Thursday, December 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/29/large/921568.jpgபுதுச்சேரியில் ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் சாலை மறியல் - போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 65 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் 500 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதில் 1,000 ஊழியர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், முறையான ஊதியம் வழங்க வேண்டும், நேரடி பணப்பரிமாற்ற முறையை ரத்து செய்ய வேண்டும், ரேஷன் கடைகளை தொடர்ந்து இயக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பாரதிய புதுச்சேரி நியாயவிலைக்கடை ஊழியர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சுதேசி பஞ்சாலை அருகில் நடைபெற்றது. சங்க தலைவர் முருகானந்தம், பொதுச் செயலாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். 50க்கும் மேற்பட்ட ரேஷன்கடை ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இப்போராட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் சிவா, நேரு எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்று ஆதரவு தந்து பேசினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...