Sunday, July 31, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/01/large/833896.jpgஎன்எல்சியில் 299 பொறியாளர் நியமனம்; ஒருவர்கூட தமிழர் இல்லை என்பது வருத்தமளிக்கிறது: கே.எஸ்.அழகிரி ஆதங்கம்

கள்ளக்குறிச்சி: நெய்வேலி என்எல்சியில் 299 பொறியாளர்கள் புதிதாக நியமன செய்யப்படுவதில், ஒருவர்கூட தமிழர் இல்லை என்பது தனக்கு வருத்தமளிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/01/large/833801.jpgஆக.7-ல் கருணாநிதி நினைவு நாளில் சென்னையில் நடக்கும் பன்னாட்டு மாரத்தான் போட்டி; 40 ஆயிரம் பேர் பங்கேற்பர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: 'கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி' ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிக்கான இறுதிப் பதிவை வேளச்சேரியில் நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.அரவிந்த்ரமேஷ், மண்டலக் குழுத் தலைவர்பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/01/large/833932.jpgகொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் கவிஞர் முருகேஷுக்கு ‘பால சாகித்ய புரஸ்கார்’

சென்னை: கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் கவிஞர் மு.முருகேஷுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டது.

மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் எழுதப்படும் சிறந்த சிறுவர் இலக்கிய நூல்களுக்கு ‘பால சாகித்ய அகாடமி விருது’ மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்து வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/01/large/833934.jpgஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இரவில் மலரும் பிரம்ம கமலப்பூ: திருப்பூரில் கண்டு ரசித்த பொதுமக்கள்

திருப்பூர்: திருப்பூரில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இரவில் மலரும் பிரம்ம கமலப் பூவை, பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்துச் சென்றனர்.

திருப்பூர் போயம்பாளையம் கங்கா நகரில் வசிப்பவர் அஸ்வின்.இவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், இரவில் மலரும்பிரம்ம கமலப் பூ நேற்று முன்தினம்இரவு மலர்ந்தது. இது 3 விதமானஇதழ்களைக் கொண்டு வெண்மையான நிறத்தில் அழகாக காணப்பட்டது. பொதுவாக இந்த மலர் ஜூலை மாதத்தில் இரவில் மலர்ந்து,சில மணி நேரங்களில் குவிந்துவிடும். இந்த பூவை, ‘நிஷாகந்தி’ என்றும் அழைப்பர். இந்த அபூர்வ வகை பூவை, அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான குழந்தைகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/01/large/833927.jpgகாவல் துறையில் அனைவருக்கும் பதக்கம்: குடியரசுத் தலைவர் கொடி பெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: குடியரசுத் தலைவர் கொடியை பெறும் நிகழ்வை முன்னிட்டு, டிஜிபி முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழக அரசு காவல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று நலத் திட்டங்களை நிறைவேற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி பெறும் விழா, சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்று, குடியரசுத் தலைவர் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாயிலாக தமிழக காவல்துறைக்கு வழங்கினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/31/large/833563.jpgடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி: காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகிய தமிழ் வழிக் கல்வி மாணவி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகி உள்ளார்.

வடவாளம் ஊராட்சி கிழக்கு செட்டியாபட்டியைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மனைவி வீரம்மாள். இவர்கள், உள்ளூரில் டீக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ரேவதி, வனிதா, பவானியா, திலகா ஆகிய 4 மகள்கள் உள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, July 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/31/large/833475.jpgபெரும்பாலான மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

31-ம் தேதி (இன்று) கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, ஈரோடு, கரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/31/large/833476.jpgமத்திய அரசுடன் இணைந்து செயல்படும் தமிழகம் - சிறந்த செயல்பாடு என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாராட்டு

சென்னை: கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் தமிழகம் மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நன்றாகவே செயல்படுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் மத்திய தகவல், ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/31/large/833478.jpgகன்னியாகுமரி - சென்னை உட்பட 23 ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை: கன்னியாகுமரி - சென்னை விரைவு ரயில் உட்பட 23 ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு ரயில்களில் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், 23 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/PrQJ2wf கோடி பேருக்கு வேலை இல்லை என்பதா? - யெச்சூரிக்கு பாஜக துணைத் தலைவர் தி.நாராயணன் கண்டனம்

சென்னை: நாடு முழுவதும் 22.05 கோடி பேருக்கு வேலையே இல்லை என்பது போன்ற மாயையை சீதாராம் யெச்சூரி போன்ற தலைவர்கள் உருவாக்க நினைப்பது மோசடி வேலை என்று தமிழக பாஜக துணைத் தலைவர் தி.நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுப் பணிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், பணி கிடைத்தவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம் சமீபத்தில் வெளியானது. இதை சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘கடந்த 7 ஆண்டுகளில் வேலைக்காக விண்ணப்பித்தோர் 22.05 கோடி பேர். ஆனால், வேலை கிடைத்ததோ 7.20 லட்சம் பேருக்கு மட்டுமே. இளைய தலைமுறையினரின் வாழ்வை, திறமையற்ற மோடி அரசு அழிக்கிறது’ என்று தெரிவித்திருந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/31/large/833493.jpgதடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்ததாக ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவரிடம் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை

வேலூர்/ஆம்பூர்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்ததாக, ஆம்பூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரிடம் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவைச் சேர்ந்தவர் மிர் அனாஸ் அலி (22). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, July 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/30/large/833086.jpg‘நீங்கதான் ரியல் சூப்பர் ஸ்டார்’ - பாதுகாப்பு கொடுத்த போலீஸாரை வீட்டுக்கு அழைத்து ரஜினி பாராட்டு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு தன்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போலீஸாரை நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டுக்கு நேரில் அழைத்து ‘நீங்கதான் ரியல் சூப்பர் ஸ்டார்’ என்று பாராட்டினார்.

மாமல்லபுரத்தில் நடக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 28-ம் தேதி மாலை நடைபெற்றது. போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள், பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர், வீராங்கனைகள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/30/large/833079.jpgஅப்துல் கலாமின் அறிவியல் சிந்தனைகள் எல்லா தலைமுறைக்கும் ஏற்றவை - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

சென்னை: இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவைப் போற்றும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணையவழி சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில், இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், மூத்த விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு இருவரும் பங்கேற்றனர்.

இக்கலந்துரையாடலில் அவர்கள் பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/30/large/833076.jpgசென்னையில் புலிகள் உச்சி மாநாடு: முதல்வர் தகவல்

சென்னை: சென்னையில், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு அக்டோபர் மாதம் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜூலை 29-ம்தேதி உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள வங்கப் புலிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி, அதாவது 3,346 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. புலிகள் கணக்கெடுப்பு அடிப்படையில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/30/large/832817.jpg“எனது உடல்நலத்தை விசாரித்தார்” - பிரதமர் உடனான சந்திப்பு குறித்து ஓபிஎஸ்

சென்னை: இரண்டு நாள் தமிழக சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு அகமதாபாத் திரும்பும் பிரதமர் மோடியை வழியனுப்பும் நிகழ்வில் ஓபிஎஸ் கலந்துகொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்திருந்தார். சென்னை வந்த பிரதமரை தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி,கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் வரவேற்றனர். பாஜக சார்பில் வானதி சீனிவாசன் வரவேற்றார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து வரவேற்றிருந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/29/large/832811.jpgகுமரியில் மணப்பெண், அமெரிக்காவில் மணமகன்: வீடியோ கால் திருமணத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரை: கன்னியாகுமரி பெண்ணும், அமெரிக்க ஆணும் வீடியோ காலில் திருமணம் செய்ய அனுமதி வழங்கி, அவர்களின் திருமணத்தை சிறப்பு திருமண பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்றிதழ் வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வாஷ்மி சுதர்ஷினி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நானும் அமெரிக்காவை சேர்ந்த ராகுல் எல்.மதுவும் காதலித்தோம். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். திருமணத்துக்காக ராகுல் இந்தியா வந்தார். ஆனால் காரணம் இல்லாமல் எங்களுக்கு திருமணம் செய்து வைக்க மணவாளக்குறிச்சி சார் பதிவாளர் மறுத்துவிட்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/29/large/832814.jpg“உங்களுக்கு எனது வாழ்த்துகள், எஞ்ஜாய்” - அண்ணா பல்கலை., மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பிரதமர்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இடநெருக்கடி காரணமாக வேறு இடங்களில் அமரவைக்கப்பட்ட மாணவர்களை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் விழாவில் பேசிய பிரதமர், "இந்தப் பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கூட பங்கேற்றிருக்கிறார். இந்த நாட்டிற்காக உழைப்பதிலும், கனவு காண்பதிலும் அவரின் சுவடுகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்றிருந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, July 28, 2022

https://ift.tt/TAgnyJw ஆண்டுகள் பழமையான செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு - தமிழகம் கொண்டுவர போலீஸார் நடவடிக்கை

சென்னை: தமிழகத்திலிருந்து கடத்தி செல்லப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சோழப் பேரரசி செம்பியன் மகாதேவியின் உலோக சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சோழப் பேரரசில் வலிமையான அரசியாகத் திகழ்ந்தவர் செம்பியன் மகாதேவி. ராஜராஜ சோழனின் மூதாதையரான இவர், சோழப் பேரரசில் தவிர்க்க முடியாத சக்தி யாகத் திகழ்ந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/29/large/832724.jpgசென்னையில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் திரண்டு நின்று பிரதமரை வரவேற்றனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை 5.10 மணி அளவில் சென்னை வந்தார். சதுரங்க கட்ட கரை போட்ட வேட்டி, சட்டையை பிரதமர் அணிந்திருந்தார். விமான நிலையத்தில் பிரதமரை தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/29/large/832723.jpgசெஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைத்தார் பிரதமர் - தமிழகத்துக்கும் செஸ்ஸுக்கும் இடையில் வலுவான வரலாற்று தொடர்பு உள்ளதாக பெருமிதம்

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த கோலாகலமான விழாவில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கும் செஸ் போட்டிக்கும் இடையில் வலுவான வரலாற்று தொடர்பு உள்ளது என அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

உலக சதுரங்க கூட்டமைப்பு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அறிவிக்கப்பட்டதும், அதை நடத்தும் உரிமையை பெற்றது தமிழக அரசு. இதையடுத்து, ரூ.100 கோடியை ஒதுக்கி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் போட்டியை நடத்தவதற்காக ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 28-ல் தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/29/large/832374.jpg“நேற்று முதல்வரின் நடத்தை...” - திமுக - பாஜக கூட்டணி கேள்விக்கு அண்ணாமலையின் பதில்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இந்தியாவின் கலாச்சாரத்தை, பெருமையை பறைசாற்றும் விதமாக தமிழக அரசு பயன்படுத்திக்கொண்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். சென்னை நேரு விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்த அவர், ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுத்துவருகிறார். முன்னதாக செஸ் போட்டி தொடக்க விழா முடிந்ததும் ராஜ் பவன் வந்த பிரதமருக்கு ஆளுநர் ஆர்என் ரவி புத்தகம் கொடுத்து வரவேற்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/28/large/832369.jpgகர்ப்பிணியை தொட்டில் கட்டி சிகிச்சைக்கு அழைத்து வந்த திருப்பூர் மலை கிராமத்தினர்: சாலை வசதிக்கு கோரிக்கை

திருப்பூர்: நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வேளையிலும் அவசர மருத்துவத் தேவைக்கு கூட நோயாளிகளை தொட்டில் கட்டி அழைத்து வரும் அவலத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என குழிப்பட்டி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. உடுமலை வனச்சரகத்தில், குழிப்பட்டி, குருமலை, மேல்குருமலை, மாவடப்பு, பூச்சிக்கொட்டாம்பாறை உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/28/large/832366.jpgமுதல்வரின் பட்டு வேட்டி, சட்டை முதல் பிரதமரின் தமிழ் வணக்கம் வரை: செஸ் ஒலிம்பியாட் விழா ஹைலைட்ஸ்

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்வு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கிவைத்தார். இந்த விழாவின் தொடக்கம் முதல் நிறைவு வரையிலான சில முக்கிய நிகழ்வுகளின் ‘ஹைலைட்’ தொகுப்பு:

> தொடக்க விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கிற்கு 87 பேருந்துகளில் பிற்பகல் 3 மணியிலிருந்து வீரர், வீரங்கனைகள் அழைத்து வரப்பட்டனர். வீரர்களை வரவேற்கும் வகையில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு இடங்களில், தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, July 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/28/large/832252.jpgசர்வதேச செஸ் ஒலிம்பியாட் இன்று தொடக்கம் - போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/28/large/832255.jpgதமிழக மாணவர்களுக்கு சூடான பொங்கல், கிச்சடியுடன் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் - அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு சூடான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ரூ.33.56 கோடி நிதியை ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து சமூக நலத்துறை சார்பில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/28/large/832254.jpgதீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா? - ஈரோட்டில் 2 இளைஞர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஈரோடு: அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக பெங்களூருவில் கைது செய்யப்பட்டவர் அளித்த தகவலின்பேரில், ஈரோட்டில் 2 இளைஞர்களிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கியிருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவர் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/28/large/832253.jpg7-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - அப்துல் கலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி

ராமேசுவரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடந்த 2015 ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடந்த கல்லூரி விழாவில் பேசிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட தேசிய நினைவகத்தை 2017-ல் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/27/large/831814.jpgபோலி பாஸ்போர்ட் விவகாரம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

மதுரை: “போலி பாஸ்போர்ட் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பாராட்டுகிறேன். அவர் ஜனநாயக காவலராக இருந்து வருகிறார்” என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

மதுரையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்து உத்தரவு: மதுரை, திருச்சியில் 2019 பிப்.1 முதல் 2019 ஜூன் 30 வரை போலி ஆவணங்கள் மூலம் இலங்கை நபர்களுக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது தொடர்பாக மதுரை கியூ பிராஞ்ச் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/27/large/831802.jpgசீமைக்கருவேலம், யூகலிப்டஸ் மரங்களை அகற்றுவது பேரவசியமாகிறது: சீமான்

சென்னை: "யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்குத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் பெரிதும் வரவேற்கிறேன். சீமைக்கருவேலம், யூகலிப்டஸ் மரங்களை அகற்ற தமிழக அரசு விரைவாக செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. "தமிழக வனப்பகுதிகளிலுள்ள அந்நிய மரங்களை அகற்றக்கோரி தொடரப்பட்டப் பொது வழக்கொன்றில், விரைவாக அவற்றிற்கென செயல்திட்டத்தை வகுக்க வலியுறுத்தியும், யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்குத் தடைவிதித்தும் உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் பெரிதும் வரவேற்கிறேன். ‘மரம் மண்ணின் வரம்; அதனை வளர்ப்பதே மனித அறம்’ எனும் உயரியக் கோட்பாட்டுக்கேற்ப, மரம் வளர்ப்பைப் பெரிதும் ஊக்கப்படுத்தி, அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் நாளும் ஏற்படுத்தி வரும் வேளையில், மரங்களின் பண்புகளுக்கு நேர்மாறானக் குணங்களைக் கொண்டுள்ள யூகலிப்டஸ் மரம், சீமைக்கருவேல மரம் போன்ற அந்நிய மரங்களை இம்மண்ணிலிருந்து அகற்ற வேண்டியதும் பேரவசியமாகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, July 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/27/large/831712.jpgகாய்ச்சல், இதய பாதிப்புக்கான 26 மருந்துகள் தரமற்றவை

சென்னை: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.

கடந்த மாதத்தில் மட்டும் 1,096 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 26 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றில் பெரும்பாலான மருந்துகள் இமாசலப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/27/large/831730.jpgகலாம் ஒரு கனவுக்காரர்! - விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல்

திருவனந்தபுரத்தின் மிக அமைதியான புறநகர் பகுதி. ஒரு குறுகலான தெருவில் அமைந்துள்ள வெள்ளை வீட்டின் பெயர் பலகையில் ‘நம்பி நாராயணன்’ என்ற பெயர். சாதனைகளுக்காக மட்டுமின்றி, சோதனைகளுக்காகவும் தேசத்தின் உதடுகளில் உரக்க உச்சரிக்கப்படும் பெயர் இது. வெளியே மழை தூவும் ஒரு மாலை நேரத்தில், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் சில மணி நேரம் உரையாடினேன். அதில் இருந்து சில துளிகள் இங்கே..

திருவனந்தபுரம் அடுத்த தும்பாவின் மேரி மகதலேனா தேவாலயத்தில், இஸ்ரோ தனது ஆய்வுப் பணியை தொடங்கிய காலத்தில், அப்துல் கலாமுடன் எளிமையான ஆராய்ச்சி கட்டமைப்பில் உங்கள் ஆராய்ச்சியை தொடங்கியவர் நீங்கள். அந்த அனுபவம் பற்றி...

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/27/large/831707.jpgசர்வதேச செஸ் ஒலிம்பியாட் | பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார் - பாதுகாப்பு வளையத்துக்குள் சென்னை மாநகரம்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை சென்னை வருகிறார். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ள காவல் துறையினர், ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 189 நாடுகளைச் சேர்ந்த, 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/27/large/831729.jpgதமிழக காவல்துறையில் புதிய சீருடை ‘லோகோ’அறிமுகம் - காவலர் முதல் டிஜிபி வரை ஒரே அடையாளம்

சென்னை: தமிழக காவல் துறையில் முதல்முறையாக காவலர் முதல் டிஜிபி வரையிலான அனைவரது சீருடையிலும் ஒரே மாதிரியான அடையாள ‘லோகோ’ இடம் பெற உள்ளது.

தமிழ்நாட்டில் காவலர் முதல் டிஜிபி வரை அனைவருக்கும் காக்கி நிறச் சீருடை வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஒவ்வொருவருக்கும், அவரவர் அதிகாரம், அடிப்படைத் தகுதிகளுக்கு ஏற்ப சீருடை அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/26/large/831409.jpgதனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு | 6 கி.மீ வரை உள்ள மாணவர்களை சேர்க்கலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை: மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் 6 கிலோ மீட்டர் தூரம் வரை வசிக்கும் மாணவர்களைச் சேர்க்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர்கள் ஏ.கோபால், டி.சரவணன். இவர்கள் மதுரை சர்வேயர் காலனியில் உள்ள தனியார் பள்ளிகளில் தங்களது மகன்களுக்கு மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் சீட் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/26/large/831401.jpgபதிவாளர் மீதான பாலியல் புகார் எதிரொலி: பெரியார் பல்கலை.யில் கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பதிவாளர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் தொடர் நடவடிக்கையாக பல்கலைக்கழகத்தில் கூடுதலாக புதிய இடங்கள் கண்டறிந்து சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கூறும்போது, ''பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் (பொறுப்பு) கோபியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 48 மணி நேரத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில், பதிவாளர் கோபியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, July 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/26/large/831315.jpgபுதுச்சேரியில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

கோவை: கோவைக்கு கொண்டு வரப்பட்ட, செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்க உள்ளது. இதையொட்டி கடந்த மாதம் 19-ம் தேதி டெல்லி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றி வைத்து, ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பியாட் ஜோதி, புதுச்சேரியில் இருந்து கோவைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/26/large/831314.jpgஅரசு உதவி பெறும் பள்ளி விடுதி அறையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை - சிபிசிஐடி விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பதற்றம் நிலவுவதால் பள்ளி, விடுதி, திருத்தணி அருகே மாணவியின் கிராமம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. திருத்தணி அடுத்ததெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் மகள் சரளா (17), இந்தப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் பள்ளி விடுதியிலேயே தங்கி படித்து வந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/26/large/831313.jpgபழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள நடைபெற்ற டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக ஒட்டன்சத்திரம் – தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழிச் சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்த நிலையில், அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டு அதற்கான ஒப்பந்தம் பழனிசாமியின் உறவினரான ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி – செங்கோட்டை - கொல்லம் நான்குவழிச் சாலையை விரிவுபடுத்தி பலப்படுத்தும் ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம், வெங்கடாஜலபதி அன்ட்கோ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதே நிறுவனத்துக்கு ரூ.200 கோடி மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/25/large/831000.jpg44-வது செஸ் ஒலிம்பியாட் | 28-ம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நாளான வரும் 28-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு வரும் 28ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அந்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு 28-ம் தேதி ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு அரசு முதன்மைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் குறிப்பில் கேட்டுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/25/large/830995.jpgஓபிஎஸ் களமான தேனியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: பிரமாண்ட கூட்டத்தை திரட்டி ‘கெத்து’ காட்ட இபிஎஸ் திட்டம்

மதுரை: ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் முதல் முறையாக ஓபிஎஸ் இல்லாத அதிமுக ஆர்ப்பாட்டம் நாளை நடக்கிறது. மின்கட்டண உயர்வுக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் ஓபிஎஸ்-ஐ மீறி பெரும் கூட்டத்தை திரட்டி தனது செல்வாக்கை நிரூபிக்கவும், சொந்த மாவட்டத்திலே அவருக்கு செல்வாக்கு இல்லை என்பதை காட்டவும் இபிஎஸ் தரப்பினர் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பழனிசாமி அணி அதிமுக சார்பில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசை கண்டித்து இன்று (திங்கள்கிழமை) ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் பார்ப்பதற்கு திமுக அரசை கண்டித்து நடப்பதாக அறிவிக்கப்பட்டாலும், பெரும் கூட்டத்தை திரட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கள் பக்கம்தான் கட்சியும், தொண்டர்களும் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கவே பழனிசாமி ஏற்பாடுகள் செய்திருந்தாக பேச்சு எழுந்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/25/large/830997.jpgமுன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உட்பட 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்: இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், கட்சியின் விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் ராஜேந்திரேன் உள்பட 15 பேரை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கட்சியின் கொள்கைக்கும், குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் ஒழுக்கமுறை குலையும் வகையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால்,

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, July 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/25/large/830768.jpgமக்கள் வரிப் பணத்தில் கருணாநிதிக்கு பேனா வடிவ நினைவு சின்னம் அமைப்பதா? - விஜயகாந்த் கேள்வி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மக்கள் வரிப் பணத்தில் பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, வேலைவாய்ப்பின்மை என தமிழக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/25/large/830897.jpgதமிழகத்தில் ஜூலை 26, 27-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 26, 27-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், தமிழகப் பகுதிகளில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, நேற்று முன்தினம் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்தது. அடுத்த சில தினங்களுக்கும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/25/large/830771.jpgசென்னை தியாகராய நகர் பனகல் பூங்காவில் மெட்ரோ ரயில் சுரங்க நிலைய பணிகள் தீவிரம்

சென்னை: சென்னை தியாகராய நகர் பனகல் பூங்காவில் சுரங்க மெட்ரோ ரயில் நிலைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்தில், ரூ.63 ஆயிரத்து 200 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ., மாதவரம் முதல் - சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ., மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/25/large/830773.jpgசென்னையில் செஸ் ஒலிம்பியாட் சிறப்பு ஓட்டம்: அமைச்சர் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள44-வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வுக்காக சென்னையில் நடைபெற்ற சிறப்பு ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இணைந்து சிறப்பு ஓட்டத்தை நேற்று சென்னையில் நடத்தியது. சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்துகாலை 7 மணிக்கு தொடங்கிய இந்தசிறப்பு ஓட்டம் கலங்கரை விளக்கம் வரை நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/25/large/830907.jpgடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு - ஓர் ஆய்வு

இதோ.. மிகப்பெரிய அளவில் தேர்வு நடத்துவதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொழில்முறை நிபுணத்துவம் மீண்டும் ஒருமுறை ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் - சுமார் 8000 தேர்வு மையங்கள் - கூடுதலாக சுமார் 2,000 சிறப்பு பேருந்துகள் - தேர்வர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத கண்காணிப்பு ஏற்பாடுகள்... தேர்வாணையம், நன்கு திட்டமிட்டு செம்மையாக செயல்பட்டு இருக்கிறது. பாராட்டுகள்.

சில குறைகள் இருக்கத்தான் செய்தன. சில மையங்களில் தேர்வர்கள் உடன் வந்த பெற்றோர் / பாதுகாவலர் காத்திருக்க இடம், குடிநீர் கழிப்பறை வசதிகள் அறவே இல்லை. வண்டிகள் நிறுத்தும் இடமும் போதுமான அளவுக்கு இல்லை; சில மையங்கள் பேருந்துபோக்குவரத்தில் இருந்து மிகவும் தள்ளி, ஒதுக்குப்புறமாக இருந்தன. காலை 9 மணிக்கே மையத்துக்கு வர இயலாமல் சில தேர்வர்கள் தேர்வு எழுத இயலாமல் போயிற்று.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/24/large/830554.jpg“கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்தை எதிர்க்கவில்லை. ஆனால்...” - பூவுலகின் நண்பர்கள் விளக்கம்

சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் பேனா நினைவுச் சின்னத்தை எதிர்க்கவில்லை. இருந்தாலும் அதனை இப்படி செய்யலாம் என தங்களது தரப்பில் விளக்கம் கொடுத்துள்ளது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் கடலில் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல். அதற்கு தமிழ்நாட்டு மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்ததாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முன்னதாக தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, July 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/23/large/830263.jpgகடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவைக் கைவிடுக: பூவுலகின் நண்பர்கள் அடுக்கும் காரணங்கள்

சென்னை: “முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுச் சின்னங்களில் மட்டும் வாழ்ந்துவிடுவதில்லை. அதனால் அவருக்கு கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்” என்று பூவுலகில் நண்பர்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தமிழ் இலக்கியப் பணிகளை போற்றும் வகையில் அவரது நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, July 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/23/large/830095.jpgதிரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியார் பாடல்களின் இசைக் கச்சேரி; சென்னையில் இன்று நடக்கிறது: அனுமதி இலவசம்

சென்னை: திரைப்படங்களில் இடம்பெற்ற மகாகவி பாரதியாரின் பாடல்களை திரைப்படப் பின்னணி பாடகர்கள் பாடும் இசைக் கச்சேரி சென்னையில் இன்று நடக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்பதால் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என தமிழக அரசின் செய்தித்துறை அழைப்பு விடுத்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/23/large/830184.jpgஇபிஎஸ் கடிதத்தை நிராகரிக்க வேண்டும் - மக்களவை தலைவருக்கு ஓ.பி.ரவீந்திரநாத் கடிதம்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ஓபிஎஸ், அவரது மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி, ஜெயபிரதீப் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கினார்.

இந்நிலையில், ரவீந்திரநாத்தின் அதிமுக எம்பி அந்தஸ்தை ரத்துசெய்யுமாறு மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு இபிஎஸ் அண்மையில் கடிதம் எழுதி இருந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...