழ வழஙக மறபப: மணவ தறகல மயறச

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாதி சான்றிதழ் வழங்காததால் கல்லூரி படிப்பு தடைப்பட்ட காரணமாக பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி. தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். பிளஸ் 2 பொதுத் தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி, உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...