Saturday, December 31, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/01/large/922851.jpgதமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க ஜன.31 வரை காலக்கெடு நீட்டிப்பு

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை 1.62 கோடி மின் நுகர்வோர், தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சிறப்பு முகாம் மூலம் 87.91 லட்சம் பேரும், ஆன்லைன் மூலம் 74.67 லட்சம் பேரும் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 77.53 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 50.93 சதவீதம் பேரும் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/01/large/922754.jpgதமிழக விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: அமைச்சர் உதயநிதி

சென்னை: சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில், தென்னிந்திய அளவில் பல்கலை.களுக்கு இடையிலான மகளிர் ஹாக்கிப் போட்டிகள் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. இதில் 30 பல்கலை. அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் கர்நாடக மாநிலம் மைசூர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கேரள மாநில கோழிக்கோடு பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/01/large/922850.jpgபோராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு - டிடிவி தினகரன், சீமான் நேரில் சந்தித்து ஆதரவு

சென்னை: சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை டிடிவி தினகரன், சீமான் ஆகியோர் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர். ஊதிய முரண்பாடு களையப்படும் என்ற அறிவிப்பு வரும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/01/large/922853.jpgஒருங்கிணைப்பாளர்கள் பெயரில் தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பிய அதிமுக

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பெயரில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அனுப்பிய கடிதத்தை, அதிமுக தலைமை அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது.

அதிமுகவில் தேர்தல் நடத்தப்பட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தொடர்பான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/01/large/922854.jpgபாமக இளைஞர் அணி தலைவர் ஜிகேஎம் தமிழ்க்குமரன் திடீர் விலகல்

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து ஜிகேஎம் தமிழ்க்குமரன் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

பாமகவில் இளைஞர் அணித் தலைவராக ஜிகேஎம் தமிழ்க்குமரனை நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். கட்சியின் கவுரவத் தலைவரான ஜி.கே.மணியின் மகன்தான் தமிழ்க்குமரன். இந்த நியமனத்தை ராமதாஸ் தன்னிச்சையாக செய்திருப்பதாகவும், இதனால் ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/01/large/922855.jpgகரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை - அரசாணைக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை: கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க,மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாகவும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம் ரூ,14 ஆயிரம் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்களுக்கு, ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் பணி நீட்டிப்பு செய்யும் ஆணை வழங்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/01/large/922883.jpgமதுரை, ராமேசுவரம், திருவண்ணாமலை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்

சென்னை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை, தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலர் பி.சந்தரமோகன், அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் பங்கேற்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/01/large/922501.jpgபிறந்தது 2023 - நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது

சென்னை: நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் வானவேடிக்கையுடன் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, December 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/31/large/922379.jpgமழையால் பாதிக்கப்பட்ட 48,593 விவசாயிகளுக்கு ரூ.50.89 கோடி நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த அக்.1 முதல் டிச.4-ம் தேதி வரை கனமழையால் பல மாவட்டங்களில் அதிக அளவில் பயிர்ச் சேதம் ஏற்பட்டது. வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நவ.14-ம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர்ச்சேதம் கணக்கிடப்பட்டது. இதன் அடிப்படையில், மிக அதிகமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 32,533 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த மாவட்டத்தில் 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.43.92 கோடி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/eSuoC5H புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1.25 கோடி ஆதார மானிய நிதி: தொழில்முனைவோருக்கான கையேட்டையும் வெளியிட்டார் முதல்வர்

சென்னை: பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை தொகுப்பு கையேட்டை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், புத்தொழில் ஆதார மானிய நிதியை வழங்கியதுடன், தொழில் முனைவோர்களுக்கான ‘வழிகாட்டி மென்பொருள்’ இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகைத் தொகுப்புக்கான அரசாணையில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள் அடங்கிய கையேட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/31/large/922414.jpgமின்இணைப்புடன் ஆதார் இணைப்பு | அவகாசம் இன்றுடன் நிறைவு - மேலும் நீட்டிக்க கோரிக்கை

சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், காலஅவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என மின்நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மின்நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நவ.15-ம் தேதி தொடங்கியது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/30/large/922046.jpgமதுரை அருகே ஒற்றுமையை உணர்த்திய விழா - மாற்று மதத்தினருடன் பள்ளிவாசல் திறப்பு

கொட்டாம்பட்டி: மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகிலுள்ளது மனப்பச்சேரி கிராமம். இக்கிராமத்தில் அனைத்து மதத்தினர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

இங்கு சுமார் 400 ஆண்டு பழமையான பள்ளி வாசல் ஒன்று உள்ளது. இப்பள்ளிவாசலை கிராமத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்புடன் புதுப்பிக்க, இஸ்லாமியர்கள் முடிவெடுத்தனர். இதன்படி, 3 ஆண்டுக்கு முன்பு பள்ளிவாசல் புதுப்பிக்கும் பணியை தொடங்கினர். கிராமத்த்திலுள்ள இந்துக்கள் தங்களால் முடிந்த பணம், பொருள் , உழைப்பு உதவிகளுடன் பள்ளிவாசல் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்தது

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/30/large/922042.jpgதேர்தல் ஜனநாயகத்தை 'ஆர்விஎம்' இயந்திர வாக்குப்பதிவு முறை கேலிக்கூத்தாகிவிடும்: திருமாவளவன்

சென்னை: "ஆர்விஎம் வாக்குப்பதிவு முறை தேவையற்றது. அந்தமுறையை அறிமுகப்படுத்துவது, தேர்தல் ஜனநாயகத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கேலி கூத்தாகிவிடும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "ஆர்விஎம் வாக்குப்பதிவு முறை தேவையற்றது. அந்தமுறையை அறிமுகப்படுத்துவது, தேர்தல் ஜனநாயகத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கேலி கூத்தாகிவிடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, December 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/30/large/921961.jpgதமிழகம், புதுச்சேரியில் 3 நாட்கள் வறண்ட வானிலை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (டிச. 30) தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/30/large/921962.jpgவாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க 61 சதவீதம் பேர் விண்ணப்பம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்காக இதுவரை 61 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள், இறந்தவர் பெயர்கள் நீக்கம் இவற்றுக்காக ஆதார் எண்ணை இணைக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக 6-பி என்ற படிவம் வெளியிடப்பட்டது. அதை பூர்த்தி செய்து, வீட்டுக்கு வரும் வாக்காளர் பதிவு அலுவலரிடம் வழங்கலாம் என்றும், தேசிய வாக்காளர் பதிவு இணையதளத்தின் மூலம் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வாக்காளர் பட்டியலுடன், ஆதார் இணைப்புக்கு வாக்காளர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/30/large/921963.jpgசிறப்பு ரயில்கள் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது - முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் குறிப்பிட்ட சில நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - திருநெல்வேலி, தாம்பரம் - நாகர்கோவில் உட்பட 5 சிறப்பு ரயில்கள் இரு மார்க்கமாகவும் அறிவிக்கப்பட்டன. இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/30/large/921964.jpgபுத்தாண்டு கொண்டாட்டத்தில் போதை பொருள், ஆபாச நடனம் கூடாது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை வேப்பேரியில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் மகிழ்ச்சியுடன் அமைவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் துறை செய்துள்ளது. பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊர்காவல் படையைச் சேர்ந்த 1,500 பேரும் பணியாற்றுவார்கள். 368 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற உள்ளது.

மது போதையில் வாகனம் ஓட்டினாலோ, அதிவேகமாக வாகனங்களை இயக்கினாலோ வழக்குப் பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். மது போதையில் விபத்து உயிரிழப்பை ஏற்படுத்தினால் கொலை வழக்குக்கு நிகரான பிரிவில்வழக்கு பதியப்படும். 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை பாயும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/30/large/921955.jpgதிருச்சி டிஎன்பிஎல் நிறுவனத்தில் ரூ.1,385 கோடியில் நவீன வன்மரக் கூழ் ஆலை

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேஉள்ள மொண்டிப்பட்டியில் செயல்படும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ரூ.1,385 கோடி மதிப்பிலான நவீன வன்மரக் கூழ் ஆலை மற்றும் திருச்சி மாவட்டத்தின் முதல் சிப்காட் தொழிற்பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் (டிஎன்பிஎல்) அலகு 2-ல் காகித அட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்குத் தேவையான காகிதக் கூழை, வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, அதே வளாகத்தில் உற்பத்தி செய்ய ரூ.2,520 கோடி மதிப்பிலான விரிவாக்கத் திட்டத்தை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/29/large/921569.jpgமதுரை ரயில் நிலையத்தில் ரூ.347.47 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்

மதுரை: ரயில் நிலையங்களை சீரமைப்பதை தெற்கு ரயில்வே அதிமுக்கிய பணியாக மேற்கொண்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் மொததமாக 9 ரயில் நிலையங்கள் மறு உருவாக்கம் பெற இருக்கின்றன. இந்த ஒன்பது ரயில் நிலையங்களில் ஒன்றான மதுரை ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் துவக்கி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.

நிலப்பரப்பு கணக்கெடுப்பு, மண் பரிசோதனை, மரங்கள் மற்றும் போக்குவரத்து கணக்கெடுப்பு அசையும் அசையா சொத்துக்கள் கணக்கெடுப்பு ஆகிய முன்னேற்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. சீரமைப்பு பணிகளுக்காக நிலப்பரப்பில் உள்ள ரயில்வே பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் அலுவலகப் பணிகள், திட்ட மேலாண்மை பணிகள், பணிகள் சம்பந்தப்பட்ட பயனாளர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/30/large/921571.jpgபுத்தாண்டு கொண்டாட்டம் | சென்னை கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், "2023ம் ஆண்டு
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை கருதி டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மெரினா, சாந்தோம், பெசண்ட் நகர், எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய அனைத்து கடற்கரை மணற்பகுதி, கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/29/large/921568.jpgபுதுச்சேரியில் ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் சாலை மறியல் - போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 65 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் 500 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதில் 1,000 ஊழியர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், முறையான ஊதியம் வழங்க வேண்டும், நேரடி பணப்பரிமாற்ற முறையை ரத்து செய்ய வேண்டும், ரேஷன் கடைகளை தொடர்ந்து இயக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பாரதிய புதுச்சேரி நியாயவிலைக்கடை ஊழியர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சுதேசி பஞ்சாலை அருகில் நடைபெற்றது. சங்க தலைவர் முருகானந்தம், பொதுச் செயலாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். 50க்கும் மேற்பட்ட ரேஷன்கடை ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இப்போராட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் சிவா, நேரு எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்று ஆதரவு தந்து பேசினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, December 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/29/large/921463.jpgமக்களவை தேர்தல் வெற்றிக்கு கனவு காண்கிறது பாஜக - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை: தமிழகத்தில் யார் தலைமையிலான கூட்டணியில் இருக்கிறோம் என்றே தெரியாத நிலையில், 2024 மக்களவை தேர்தல் பற்றி பாஜக கனவு காண்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 138-வது ஆண்டு நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை போரூர் லட்சுமி நகரில் மாரத்தான் ஓட்டம், நடைபயணத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் அமைச்சர் கக்கன் சிலையை திறந்துவைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: சுதந்திரப் போராட்ட தியாகியும், காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான பி.கக்கன், எளிமை, நேர்மையில் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/29/large/921479.jpgதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்கள் மழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 29, 30-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில்அடுத்த 48 மணி நேரத்தில் வானம்ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/29/large/921480.jpgபொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் - இன்று முதல் டிக்கெட் முன்பதிவு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட 5 சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (டிச.29) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/29/large/921478.jpgகரோனா | முழு கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சீனாவிலிருந்து மதுரை வந்த பெண், குழந்தை மற்றும் வெளிநாடு சென்று திரும்பிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஆகிய 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், முழு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீனாவிலிருந்து 36 வயதுடைய பெண் ஒருவர், தனது இரு பெண் குழந்தைகளுடன் தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணுக்கும், ஒரு பெண் குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/29/large/921474.jpgபொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பும் சேர்த்து வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நடப்பாண்டு பொங்கலின்போது 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், பொருட்களின் தரம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்ததால், 2023-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு, ரூ.1,000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மட்டும் வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, ரூ.2,357 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/28/large/921156.jpgபுதுச்சேரி | டெங்கு காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு - மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்த நிலையில், முறையான சிச்சை அளிக்கவில்லை என்று கூறி உறவினர்கள், கிராம மக்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். கூட்டுறவு வங்கி ஊழியர். இவரது மனைவி செல்வி(36). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 25-ம் தேதி முதல் செல்வி காய்ச்சலால் அவதிபட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரை அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/28/large/921155.jpgபுதுச்சேரி | அதிகரித்துள்ள ரெஸ்டோ பார் அனுமதி - 'பார்டி' சத்தத்தால் குடியிருப்புவாசிகள் தவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களில் இருந்து எழும் அதிக சத்தத்தால் குடியிருப்புவாசிகள் தவிக்கும் நிலையும் அதற்கான போராட்டங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

புதுச்சேரி நகர பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம், விதவிதமான 400க்கும் மேற்பட்ட மதுக்கடைகள், மது அருந்தும் வசதியுள்ள பார்கள் உள்ளன. தற்போது அடுத்தக்கட்டமாக உணவு சாப்பிடும் ரெஸ்டாரண்டுகள் அனைத்திலும் பார் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளன. அதன்படி, ரெஸ்டாரண்டுகளில் மது அருந்தும் வசதி கொண்டவையாக பல மாற்றப்பட்டு அவை ரெஸ்டோ பார் என்று அழைக்கப்படுகின்றன. கீழ்தளத்தில் ரெஸ்டாரண்டும் மேல்தளத்தில் பார் வைக்கப்படுகின்றன. அத்துடன் பார்ட்டி கொண்டாடும் வகையில் அதிக சத்ததுடன் இசை ஒலிக்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/28/large/921151.jpgபுதுச்சேரியில் பாஜகவுடன் திமுக மறைமுகத் தொடர்பு - அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி: திமுகவின் புகாரை அடுத்து அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் நடப்பது என் ஆர் காங்கிரஸ் -பாஜக அரசா அல்லது திமுக அரசா என்கின்ற சந்தேகம் எழுகிறது என்று புதுச்சேரி அதிமுக தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறுகையில், "மற்ற மாநிலங்கள் போன்று புதுச்சேரி மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள் இல்லாததால் மாநிலத்தினுடைய வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் எந்த முதலமைச்சராக இருந்தாலும் துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து கோப்புகளுக்கு கையெழுத்து பெறும் அடிமை நிலையே தொடர்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, December 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/28/large/920933.jpgஹெல்மெட் அணியாதது தொடர்பாக 13 லட்சம் வழக்குகள் - சிக்னலை மீறியதாக 5 லட்சம் பேருக்கு அபராதம்

சென்னை: சென்னையில் கடந்த 11 மாதங்களில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளின் விவரத்தை சென்னை போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

சாலை விபத்துகளை குறைக்கவும், விபத்து மரணங்களை முற்றிலும் தடுக்கவும் சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்தாதவர்களை, அபராதம் செலுத்த வலியுறுத்தி சென்னையில் 12 கால்சென்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/28/large/921011.jpgசென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்துவரி உயர்வு - 100-க்கும் மேற்பட்ட வழக்குகளின் மீது உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் மாநகராட்சிகளின் தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சிகளில் கடந்த மே 30-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/28/large/921055.jpgஅதிமுக சார்பில் விரைவில் மிகப்பெரிய மாநாடு - மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முழு விவரம்

சென்னை: ‘‘கூட்டணியை தேர்தலின்போது பார்த்துக் கொள்ளலாம், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்குங்கள்’’ என்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். இதுதவிர, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் விரைவில் பெரிய அளவில் மாநாடு நடத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினையில் ஓபிஎஸ், பழனிசாமி அணிகள் தனித்தனியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றன. இதில் ஓபிஎஸ் அணியினரை இணைக்கவே முடியாது என்று பழனிசாமி தரப்பினர்தெரிவித்துவிட்டனர். இந்தச் சூழலில், அதிமுகவின் நிர்வாகரீதியிலான 75மாவட்டங்கள், அணிகள் என 88 மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரை ஓபிஎஸ் நியமித்தார். அதோடு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையும் சமீபத்தில் நடத்தினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/28/large/921058.jpgவழக்கறிஞர்கள் சங்க தேர்தல் | துண்டு பிரசுரம் இல்லை.. அன்பளிப்புகள் இல்லை..!

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் ஜன.9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் நிபந்தனைகளைப் பின்பற்றி கைகுலுக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கங்களில் ஒன்றாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (எம்எச்ஏஏ) உள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சங்கத்தில் சுமார் 17 ஆயிரம் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்க நிர்வாகிகள் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தலைவராக ஜி. மோகனகிருஷ்ணன், செயலாளராக ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்டநிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2018-ம் ஆண்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதை எதிர்த்துவழக்கறிஞர் கே.சத்யபால் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலுக்கு தடைவிதித்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/28/large/921056.jpgதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதனைஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது. மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 28-ம் தேதி (இன்று) முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/27/large/920661.jpgஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிரம்பி வழியும் கிணறுகள் -  உபரி நீரால் சாலையில் ஓடும் வெள்ளம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மம்சாபுரம் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக விவசாய கிணறுகள் நிரம்பி வழிகின்றன. கண்மாய் மற்றும் வயல்களில் இருந்து வெளியேறும் உபரி நீரால் மம்சாபுரம் செண்பகத் தோப்பு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மம்சாபுரம் வாழைகுளம் கண்மாய் ஒரே மாதத்தில் மூன்று முறை நிரம்பி மறுகால் பாய்ந்தது. மேலும் செண்பகத்தோப்பு பேயனாற்றில் தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் மலையை ஒட்டியுள்ள கண்மாய்கள் மற்றும் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மம்சாபுரதம் முதலிப்பட்டி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. மேலும் அவ்வப்போது தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கிணற்று நீரை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/27/large/920660.jpgபுதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் - புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தடை

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய வகை கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் வல்லவன் பிறப்பித்துள்ள உத்தரவில், "உலக நாடுகளில் புதிய வகை கரோனா (கோவிட்- 19 ஓமைக்ரான் பிஎஃப் 7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புதுவருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/27/large/920658.jpg''கடனை திரும்ப செலுத்தவில்லை'' - கடலூர் எம்பி-யின் ரூ.45 கோடி சொத்தை வங்கி கையகப்படுத்தியது

விருத்தாசலம்: கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தாததால் பண்ருட்டியில் இருந்த ரூ.45 கோடி மதிப்பிலான சொத்துக்களை தமிழ்நாடு மெர்க்ண்டைல் வங்கி நேற்று கையகப்படுத்தியது.

கடலூர் மக்களவை உறுப்பினரான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், முந்திரி உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்து, அவற்றை ஏற்றுபதி செய்வதோடு, சில்லரை விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், பண்ருட்டி சென்னை சாலையில், வஉசி நகரில் காயத்ரி கேஷ்யூஸ் இன்டஸ்டரீ என்ற பெயரில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை, தமிழ்நாடு மெர்க்ண்டைல் வங்கிக் கிளையில் கடந்த 10 வருடங்களுக்கு முன் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். அந்த பணத்தை முறையாக திரும்ப செலுத்தாததால், அவரது வங்கி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் அளித்தும் அவர் அதை பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, December 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/27/large/920358.jpgஎன்எல்சியை கண்டித்து பேரணி: முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், வேல்முருகன் பங்கேற்பு

கடலூர்: என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர் கள் மற்றும் கொடுக்க இருப்பவர் களுக்கான கோரிக்கைகளை முன் வைத்து, அனைத்துக் கட்சி சார்பில் நேற்று மாலை நெய்வேலியில் பேரணி நடைபெற்றது. இதில் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

2013-ம் ஆண்டு வெளியிட்டநில ஆர்ஜித சட்டத்தை முழுமையாக என்எல்சி நிர்வாகம் அமல்படுத்த வேண்டும். ஏற்கெனவே என்எல்சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்ததால் பாதிக்கப்பட்டு, இதுவரை வேலை பெறாதவர்களுக்கு நிரந்தர வேலை என்எல்சி நிறுவனத்தில் வழங்க வேண்டும். புதிதாக நிலம் எடுக்க உள்ளவர்களுக்கு அவார்டு வழங்கும் நாளிலேயே, நிரந்தர வேலைக்கான பணி ஆணையை வழங்க வேண்டும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/27/large/920486.jpgபெண்ணுக்கு ரத்த நாள அறுவை சிகிச்சை: உதகை அரசு மருத்துவர்கள் சாதனை

உதகை: உதகையை அடுத்த எமரால்டு பகுதியை சேர்ந்தவர் சகுந்தியா (28). இவர், கடந்த 13-ம் தேதி விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கவனக்குறைவால் இடது கையில் அரிவாளால் வெட்டிக்கொண்டார். அதீத ரத்தப் போக்கு ஏற்பட்டதால், உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சகுந்தியாவுக்கு ஆழமான வெட்டு காயமும், தசைநார்கள் கிழிந்தும், கையில் செல்லும் முக்கிய ரத்தக் குழாய் முழுவதும் துண்டிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனால் அவரது கையின் ஒரு பாதி உணர்ச்சி இல்லாமல், கை அசைவின்றியும் இருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/27/large/920444.jpgசென்னையில் 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: உயிரிழந்தோருக்கு அரசியல் தலைவர்கள், மீனவ அமைப்புகள் மரியாதை

சென்னை: சென்னையில் 18-ம் ஆண்டு சுனாமிநினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி மெரினா மற்றும் காசிமேடு கடற்கரை பகுதிகளில் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அரசியல் கட்சிகள், மீனவஅமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிச.26-ம்தேதி சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து, கடலோர மாவட்டங்களில் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்தனர். சென்னை கடலோரப் பகுதிகளிலும் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன. இதனால், ஒவ்வோர்ஆண்டும் டிச.26-ம் தேதி சுனாமிநினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/27/large/920557.jpgஅகத்தியர் பிறந்த மார்கழி ஆயில்ய நட்சத்திர நாளான ஜன.9-ல் தேசிய சித்தா தினம் கொண்டாட்டம்

சென்னை: ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சித்த மருத்துவ முறை உணவு என்ற கருப்பொருளுடன் 6-வது தேசிய சித்த மருத்துவ தினம் வரும் ஜன.9-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்சியில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநரும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநருமான ஆர்.மீனாகுமாரி கூறியதாவது: சித்தர்களில் முதன்மையானவரான அகத்திய முனிவர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார். இதனால், ஆண்டுதோறும் இந்த நாள் தேசிய சித்தா தினமாக கொண்டாடப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/27/large/920549.jpgதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஜனவரி 9-ல் சட்டப்பேரவை கூடுகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 9-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார்.

இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று கூறியதாவது: வரும் ஜன. 9-ம் தேதி காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். அன்றே அலுவல் ஆய்வுக் குழு கூடி, ஆளுநர் உரை மீது எத்தனை நாட்கள் விவாதம் நடைபெறும் என்பதை முடிவு செய்யும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, December 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/26/large/919987.jpgகோவை-மதுரை இடையிலான ரயிலின் வேகம் அதிகரிப்பு : 35 நிமிட பயண நேரம் குறைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி

கோவை: கோவை - மதுரை இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கியது. அதன்படி, கோவையிலிருந்து தினமும் மதியம் 2.05 மணிக்கு புறப்படும் கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16721),

இரவு 7.35 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து தினமும் காலை 7.25 மணிக்கு புறப்படும் மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16722), நண்பகல் 12.45 மணிக்கு கோவை வந்தடையும். நேற்றுமுதல் இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் 35 நிமிடங்கள் வரை பயண நேரம் குறைந்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/26/large/919920.jpgகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாகன சோதனையில் 281 பேர் மீது வழக்கு பதிவு: பைக் ரேஸில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது

சென்னை: சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர். குறிப்பாக, 350 தேவாலயங்களை சுற்றி கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், நேற்று முன்தினம் இரவு போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இதில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 140 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 4 வழக்குகள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 6 வழக்குகள், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்தது தொடர்பாக 68 வழக்குகள், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதாக 28 வழக்குகள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகள், 18 வயது நிரம்பாதவர்களுக்கு வாகனம் ஓட்ட கொடுத்தது தொடர்பாக 2 வழக்குகள் என மொத்தம் 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/26/large/920080.jpg'பரம்வீர் சக்ரா' வீரர்களுக்கு ஆண்டு முழுவதும் மரியாதை: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

சென்னை: பண்பு மற்றும் கலாச்சார பயிற்சிமுனைவு அறக்கட்டளை சார்பில்,75-வது சுதந்திர தின அமிர்த மகோத்ஸவத்தை 1,000 பள்ளிகளில் கொண்டாடும் வகையில்,‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவர்களுக்கு ஆண்டு முழுவதும் மரியாதை செலுத்துவதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

அறக்கட்டளை தலைவர் என்.கோபாலசுவாமி வரவேற்றார். இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தென்பிராந்திய ராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஏ.அருண் ஆகியோர், பரம்வீர் சக்ரா விருது பெற்ற, ஓய்வு பெற்ற சுபேதார் மேஜர் மற்றும் கவுரவ கேப்டன் யோகேந்தர் சிங் யாதவை கவுரவித்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/26/large/920072.jpgதமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு: நாளை முதல் ‘டோக்கன்’ விநியோகம்

சென்னை: பொங்கலை முன்னிட்டு ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரைஅடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக நாளை முதல் (டிச.27)வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகிக்குமாறு நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பாண்டு (2022) பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் பரிசுத் தொகை நிறுத்தப்பட்டு, அரிசி, வெல்லம், கரும்பு மற்றும் மளிகைப் பொருட்கள் என மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, December 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/25/large/919459.jpgமுதல்வரின் தனிப் பிரிவில் கொடுத்த மனுவை வாபஸ் பெற்றால்தான் புகார் மீது நடவடிக்கை: வைரலாகும் காவலரின் உரையாடல்

சென்னை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணா நகரில் உள்ள டிராவல்ஸ் ஏஜென்சியை தொடர்பு கொண்டு, வேலைக்கு முயற்சித்துள்ளார்.

அப்போது, அந்நிறுவன உரிமையாளரான ரத்னேஸ்வரன், லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை வாங்கித் தருவதாக ஆறுமுகத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஆறுமுகம் தவணை முறையில் ரூ.12.25 லட்சம் வரை ரத்னேஸ்வரனுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/25/large/919454.jpgசென்னையில் திடீர் மழை: போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த திடீர் மழையால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை மாநகரப் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. காற்றழுத்த தாழ்வுமண்டலம் நேற்று இரவு சென்னையில் இருந்து 460 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/25/large/919552.jpgவீராணம் ஏரி 6-வது முறையாக நிரம்பியது

கடலூர்: கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி நீர் மூலம் காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப் பகுதிகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. சென்னை குடிநீருக்கு முக்கிய ஆதாரமாகவும் வீராணம் ஏரி உள்ளது.

இந்த ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது. நேற்று ஏரி, தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. தற்போது, கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு விநாடிக்கு 65 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விவசாயத்துக்காக பாசன வாய்க்கால்களில் விநாடிக்கு 330 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/25/large/919473.jpgபகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர்வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளாக உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை உள்ளிட்ட பாடங்களை கற்பிக்கும் வகையில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யுமாறு பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.

இவர்கள் வறுமையில் இருந்து விடுபட, அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி கருணையோடு பரிசீலனை செய்ய வேண்டும். தைத்திருநாள் பொங்கல் பரிசாக அவர்களை பணி நிரந்தரம் செய்து, 12 ஆயிரம் குடும்பங்களில் விளக்கேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...