Wednesday, June 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/687964.jpgராமநாதபுரத்துக்கு ‘முகவை’ என்று பெயர் ஏற்பட காரணம்: தொல்லியல் ஆய்வாளர் தகவல்

ராமநாதபுரத்துக்கு முன்பு ‘முகவை' என்ற பெயர் ஏற்படக் காரணம் தொடர்பாக அரிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

முற்காலத்தில் ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிக நெல் விளையும் இடமாக இருந்துள்ளன. அச்சமயத்தில், நெல் கதிரடிக்கும் பொட்டல் பகுதியாக இருந்ததால், ராமநாத புரத்துக்கு முகவை என்ற பெயர் வழங்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் வே. ராஜகுரு தெரிவித் துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/687998.jpgபோதிய இருப்பு இல்லாததால் மதுரையில் கரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்: சாலை மறியலுக்கு முயன்றவர்களை சமாதானப்படுத்திய போலீஸார்

மதுரை இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி இருப்பு இல்லாததால் நேற்று தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை, இதனால் தடுப்பூசி போட வந்தவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர்.

மதுரையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. நகரில் அரசு மருத்துவமனை சார்பில், அருகிலுள்ள இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், நகர் நல சுகாதார மையங்களிலும் சிறப்பு முகாம் ஏற்படுத்தி தடுப்பூசி போடுவதற்கு சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. பிற இடங்களைவிட இளங்கோ மேல்நிலைப்பள்ளி முகாமில் தினமும் ஏராளமானோர் தடுப்பூசி போடுகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688016.jpgகிணற்றில் குளிக்கச் சென்ற இரு குழந்தைகள் உயிரிழப்பு

விக்கிரவாண்டி அடுத்த சித்தணி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கரி. இவர்களுக்கு தினேஷ் (5), சத்ய (4) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தில் சங்கரியின் தாய் பெரியநாயகம் அண்மையில் இறந்தார். அவருக்கு கரும காரியம் நேற்று நடந்தது. அதில் கலந்து கொள்ள கணவன், மனைவி இருவரும் தங்களின் இரு குழந்தைகளுடன் ஆசூர் கிராமத்திற்கு வந்திருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688090.jpgதொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த சம்பளத்தில் பிடித்தம்: திருப்பூர் பனியன் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு, அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்வதாக தொடர்புடைய நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சிஐடியு பனியன்தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஜி.சம்பத் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688095.jpgஆர்டர்களுக்காக காத்திருக்கும் சிறு, குறு நிறுவனங்கள்

கோவை மாவட்டத்தில் அனைத்து தொழில் நிறுவனங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டும், ஆர்டர்கள் வராத காரணத்தால் பெரும்பாலான சிறு, குறு நிறுவனங்களில் உற்பத்தி தொடங்கவில்லை.

கரோனா தொற்று பரவலால் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் ஜூலை 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகள் 33 சதவீதம் பணியாளர்களுடனும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688100.jpgஜவுளி தொழிலை மேம்படுத்த ஆக்கப்பூர்வ திட்டங்கள்: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி உறுதி

ஜவுளி தொழிலை மேம்படுத்த, ஆக்கப்பூர்வ திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.

தென்னிந்திய பஞ்சாலைக் கழகம் மற்றும் துணிநூல் தொழில் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம், அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் கோவையில் நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688028.jpgமுன்னாள் முதல்வர் அண்ணாவின் பெயரில் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் அண்ணாவின்பெயரில் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் முதல் முறையாக, நேற்று காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லம் வந்தார்.அங்குள்ள அண்ணாவின் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான படங்களைப் பார்வையிட்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688029.jpgஅரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் ரூ. 2 கோடியில் காசநோய் கண்டறியும் ஆய்வகம்: மருத்துவ துறை அமைச்சர் திறந்துவைத்தார்

தாம்பரம் சானடோரியத்தில் உள்ளஅரசு நெஞ்சக மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காச நோய் ஆய்வகத்தை மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து தாம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.90 லட்சம் மதிப்பில் நடமாடும் காசநோய் கண்டுபிடிப்பு எக்ஸ்ரே ஊர்தி வழங்கப்பட்டது. அந்த ஊர்தியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.நாராயணபாபு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, மருத்துவ கண்காணிப்பாளர் இரா.தர் மற்றும் மருத்துவஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688031.jpgசென்னை மாநகராட்சியில் 746 தற்காலிக பதவிகள் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

சென்னை மாநகராட்சியில் அனைத்து துறைகளிலும் தற்காலிகமாக 1,896 பதவிகள் தோற்றுவிக்கப்பட்டன. மாநகராட்சியின் செலவீனத்தை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 1,896 பதவிகளில் 1,150 பதவிகள் அவசியம் இல்லாததாக கருதி கடந்த 2012-ம் ஆண்டு 746 தற்காலிக பதவிகளாக குறைக்கப்பட்டது.

இப்பதவிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டு, மக்கள் தொகையும் பெருகி வரும் நிலையில், இப்பதவிகளுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்க மாநகராட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கு மாநகராட்சி சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டது. அதை ஏற்று கடந்த வாரம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688034.jpgகோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும்: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி

தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாரபட்சமின்றி மீட்கப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களிடம் சேகர்பாபு கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/3dvtNxb - 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க ஆந்திர அரசு ஒப்புதல்

ஆந்திர அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திரா – தெலங்கானா இடையே தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினை குறித்து நீண்ட ஆலோசனை நடந்தது.

இதில் முதல்வர் ஜெகன் பேசும்போது, “ஆந்திராவுக்கு வழங்க வேண்டிய தண்ணீரில் தெலங்கானா அரசு மின்சாரம் தயாரிக்கிறது. தண்ணீர் பங்கீட்டிலும் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது. இப்பிரச்சினை குறித்து கிருஷ்ணா நதிநீர் வாரியத்துக்கு நீங்கள் கடிதம் எழுதுங்கள். பிறகு இதுகுறித்து பிரதமருக்கு நான் கடிதம் எழுதுகிறேன்” என்றார். இதையடுத்து பல்வேறு முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688150.jpgவிஐபி தொலைபேசி எண் தருவதாக கூறி ரூ.1.43 கோடி மோசடி செய்தவர் கைது

விஐபி மொபைல் நம்பர் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.43 கோடி வரை மோசடி செய்த நபரை அகமதாபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்த ஒருவர், விஐபி மொபைல் நம்பர் வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் ஒருநபர் ரூ.1.43 கோடி வரை மோசடி செய்ததாக, சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688108.jpgதமிழக அரசு தற்காலிக இடம் வழங்கினால் எய்ம்ஸ் வெளிநோயாளிகள் பிரிவு மதுரையில் தொடங்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தமிழக அரசு தற்காலிக இடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்தால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க ஆர்வமாக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை அதலையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688110.jpgபாலியல் புகாரில் கல்லூரி பேராசிரியர் சஸ்பென்ட்

மாணவிகள் அளித்த பாலியல்புகாரின்பேரில் திருச்சியில்உள்ள பிரபல தனியார் கல்லூரி பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் நேற்று பணியிடை நீக்கம் செய்துள்ளது.

திருச்சி, புத்தூரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் (அரசு உதவி பெறும்) தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருபவர் பால் சந்திரமோகன் (55). இவர், தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி முதுநிலை தமிழ்த் துறை மாணவிகள் 5 பேர், கல்லூரியின் உள் புகார் குழுவில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்திருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688116.jpgபயணிகளின் வருகை அதிகரிப்பால் கூடுதலாக 100 விரைவு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல்

தமிழகத்தி்ல் கரோனா தொற்று குறைந்து வருவதால், பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 28-ம் தேதி முதல் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையே, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், அரசு உத்தரவுப்படி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல்நாளில் நகரப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது அதிகரித்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688118.jpgஅப்போலோ மருத்துவமனைகள் சார்பில் நாடு முழுவதும் 50 நகரங்களில் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி: சென்னையில் முகாம் தொடக்கம்

இந்தியா முழுவதும் அப்போலோ மருத்துவமனைகள் சார்பில் 50 நகரங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.

சென்னையில் பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி, சீயோன் மெட்ரிக். பள்ளி, வானகரம் அப்போலோ மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688119.jpgதமிழகத்துக்கு மத்திய அரசு குறைந்த அளவிலேயே கரோனா தடுப்பூசி அனுப்புகிறது: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகார்

சென்னை பெரியமேட்டில் உள்ளமத்திய அரசின் மருந்து கிடங்கிலிருந்து 2.50 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பெற்றுக் கொண்டார். அப்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் 3 நாட்கள் தொடர்ந்து தடுப்பூசி இல்லாத நிலையில், மத்திய அரசிடம் முதல்வர் பேசி வந்தார். இதைத்தொடர்ந்து பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்து கிடங்கில் இருந்து 2.50 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுவாக ஹைதராபாத், புனே போன்ற பகுதிகளில் இருந்துதான் சென்னைக்கு தடுப்பூசி வரும். ஆனால் அவசரத்துக்கு இங்குள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியதால், துறையின் அலுவலர்கள் இங்கிருந்து தடுப்பூசிகளை எடுத்து தமிழகம் முழுவதும் அனுப்புவதற்கான பணிகளை செய்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688120.jpgதீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும்: சென்னை ஐஐடி-க்கு வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தல்

நாட்டில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிப்பதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் சென்னை ஐஐடி போன்ற நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ஐஐடியில் இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சு வீடுஉருவாக்கப்பட்டுள்ளது. அதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று பார்வையிட்டார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688121.jpgஆவினில் முறைகேடான பணி நியமனங்கள் குறித்து விசாரணை: பால்வளத் துறை அமைச்சர் நாசர் உறுதி

ஆவினில் நடைபெற்ற முறைகேடான பணி நியமனங்கள் குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

ஆவின் நிறுவனம் தொடர்பாக அமைச்சர் நாசர் தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688122.jpgபெரியார் பல்கலை. துணைவேந்தராக ஆர்.ஜெகநாதன் நியமனம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு

தமிழக ஆளுநர்மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் ஆர் ஜெகநாதனைபல்கலைக்கழக வேந்தரும், தமிழகஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். ஜெகநாதன்பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார்.

பேராசிரியர் ஜெகநாதன் 39 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் டீன் ஆகவும், வேளாண் வானிலை துறை தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். பல்கலைக்கழக கல்விக்குழு தலைவராகவும், உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688135.jpgதமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688140.jpgதந்தை கருணாநிதி தொடங்கி வைத்த ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோடியாவது காரை அறிமுகம் செய்தார் மகன் மு.க.ஸ்டாலின்

தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் கார் நிறுவனம் பல்வேறு வகையான கார்களை தயாரித்து உலகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவிலும் இதன் கிளைகள் அமைந்துள்ள நிலையில், கடந்த 1996-ம்ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக வெளிநாட்டுக் கார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் கால் பதித்தது. அப்போது முதல்வராக இருந்தவர் கருணாநிதி. மத்திய அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் முரசொலிமாறன்.

இவர்களின் தீவிர முயற்சியால் 1996-ம் ஆண்டிலேயே ரூ.3,500கோடி என்ற பெரிய அளவு முதலீட்டில் சென்னை ஸ்ரீபெரும்புதூரைஅடுத்த இருங்காட்டுக்கோட்டையில் அமைந்தது ஹூண்டாய் கார்தயாரிப்பு தொழிற்சாலை. இதற்காக 500 ஏக்கர் நிலம் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688143.jpgகரோனா ஊரடங்கில் கடந்த 52 நாட்களில் 3 ஆயிரம் பேருக்கு தினமும் 2 வேளை உணவு விநியோகம்: மனநிறைவு தருவதாக கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் உருக்கம்

கரோனா ஊரடங்கில் கடந்த 52 நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேருக்கு 2 வேளை இலவச உணவு வழங்கியது மனநிறைவு தருவதாக கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

சிறப்பான பணி மற்றும் மனித நேயம் கொண்ட போலீஸ் அதிகாரி என பெயர் பெற்றவர் தமிழக காவல்துறையின் கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ். 2017-ம் ஆண்டு சென்னை காவல்துறை ஆணையராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் பணி நிறைவு செய் தவர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, June 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687611.jpgமதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே கலைஞர் நினைவு நூலகம் அமைய வாய்ப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் அன்று முதல்வர் ஸ்டாலின், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் ரூ.70 கோடியில் 2 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்டமாக கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

அதற்காக, மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நிலம், உலக தமிழ்ச் சங்க வளாகம் உள்ளிட்ட 6 இடங்கள் பரிசீலனையில் உள்ளன. தற்போது வரை நூலகம் அமைக்கப்படும் இடம் அறிவிக்கப்படவில்லை. அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு ஆகியோர் இந்த 6 இடங்களையும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அவர்களிடம் மாணவர்கள், பொதுமக்கள் எளி தாக வந்து செல்லும் வகையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் சரியான தேர்வாக இருக்கும் என்று உள்ளூர் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687513.jpgவேலூர் அரசு அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சி வரலாற்றை விளக்கும் கண்காட்சி

வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சி குறித்த கண்காட்சி 11 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

வேலூர் கோட்டையில் கடந்த 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அதிகாலை நடைபெற்ற சிப்பாய் புரட்சி இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் விதையாக கருதப்படுகிறது. வரும் ஜூலை 10-ம் தேதி சிப்பாய் புரட்சியின் 215-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. அப்போது, சிப்பாய் புரட்சியில் உயிரிழந்த 300-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மக்கான் பகுதியில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687630.jpgவண்டலூரில் யானைகளுக்கு கரோனா பாதிப்பு இல்லை

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பூங்காவில் 11 சிங்கங்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 3-ம் தேதி உறுதியானது. இதையடுத்து, பூங்காவில் உள்ள யானைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்ய்பபட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687631.jpgகிராமப்புற தொழில் முனைவோர் கடனுதவி திட்டத்தில் 656 பயனாளிகளுக்கு ரூ.1.49 கோடி கடன்: ஊரக தொழில் துறை அமைச்சர் வழங்கினார்

திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராமப்புற தொழில் முனைவோர் கடன் உதவி திட்டத்தில் 656 பயனாளிகளுக்கு ரூ.1.49 கோடி மதிப்பிலான கடனுதவிகளை, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் கிராமப்புற தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் கடன் உதவி மற்றும் பல்வேறு அரசுத் துறை சார்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் நேற்று நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687632.jpg‘தூய்மை திருவள்ளூர்’ திட்டத்தில் கூடுதலாக 120 டன் குப்பை அகற்றம்: பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

ஆவின் பால் உபபொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.

திருவள்ளூரில் நெடுஞ்சாலை கள், சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பையால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டைத் தடுக்கும் வகையில் `தூய்மை திருவள்ளூர்’ திட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதன் முதல்கட்டமாக ஜூலை 4-ம் தேதி வரைசாலையோரங்களில் குப்பையைஅகற்றும் பணிகள் தொடங்கப்பட் டுள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687633.jpgரேஷன் கடைகளில் விற்பனையாளர் இல்லாததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க தவிக்கும் மக்கள்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் மற்றும் புதுப்பட்டினம் மீனவக் குப்பம், வாயலூர் பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்காக ரேஷன் கடைகள் அமைந்துள்ளன. இவற்றில் கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், புதுப்பட்டினம் தவிர பிற கடைகளில் விற்பனையாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் புதுப்பட்டினம் ரேஷன் கடை விற்பனையாளர், மீனவக் குப்பம் மற்றும் சதுரங்கப்பட்டினம் கடைகளை கூடுதலாக கவனிக்கும் நிலை உள்ளது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடைகளை திறக்கும்போது, கிராம மக்கள் அனைவரும் பொருட்கள் வாங்க ஒரே நேரத்தில் கூடுவதால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687634.jpgஉத்திரமேரூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஆய்வு

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்துசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.

உத்திரமேரூர் அருகே உள்ள களியாம்பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் குழந்தைகள் பாதுகாப்பகத்தில் 43 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687636.jpgஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் உத்திரமேரூர் ஏரி: பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்குமா?

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான உத்திரமேரூர் ஏரி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது. ஏற்கெனவே இந்த ஏரிக்கான நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், தற்போது ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியும் ஆக்கிரமிக்கப்படுவது அந்தப் பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரமேரூர் பகுதி மக்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் பிரதான தொழிலாககொண்டவர்கள். இந்த ஊரில் உள்ள பெரிய ஏரியானது 5,736ஏக்கர் பாசன பரப்பை கொண்டது. இதனால் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687637.jpgதாம்பரம் அருகே செம்பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: இறப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை

தாம்பரம் அருகே செம்பாக்கம் ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.இந்த ஏரியில் விஷம் கலக்கப்பட்டதா? என மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கத்தில் பெரிய ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதந்தது நேற்று தெரியவந்தது. இதுகுறித்து மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துர்நாற்றம் வீசுவதால் இறந்த மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687639.jpgமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் மத்திய சிறைக்கு திடீர் மாற்றம்

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீஸார் கடந்த 20-ம் தேதி கைது செய்தனர்.

இவர் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மணிகண்டனுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687641.jpgதொழில் நிறுவன ஊழியர்கள் - கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தல்

தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட துணை சுகாதாரத் துறை இயக்குநர்கள், சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி ஆகியோருக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687643.jpgசிவசங்கர் பாபாவை பள்ளிக்கு அழைத்து வந்து விசாரணை

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில், சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் சிவசங்கர் பாபா அத்துமீறி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கடந்த 16-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687644.jpgஅறநிலையத் துறையில் உள்ள தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

இந்து சமய அறநிலையத் துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கோயிலில் நடக்கும் அன்னதான திட்டம், தூய்மைப் பணிகள் மற்றும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பன குறித்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687646.jpgஎஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்த 3-வது கொள்ளையன் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட, 3-வது கொள்ளையனும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.

சென்னையில் வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், தரமணி, பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களை குறிவைத்து கும்பல் ஒன்று நூதன முறையில் பணம் கொள்ளையடித்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687647.jpgரூ.50 லட்சத்தில் கரோனா தடுப்பூசி வாகனம்: மாநகராட்சிக்கு மெட்ராஸ் ரோட்டரி சங்கம் வழங்கியது

மெட்ராஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனம் சென்னை மாநகராட்சியிடம் நேற்று வழங்கப்பட்டது.

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத் தலைவர் கபில் சித்தலே, நடமாடும் தடுப்பூசி வாகனத்தை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கினார். பின்னர், அந்த வாகனத்தின் சேவையை ஆணையர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687678.jpgகோவையில் குழந்தைகளை கொன்ற குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்தவர் சைலேந்திரபாபு

தமிழக காவல்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சி.சைலேந்திரபாபு, 2010-ம் ஆண்டு கோவையில் மாநகர ஆணையராக இருந்தபோது குழந்தைகளை கொலை செய்த குற்றவாளியை அதிரடியாக என்கவுன்ட்டர் செய்தவர் ஆவார். அப்போது இந்த விவகாரம் மாநில அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687681.jpgகூடங்குளத்தில் ரூ.49,621 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது; 5, 6-வது அணு உலை கட்டும் பணி தொடக்கம்: 2027-ல் மின்உற்பத்தி தொடங்க திட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 மற்றும்6-வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் பூமிபூஜையுடன் நேற்று தொடங்கின.ரூ.49,621 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்த அணுஉலைகளில் 2027-28ல் மின்உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் முதல் அணு உலையில் 2013-ம் ஆண்டு அக்.22-ம் தேதியும், 2-வது அணு உலையில் 2016-ம் ஆண்டு அக்.15-ம் தேதியும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதன்மூலம் தமிழகத்துக்கு 950 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.29-க்கு விற்கப்படுகிறது. தற்போது முதல் உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2-வது அணு உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/3jodgyR மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

வெப்பச் சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

ஜூலை 1, 2-ல் சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். பிற வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687692.jpgசென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை.யில் டெல்டா பிளஸ் ஆய்வகம்: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டெல்டா பிளஸ் கரோனா வைரஸை கண்டறிவதற்கான ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

டெல்டா பிளஸ் வகை கரோனா வைரஸ் பரிசோதனைக்கான ஆய்வகம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணைவேந்தர் சுதா சேஷய்யன், பதிவாளர் அஸ்வத்நாராயணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687680.jpgபேருந்து கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி

டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்றுபோக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழக பேருந்துகளில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறளை தெளிவுரையுடன் பதிவுசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பேருந்திலும் வெவ்வேறு திருக்குறள் இடம்பெற்றிருக்கும். தற்போது போக்குவரத்துத் துறை ரூ.31 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687682.jpgவெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்த 2 ஆயிரம் நெல் மூட்டை பறிமுதல்: 7 பேர் கைது; 7 லாரிகள் பறிமுதல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் லாரிகளில் நெல் மூட்டைகளை கொண்டு வந்து, கொள்முதல் நிலையப் பணியாளர்கள் துணையுடன் விற்பனை செய்வதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு, வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை கண்காணித்து தடுக்கும் வகையில், துணை காவல் கண்காணிப்பாளர் நல்லு தலைமையிலான குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர், தஞ்சாவூர் மாவட்ட எல்லைகளில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687685.jpgமுன்னாள் அமைச்சருக்கு கரோனா தொற்று

முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மாவட்ட அதிமுகச் செயலருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருத்துவர்களின் ஆலோசனைப்படி எனது இல்லத்தில் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/30/large/687713.jpgஇந்தியா மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்தால் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக அது இருக்காது என்பதை உலக நாடுகளுக்கு நாம் உணர்த்த வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய நூலின் தமிழாக்கம் வெளியீட்டு விழாவில் ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி கருத்து

இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தால் அது எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உலக நாடுகளுக்கு நாம் உணர்த்த வேண்டும் என்று ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழகத்தைச் சேர்ந்தவர். வெளியுறவுத் துறை செயலாளராகவும் பணியாற்றியவர். அந்த வகையில் வெளியுறவுத் துறையில் இந்தியாவுக்கு உள்ள சவால்களை ஆராய்ந்து ‘The India Way -Strategies for an Uncertain World’ என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, June 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/29/large/687363.jpgதேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதியின்படி உடற்பயிற்சி கூடத்துக்கு ரூ.2.5 லட்சத்தில் உபகரணங்களை வழங்கிய கமல்ஹாசன்

சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிபடி, கோவையில் உடற்பயிற்சி கூடத்துக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வழங்கினார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், காந்திபார்க் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அங்கு பொதுமக்கள் பயன்படுத்திவரும் உடற்பயிற்சி கூடத்துக்கு தேவையான உபகரணங்களை வாங்கித் தர வேண்டும் என உடற்பயிற்சி செய்வோர் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக கமல்ஹாசன் உறுதியளித்தார். இந்நிலையில், தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும், அந்த உடற் பயிற்சி கூடத்துக்கு உபகரணங்களை கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/29/large/687375.jpg‘நீட்’ பாதிப்பை கண்டறிய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து நீதிமன்றத்தில் பாஜக வழக்கு

ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்துஅறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதற்கு தடை விதிக்க கோரிதமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/29/large/687376.jpgவிதிமீறிய மனைப் பிரிவு, கட்டிடத்துக்கு அனுமதி இல்லை: அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்

தமிழகத்தில் இனிமேல் விதிமீறிய கட்டிடங்கள், மனைப் பிரிவுகளுக்கு அனுமதி கிடையாது என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

வீட்டுவசதித் துறையின் கீழ் நடந்து வரும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில், அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/29/large/687377.jpgடெல்டா பிளஸ் கரோனா தொற்றால் 10 பேர் பாதிப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் டெல்டா பிளஸ் வகைகரோனா தொற்றால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கிய 50 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...