Thursday, June 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/01/large/820468.jpgதொழிலாளர் மேலாண்மை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 7 வரை நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டபடிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை),எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் மற்றும் ஏ.எல் படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெறுகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/01/large/820469.jpgபாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணி; பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு: ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது பாதாள சாக்கடை குழியில் விழுந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாதவரம், முத்துமாரியம்மன் கோயில் தெரு, அம்மா உணவகம் எதிரே கழிவுநீர் கால்வாயில் கடந்த செவ்வாய் அன்று (28-ம் தேதி) அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பை சரி செய்யும் பணியில் தஞ்சாவூரைச் சேர்ந்த நெல்சன் (26), அதே மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (36) ஈடுபட்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/30/large/820261.jpg'மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்ட மாநில அரசுக்கு பாதுகாப்பில்லை' - யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு

சென்னை: ''மதச்சார்பின்மை மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற அரசுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பில்லை'' என்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுத் தாக்கலை சில நாட்கள் முன் செய்தவர், இப்போது ஓவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று அரசியல் தலைவர்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இன்று சென்னை வந்த அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த யஷ்வந்த் சின்ஹா, "இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தும், இந்த கூட்டத்தின் மூலம், நமக்கு ஆதரவளிக்கக்கூடிய மற்ற அரசியல் கட்சியினரையும் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு எனது நன்றி. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏறக்குறைய நமக்கு இங்குள்ள கட்சியினரிடம் 63 ஆயிரம் ஓட்டுகள் உள்ளதாக முதல்வர் அறிவித்தார். மேலும் ஒரு மாநில அரசு கவிழ்க்கப்பட்டுள்ளது. பாஜக, மகாராஷ்டிராவில் சிவசேனா எதிர்ப்பு எம்எல்ஏக்களுக்கு ஆதரவளிக்கப் போகிறது. பாஜகவின் தலைவர் அங்கு மாநில முதல்வராக வரவில்லை. ஏனென்றால், இந்த அரசு தோற்காது என்று அவருக்கு தெரியும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/30/large/820251.jpgதிருச்சி மாமன்றக் கூட்ட விவாதத்தின்போது வீண் அரட்டை - பார்வையாளர் பகுதியில் இருந்து வீடியோ பதிவு

திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் விவாதத்தின்போது வீண் அரட்டை, வீடியோ பதிவு செய்வது என வழக்கத்துக்கு மாறாக நடைபெற்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் எனவும், இருக்கை ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும் எனவும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளிவிழா கண்ட திருச்சி மாநகராட்சியில் மாதம் ஒருமுறை சாதாரணக் கூட்டமும், தேவைப்படும் நேரங்களில் அவசரக்கூட்டமும் நடத்தப்படுவது மரபு. மேயர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டங்களில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்று தங்களது கருத்துகள், குறைகள், கோரிக்கைகளை முன்வைப்பது வழக்கம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, June 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/30/large/820143.jpgபெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு எனக்கு உள்ளது; தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் பதில் மனு: ஓபிஎஸ் அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றுவதாகவும் புகார்

சென்னை: பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு உள்ளது. ஓபிஎஸ் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக வரும் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்த பழனிசாமி தரப்பும், அதை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் தரப்பும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/30/large/820104.jpgபயணிகளின் உடமைகளை சோதிக்க சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நவீன ஸ்கேனர்

சென்னை: பயணிகளின் உடமைகளை சோதிக்கும் விதமாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் கொண்ட நவீன ஸ்கேனர்கள் நிறுவப்படவுள்ளன. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களாக சென்னை சென்ட்ரல், எழும்பூர் நிலையங்கள் உள்ளன. இந்த 2 நிலையங்களில் ஏற்கெனவே ஸ்கேனர்கள் செயல்பாட்டில் உள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/30/large/820107.jpgஇந்திய ரயில்வே மகுடத்தின் மாணிக்கம் ராயபுரம் ரயில் நிலையம்: ஜூன் 28-ல் 166 ஆண்டுகளை நிறைவு செய்தது

சென்னை: இந்தியாவின் பழமையான ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையம் நேற்று முன்தினம் (ஜூன் 28) 166 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையம், இந்திய ரயில்வேயின் மகுடத்தில் ஒரு மாணிக்கமாகத் தொடரும் என்று தெற்கு ரயில்வே புகழாராம் சூட்டியுள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை புறநகர் வலையமைப்பில் ராயபுரம் ரயில் நிலையம் முக்கிய நிலையமாகும். இது, இந்தியாவில் தற்போது இயங்கி வரும் பழமையான ரயில் நிலையமாகும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/30/large/820105.jpgபணியின்போது உயிரிழந்த குடிநீர் வாரிய தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம்: ஸ்டாலின் உத்தரவு

சென்னை: பணியின்போது உயிரிழந்த சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் காலை முதல் ஜெட் ராடிங் மற்றும் சூப்பர் சக்கர் இயந்திரத்தை பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/30/large/820170.jpgசமூகநலத் துறை சார்பில் குழந்தைகள் நலனுக்கான 3 புதிய திட்டங்கள் தொடக்கம் - ரூ.7.32 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு

சென்னை: சமூகநலத் துறை சார்பில் குழந்தைகளின் வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுகாதாரம் தொடர்பாக ரூ.7.32 கோடியில் 3 திட்டங்களை தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூகநலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/29/large/819899.jpgமேகேதாட்டு அணை | கர்நாடகாவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

வேலூர்: மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எந்தவிதமான தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 30,423 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற பணிகளுக்கான திறப்பு விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான தொடக்க விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: ‘‘இந்திய சுதந்திர போராட்டம் 1857-ம் ஆண்டு நடைபெற்றதாக கூறுவார்கள். ஆனால் அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக அனலும், கனலும் தெறித்த ஊர் தான் இந்த வேலூர். இந்தியர்கள் அடிமைகளாக வாழ தயாரில்லை என்று தெரிவித்த வேலூர் புரட்சி நடந்த இந்த கோட்டை மைதானத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, June 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/29/large/819723.jpgகுரூப் 4 தேர்விலும் தமிழ் தாளில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்களிக்க கோரிக்கை

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தமிழ் மொழித் தாள் எழுதுவதில் இருந்து, செவித் திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர்களது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில், செவித் திறன் குறைபாடு உடையவர்களின் பெற்றோர் சங்கம் சார்பில் நேற்று ஒரு மனு அளிக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து சங்கத்தின் தலைவர் உஷா, செயலாளர் கவிதா ஆகியோர் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/29/large/819724.jpgமாணவர் படைப்பு கண்காட்சி, பாலினக்குழு அமைத்தல் என பள்ளி மேம்பாட்டுக்கு ஏராளமான திட்டங்கள்: சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அனுமதி

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் (பொறுப்பு) எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி பள்ளி மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் தாங்கள் கற்றவற்றை விளக்குவதற்காக பள்ளிகள், உதவி கல்வி அலுவலர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மாநகராட்சி அளவில் கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன. அதற்காக ரூ.18 லட்சத்து 62 ஆயிரம் செலவிட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/29/large/819806.jpgசென்னை வண்டலூர் அருகே 45 ஏக்கரில் அனைத்து வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் - செப்டம்பரில் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்

வண்டலூர்: சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 44.75 ஏக்கரில், ரூ.393.74 கோடியில், ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இது செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மிகப் பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, பண்டிகை நாட்களின் போது கடும் நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனால், சென்னை மக்களும், வெளியூர் செல்பவர்களும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/29/large/819812.jpgமேற்குத் தொடர்ச்சி மலை மாவட்ட பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/29/large/819796.jpgஜூலை 11-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி அவமதிப்பு வழக்கு முழு விவரம்

சென்னை: வரும் ஜூலை 11-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் பதவியில் நீடிக்கத் தடை கோரியும் அதிமுக பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி அதிமுக பொதுக்குழு உறுப்பினரான திருப்பூர் எம்.சண்முகம் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, June 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/28/large/819427.jpgஆன்லைன் ரம்மி தடைக்கு அவசரச் சட்டம் - தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிப்பது குறித்தும், புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள விளையாட்டுகளில் பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழப்பதுடன், கடன் தொல்லை மற்றும் மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/27/large/819098.jpgபிட்காயின் பெயரில் ரூ.2.75 கோடி மோசடியால் பாதிக்கப்பட்ட பெண் - மதுரை ஆட்சியரிடம் புகார்

மதுரை: பிட்காயின் பெயரில் 484 பேரிடம் ரூ.2.47 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மதுரை ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

மதுரை நாகமலை புதுக்கோட்டை சேர்ந்தவர் அனுராதா. இவர் திங்கள்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், கூறியிருப்பதாவது: " நான் மதுரையில் தனியார் டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தேன். பகுதி நேரமாக அருகில் மசாலா பொடி தயாரித்து விற்றேன். எனது மசாலா தயாரிப்பு குறித்து சமூக வலைத்தளத்திலும் தகவல் பதிவிட்டு இருந்தேன். என்னுடைய பொருட்களை விற்க சில வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டபோது, ஐஸ்வர்யா என்ற பெண் அறிமுகம் ஆனார். பின்னர் இருவரும் தகவல்களை பகிர்ந்தோம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/27/large/819097.jpg“அரசு பணத்தில் ராணுவப் பயிற்சி அளித்து இளைஞர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ப்பதே மறைமுக நோக்கம்” - நாராயணசாமி

புதுச்சேரி: அரசு பணத்தில் ராணுவப் பயிற்சி அளித்து, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இளைஞர்களை கொண்டு வருவதே மத்திய பாஜக அரசின் மறைமுக நோக்கமாக உள்ளது என்று புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசின் அக்னி பாதை திட்டத்தை கண்டித்து சத்தியாகிரகப் போராட்டம் (காலையில் 3 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம்) 16 இடங்களில் நடந்தது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா கோயில் அருகே நடந்த காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரகப் போராட்டம் திங்கள்கிழமை நடந்தது. இதற்கு, காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளரும் மூத்த துணைத் தலைவருமான தேவதாஸ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/27/large/819095.jpg“பறிகொடுத்த மாநில உரிமைகளை  மீட்டெடுக்கவே பணியாற்றுகிறோம்” - ஆளுநர் தமிழிசை பேச்சு

புதுச்சேரி: ஆளுநராக எப்போதும் தனியாக சுயநலமாக செயல்படவில்லை, அதிகாரத்தை கையில் எடுக்கவில்லை. இணைந்து பணியாற்றுவதில் தான் விருப்பம். சில பிரச்சினைகளால் பறிகொடுத்த புதுவையின் மாநில உரிமைகளை மீட்டு எடுக்கவே பணியாற்றுகிறோம் என்று என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ரங்கசாமி முதல்வராக மே 7-ம் தேதி பதவியேற்றார். அதைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக அமைச்சரவை அமைக்கப்படாமல் இருந்தது. இறுதியில் ஒரு சுமூக உடன்பாடு ஏற்பட்டு என்ஆர்.காங்கிரசில் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, பாஜகவில் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பரிந்துரைக்கப்பட்டு 50 நாட்களுக்கு பிறகு ஜூன் 27-ல் பதவியேற்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, June 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/27/large/818903.jpgபொன்னேரி: ஆரணி ஆறு தடுப்பணை பணி ஜூலையில் நிறைவு: உவர்ப்பு நீர் உட்புகாமல் தடுக்கும் பணியும் தீவிரம்

பொன்னேரி: பொன்னேரி அருகே ஆண்டார்மடத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கேதடுப்பணை மற்றும் பழவேற்காடு ஏரியின் உவர்ப்பு நீர் உட்புகாதவாறு அடிமட்ட தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் ஜூலை இறுதியில் முடிவுக்கு வரும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறான ஆரணி ஆறுஆந்திர மாநிலம், நகரி மலையடிவாரத்தில் உருவாகிறது. அங்கிருந்து 132 கி.மீ., பயணித்து பழவேற்காடு பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 66 கி.மீ.செல்லும் ஆரணி ஆற்றில், செழியம்பேடு ஆழ்ஏரி, எளாவூர் காட்டேரி உள்ளிட்ட 211 ஏரிகளின் உபரி நீர் கலக்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/27/large/818906.jpgகடந்த மார்ச் முதல் மாதாந்திர உணவுப்படி வழங்காததால் தாம்பரம் மாநகர போலீஸார் அதிருப்தி

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் எல்லையைச் சேர்ந்த செங்கல்பட்டு மற்றும்காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாருக்கு உணவுப்படி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் போலீஸார் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழக போலீஸாருக்கு மாதத்துக்கு 6 நாட்கள் வீதம் இரண்டாம் நிலை போலீஸார் முதல் உதவி ஆய்வாளர் வரை நாள் ஒன்றுக்கு ரூ.300 வீதம் உணவுப்படி வழங்குவது வழக்கம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/27/large/819009.jpgசனாதன தர்மத்துடன் மதத்தை ஒப்பிடக் கூடாது: சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி நூற்றாண்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

சென்னை: சனாதன தர்மம், மதம் ஆகியவற்றை ஒருபோதும் ஒப்பிடக்கூடாது. இரண்டும் வெவ்வேறானவை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் முகப்பு கட்டிடமான ‘ஏழைகளின் அரண்மனை’ மற்றும்உறைவிட உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது. விழாவுக்கு ராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, நூற்றாண்டு விழாவையொட்டி வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். நலிந்த நாடகக் கலைஞர்கள், துப்புரவுப் பணியாளர்கள், விதவைகளுக்கு ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆளுநர் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/27/large/818998.jpgமுதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை இன்று கூடுகிறது: ஆன்லைன் ரம்மி தடை குறித்து ஆலோசித்து முடிவு

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது. இதில், புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளித்தல், ஆன்லைன் ரம்மிதடைக்கான அவசரச் சட்டம் கொண்டுவருதல், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டம் கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசின் தடை சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்த பலர்தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசுஉடனடியாக தடைச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/27/large/819026.jpgஅதிமுக கட்சி நாளிதழில் நிறுவனர் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கம்

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற பழனிசாமி தரப்பு முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஜூலை 11-ம் தேதி கட்டாயம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும், அன்று ஒற்றைத் தலைமையாக, பொதுச் செயலர் பொறுப்புக்கு பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் தெரிவித்து வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/27/large/819025.jpgகரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டிருந்த 34 ரயில்கள் மீண்டும் இயக்கம்: தெற்கு ரயில்வே

சென்னை: கரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டிருந்த 34 ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் - திருநெல்வேலி(06405/06409), மதுரை - செங்கோட்டை (06663/06664), திருநெல்வேலி - செங்கோட்டை(06681/06658), செங்கோட்டை - திருநெல்வேலி (06684/06687) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/27/large/818996.jpgஅதிமுக தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்: ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

மதுரை: அதிமுக தொண்டர்கள் என் பக்கம்இருக்கின்றனர் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஒற்றைத் தலைமை பிரச்சினையால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு இடையேயான மோதல் முற்றியுள்ளது. இப்பிரச்சினையால் அதிமுக இரண்டாக பிரிந்து செயல்படும் சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானத்தில் நேற்றுபிற்பகல் மதுரை வந்தார். விமானநிலையத்தில் அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றனர். அப்போது ஓபிஎஸ்ஸை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, June 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/26/large/818584.jpgஇ-சஞ்சீவனி திட்டத்தை ஆய்வு செய்த மத்திய அமைச்சர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் இ-சஞ்சீவனி திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: தற்போது இ-சஞ்சீவனி சேவை திட்டம் தொடங்கப்பட்டு நல்ல முறையில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின் மூலம் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறலாம் என்பதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 12 வகையான நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது என்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/26/large/818586.jpgஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவை நடத்த இபிஎஸ் தீவிரம் - கூட்டத்தை தடுக்க சட்ட வல்லுநர்களுடன் ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை, ஏற்கெனவே அறிவித்தபடி ஜூலை 11-ம் தேதி நடத்துவதற்கான பணிகளை இபிஎஸ் தரப்பினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் அக்கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் தரப்பினர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவில் கடந்த ஜூன் 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது. அப்போது முதல் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்தது. இரட்டை தலைமைதான் வேண்டும் என்பதில் ஓபிஎஸ் தரப்பும், இபிஎஸ் தலைமையில் ஒற்றைத் தலைமை என்பதில் இபிஎஸ் தரப்பும் உறுதியாக உள்ளன. எம்ஜிஆர் காலத்து மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தம்பிதுரை உள்ளிட்டோரின் சமரச முயற்சிகளும் தோல்வி அடைந்தன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/26/large/818588.jpgஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை நிர்வாகம் கைவிட வேண்டும் - துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை நிர்வாகம் கைவிட வேண்டும் என, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களில் 12 பேர் மற்றும் பல்வேறு மீனவர் நலச்சங்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தங்கம் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/26/large/818610.jpgதூத்துக்குடியில் மருத்துவ மாணவர்கள் 30 பேருக்கு கரோனா - தமிழகத்தில் புதிதாக 1,382 பேருக்கு பாதிப்பு

தூத்துக்குடி/சென்னை/புதுடெல்லி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 30 பேர் உள்ளிட்ட 60 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 1,382 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை தினமும் 10-க்கும் குறைவானவர்களுக்கே கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 82-ஆக அதிகரித்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/26/large/818614.jpgஉயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை - இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியது

சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகள் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற இணையவழி விண்ணப்பபதிவு நேற்று தொடங்கியது.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலை.களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/25/large/818326.jpgநியாய விலை கடைகளை நவீனமாக மாற்ற நடவடிக்கை - முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

கோவை: தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாநில எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கோவைக்கு இன்று (ஜூன் 25-ம் தேதி ) மதியம் வந்தார். பீளமேடு புதூரில் உள்ள நியாய விலைக்கடை, ரயில் நிலையம் சாலையில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, June 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/25/large/818264.jpgதமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை வாய்ப்பு குறைவு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் 3 நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மழை வாய்ப்பு குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கேட்டபோது, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/25/large/818256.jpgதிரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் - அதிமுக தலைவர்கள் நேரில் ஆதரவு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (64), தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடன் இருந்தனர்.

இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு கோரினர். அத்துடன், முர்முவின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/25/large/818255.jpgபிளஸ் 2 படித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி - முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/25/large/818229.jpgபல்கலை. திருத்தச் சட்டம் உட்பட 21 மசோதாக்கள் நிலுவை - ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல்

சென்னை: 2020 ஜனவரி மாதம் முதல் கடந்த மே மாதம் வரை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட, பல்கலைக்கழக திருத்தச் சட்டங்கள் உட்பட 21 சட்ட மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின் சட்டமாக்கப்படும். ஆனால், தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/24/large/817914.jpgமதுரையில் போலீஸ் மீது தாக்குதல்: சு.வெங்கடேசன் எம்.பி  உள்பட 450 பேர் மீது வழக்கு

மதுரை: மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்தை கைவிடக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக மதுரை நாடாளுமன்ற எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் நான்காண்டுகால அக்னி பாதை திட்டத்தை கைவிட வேண்டும், மதுரை - உத்தரப் பிரதேசம் பிரக்யாநகருக்கு தனியார் ரயில் சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை நகர், புறநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏராளமானோர் வியாழக்கிழமை ரயில் மறியல் நடத்தத் திட்டமிட்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/24/large/817912.jpgகோவை | காவல்துறையின் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம்’ - நடப்பது எப்படி?

கோவை: மாவட்ட காவல்துறையின் சார்பில், குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள், அதனை எதிர்கொண்டு காவல்துறையிடம் புகார் அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் 'ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்' திட்டம் 27-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், திருடப்பட்ட, மாயமான செல்போன்களை மீட்டு, அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (24-ம் தேதி) நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மீட்கப்பட்ட 105 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, June 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/24/large/817744.jpgகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 81 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீக்காயத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தீக்காயம் பற்றிய விழிப்புணர்வு காணொலியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.

தொடர்ந்து செயற்கை கால் உறுப்பு தான முகாமில் 81 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகளை இலவசமாக வழங்கினார். அப்போது மா.சுப்பிரமணியன் பேசியதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1973-ம் ஆண்டு 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு தீக்காயப் பிரிவு தொடங்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/24/large/817842.jpgதென்மாவட்ட ரயில்களில் தீபாவளி முன்பதிவு - தொடங்கிய சில நிமிடத்தில் முடிந்தது

சென்னை: தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கிய நிலையில், பாண்டியன், பொதிகை உட்பட முக்கிய ரயில்களின் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளின் இடங்கள் 2 நிமிடங்களில் நிரம்பி, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.

சென்னை மற்றும் பிற ஊர்களில் வசிக்கும் மக்கள், ஆண்டுதோறும் தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக ரயில்கள், பேருந்துகளில் சொந்த ஊருக்கு செல்வார்கள். நீண்டதூரம் பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் ரயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். அதனால், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/24/large/817841.jpgதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 24-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/24/large/817838.jpgவிஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரதமர் நலம் விசாரிப்பு - விரைவில் குணமடைய வாழ்த்து

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த், உடல்நலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் விலகி இருக்கிறார். இதனால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அவரது தம்பி சுதிஷ் ஆகியோர் கட்சிப் பணிகளை கவனித்து வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/24/large/817839.jpgதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தார்கள் - திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்களே தவிர திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது’ என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் பேத்தி தீப்தி - வஷ்வக்சேனா ஆகியோர் திருமணம், சென்னை திருவான்மியூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/24/large/817833.jpgநீதிமன்ற உத்தரவு முதல் ஓபிஎஸ் டெல்லி பயணம் வரை - அதிமுக பொதுக்குழுவில் நடந்தது முழுவிவரம்

சென்னை: நீதிமன்ற உத்தரவால் அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழுவில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பாதியில் வெளியேறினர். அவர்கள் மீது தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/24/large/817484.jpg'அழைப்பு வந்தது, அதனால் செல்கிறேன்' - டெல்லி புறப்பட்டுச் சென்ற ஓபிஎஸ்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக கூட்டணயின் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவர் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்லம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தனித்தனியாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, June 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/23/large/817403.jpgதமிழகத்தில் இன்று இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைகண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 23-ம் தேதி தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/23/large/817415.jpg'ஒற்றைத் தலைமை பற்றி முடிவு எடுக்க கூடாது' - மேல்முறையீட்டு வழக்கில் நிபந்தனைகளுடன் அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தணிகாச்சலம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/23/large/817391.jpgதிட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது - ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற திட்டம்

சென்னை: ஒற்றைத் தலைமை பிரச்சினையால் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே மோதல் எழுந்துள்ள சூழலில், அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று கூடுகிறது. கூட்டத்துக்கு தடை கோரிய இடைக்கால மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கட்சி விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், சில மாதங்களாக ஒருங்கிணைப்பாளர்கள் முதல் கிளை செயலாளர் வரையிலான பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை, கட்சியின் பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெற்று, அதன்பின் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/23/large/817095.jpgஅதிமுக பொதுக்குழு விவகாரம்: நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு - இரவே விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இரவே விசாரணை செய்யப்படவுள்ளது.

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/22/large/817093.jpg'மருந்துகளில்லை, குறைதீர் கூட்டமில்லை' - நிர்வாக குறைபாட்டை கண்டித்து ஜிப்மர் மருத்துவ பேராசிரியர்கள் போராட்டம்

புதுச்சேரி: மருந்துகள் இல்லை, குறைதீர் கூட்டம் நடத்துவதில்லை, மோசமான நிர்வாகம் என அடுக்கடுக்காக பிரச்சினைகளைத் தெரிவித்து, போராட்டம் நடத்தப் போவதாக மருத்துவ பேராசிரியர்கள் ஜிப்மர் இயக்குநருக்கு ஆறு பக்கத்துக்கு கடிதம் அளித்துள்ளனர். முதல்கட்டமாக வரும் 24-ம் தேதி நிர்வாக அலுவலகம் முன்பு அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துவோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைத்துள்ளது ஜிப்மர் மருத்துவமனை. மத்திய அரசின் கட்டுபாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக வெளிப்புறச் சிகிச்சைகள் தொடர்ச்சியாக தரப்படாத சூழல் நிலவி வந்தது. தொலைபேசி வழியாக முன்பதிவு செய்து, அதன் பிறகே சிகிச்சைக்கு வரவேண்டிய நிலை இருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...