Tuesday, November 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742625.jpgஅதிமுகவில் இருந்து அன்வர் ராஜா இரவோடு இரவாக நீக்கம்

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.அன்வர்ராஜா, இன்று (நவ.1) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்”

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742425.jpgபல ஆண்டுகளாக நீடிக்கும் மழைக்கால அவலங்கள்; தூத்துக்குடி மாநகரின் பிரதான பிரச்சினைக்கு தீர்வு எப்போது? - 7 நாட்களாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதாக மக்கள் வேதனை

தூத்துக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி மக்கள் திண்டாடும் நிலை தொடர்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 10 நாட்கள் மழை பெய்தபோது, குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டது.

ஆனால், கடந்த 25-ம் தேதி கொட்டிய கனமழையால் தூத்துக்குடி மாநகரத்தின் நிலை படுமோசமாகியது. நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதன்பின் நான்கு நாட்கள் பெரிய அளவில் மழை இல்லை. அவ்வப்போது லேசான சாரல் மட்டுமே பெய்தது. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் கவனம் செலுத்தின.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742495.jpgபலத்த மழையால் மதுரை ஆட்சியர் அலுவலகத்தை சூழ்ந்த தண்ணீர்: அரசு மருத்துவமனையில் புகுந்த நீரால் நோயாளிகள் தவிப்பு

மதுரை மாவட்டத்தில் நேற்று அதி காலை வரை மழை பெய்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம், அரசு மருத்துவமனையை தண்ணீர் சூழ்ந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தவித்தனர்.

மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது. பெரியார் பஸ் நிலையம், கோ.புதூர் பஸ் நிலையம் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் நேற்று காலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742496.jpgசிவகாசி அருகே 9 வயது மாணவர் கொலை: 13 வயது சிறுவன் கைது

சிவகாசி அருகே உள்ள சித்து ராஜபுரத்தைச் சேர்ந்தவர் சேசுதாஸ் (39). இவரது மகன் மைக்கேல் அஜய் (9). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 26-ம் தேதி காலை வெளியே சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து சேசுதாஸ் சிவகாசி டவுன் காவல் நிலையத் தில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப்பதிந்து மைக்கேல் அஜையை தேடி வந்தனர்.இந்நிலையில் சித்துராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு குட்டையில் சிறுவன் மைக்கேல்அஜய் உடல் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டது. குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி இறந்ததாக முதலில் கூறப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742497.jpgபுதுச்சேரியில் நடமாடும் பாலியல் தொழில்: பங்களாதேஷ் பெண் உட்பட 3 பேர் மீட்பு; ஒருவர் கைது

புதுச்சேரியில் நடமாடும் பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுவதாக சிறப்பு அதிரடிப்படை போலீ ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான சிறப்பு அதிரடிப்படை போலீஸார், பாலி யல் தொழிலில் ஈடுபடும் கும்பலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை அடையாளம் கண்டனர். அவரிடம், வாடிக்கையாளர் போல் பேசியதில், அந்தோணி தாஸ் (40) என்பவர் புதுச்சேரி 45 அடி ரோட்டை ஒட்டியுள்ள சுதந்திர பொன்விழா நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து நடமாடும் பாலியல் தொழிலை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று பங்களாதேஷை சேர்ந்த பெண் மற்றும் புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் என மொத்தம் 3 பேரை மீட்டனர். பின்னர் அனைவரையும் கோரிமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாலியல் தொழில் நடத்தி வந்த அந்தோணி தாஸை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி னர்.

விசாரணையில், நடமாடும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படும் பெண்களை ஓரிடத்தில் மக்களோடு மக்களாக தங்க வைப் பார்கள். இவர்களின் செல்போன் எண்கள் புரோக்கர், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களிடம் இருக்கும். அவர்களை அணுகும் நபர்களிடம், செல்போன் நம்பரை கொடுத்து பேச வைப்பார்கள். சம்பந்தப்பட்ட பெண்கள் எங்கு வர வேண்டும்? எத்தனை நாட்கள் உடனிருக்க வேண்டும்? எவ்வளவு தொகை? என அனைத்தும் பேசி முடிப்பார்கள். இதனை ஏற்கும் வாடிக்கையாளர் சொல்லும் இடத்துக்கு அந்த பெண்களை கொண்டு சேர்ப்பர். வாடிக்கையாளர் பெண்ணை விரும்பும் இடத்துக்கு அழைத்துச் செல்வார். பிறகு மீண்டும் அந்த கும்பலிடம் ஒப்படைத்து விடுவார். இதற்கு ஒரு இரவு, பகலுக்கு ரூ.10 ஆயிரம் என தொகை வசூலித்துள்ளனர் என்பதும், பலரும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742498.jpgபுதுச்சேரி மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: 5 பேர் கைது

புதுச்சேரி நெல்லித்தோப்பு அண்ணா நகர் 6-வது குறுக் குத் தெருவில் மசாஜ் சென்டர்இயங்குவதாகவும், அங்கு ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர் களை வரவழைத்து பாலியல் தொழில் நடப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து சிறப்பு அதிரடிப்படை மற்றும் உருளையன்பேட்டை போலீஸார் நேற்று முன்தினம் மாலை அங்கு சோதனை நடத்தி னர். அப்போது அங்கிருந்த 4 பெண்களை மீட்ட போலீஸார், மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் 2 பேர் மற்றும் அங்கிருந்த 3 வாடிக்கையாளர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில், மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் புதுச்சேரி சாரம் பாலாஜிநகரைச் சேர்ந்த மகி (31), அவரது மனைவி விஜயலட்சுமி (31) என்பது தெரியவந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சோலையூரை பூர்வீகமாக கொண்ட மகி, புதுச்சேரி அண்ணாநகரில் வாடகைக்கு வீடு எடுத்துகுடும்பத்துடன் தங்கி மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலை நடத்தியது தெரியவந் தது. மேலும், அங்கு வாடிக்கையா ளர்களாக வந்தவர்கள் கேரள மாநிலம் திரு கோட்டயம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் ஜோசப் (28), கோட்டயம் நதிர்ஷா (26), கேரள இடுக்கி பகுதியைச் சேர்ந்த அஸ்வின் அந்தோணி (25) என்பது தெரியவந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742513.jpgபுதுச்சேரிக்கு 6 லாரிகளில் வந்த 1.5 லட்சம் கிலோ தரமற்ற அரிசி திருப்பி அனுப்பி வைப்பு

புதுச்சேரிக்கு 6 லாரிகளில் வந்த 1.5 லட்சம் கிலோ தரமற்ற அரிசி திருப்பி அனுப்பப்பட்டன.

தீபாவளியையொட்டி மாநிலத் தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் துறை, அரிசி மற்றும் சர்க்கரை கொள்முதல் செய்வதற்காக பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் டெண்டர் கோரியது. இருப்பினும் தீபாவளிக்கு குறுகிய நாட்களே இருந்ததாகக்கூறி பரிசு பொருட்கள் வழங்கப்படவில்லை. தீபாவளி முடிந்து மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் இலவச அரிசி, சர்க்கரை வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742517.jpgகோயம்பேடு சந்தையில் தக்காளி லாரி நிறுத்த இடம் ஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் சிஎம்டிஏ தகவல்

கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகள் நிறுத்த உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடம் ஒதுக்கப்பட்டு விட்டதாக சிஎம்டிஏஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட தக்காளி மைதானத்தை திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ‘‘தொடர் மழை மற்றும் வெளி மாநில தக்காளி லாரிகளை நிறுத்த போதுமான இடவசதியின்மை போன்ற காரணங்களால் தக்காளி வரத்து குறைந்து, விலையும் கடுமையாக உயர்ந்து வருவதாகவும், மூடியுள்ள மைதானத்தை திறந்து தக்காளி லாரிகளை நிறுத்திபொருட்களை இறக்கி, ஏற்ற அனுமதி அளித்தால் விலை வெகுவாக குறையும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தற்காலிக ஏற்பாடாக நவ.30-ம் தேதி அதிகாலை 4 மணிமுதல் 4 வாரங்களுக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் வெளி மாநில தக்காளி லாரிகளை நிறுத்தி லோடுகளை இறக்கி, ஏற்ற ஓர் ஏக்கர் இடத்தை சிஎம்டிஏ மற்றும் கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்’’என நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742575.jpgகணக்கில் வராத ரூ.2.27 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 26 நாளுக்கு பிறகு பொதுப்பணி துறை செயற்பொறியாளர் வேலூரில் கைது: லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை

வேலூர் மற்றும் ஓசூரில் லஞ்சஒழிப்புப் போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.2.27 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா 26 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித்துறை வேலூர் கோட்ட தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, செயற்பொறியாளராக கடந்த 2 ஆண்டுகளாக ஷோபனா (57) என்பவர் பணியாற்றி வந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742576.jpgகூட்டுறவு வங்கித் தலைவர் நண்பர்களின் 6 வங்கி லாக்கரை திறந்து சேலத்தில் போலீஸார் சோதனை: சொத்து ஆவண விவரங்கள் சேகரிப்பு

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவனின் நண்பர்களுக்கு சொந்தமான 6 வங்கி லாக்கரை சேலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் திறந்து அதில் இருந்த சொத்து ஆவண விவரங்களை சேகரித்துள்ளனர்.

சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் மற்றும் சேலம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்து வருபவர் இளங்கோவன். இவர் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் நெருங்கிய நண்பர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742577.jpgநீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததால் பெரியாறு அணைக்கு 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை

பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதால் 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதைத் தொடர்ந்து, 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு விநாடிக்கு 5,855 கனஅடி நீர் வருகிறது. கேரளப் பகுதிக்கு 1 முதல் 9 மதகுகளில் தலா 30 செ.மீ. உயர்த்தப்பட்டு 4,284 கனஅடி நீரும், தமிழகப் பகுதிக்கு 4 ராட்சத குழாய்கள் மூலம் 2,300 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742578.jpgஇந்தியா முழுவதும் தூர்தர்ஷன் தரைவழி ஒளிபரப்பு நிறுத்தம்: 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைக்கு சிக்கல்

இந்தியா முழுவதும் 412 தூர்தர்ஷன் நிலையங்களில் தரைவழிஒளிபரப்பு நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது. இதனால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராமேசுவரம் சல்லிமலையில் 1,060 அடி உயர உயர் சக்திஒளிபரப்பு கோபுரம் அமைந்துஉள்ளது. இது சிமெண்ட் கலவையால் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான இக்கோபுரம், ஆசியாவிலும் உயரமான ஒளிபரப்பு கோபுரம் ஆகும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742579.jpgசினிமா பார்த்துவிட்டு திரும்பிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: மதுரையில் காவலர் சஸ்பெண்ட்

மதுரையில் சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவில் திரும்பிய பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக காவலர் ஒருவரை, காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா பணியிடை நீக்கம் செய்தார்.

மதுரை வில்லாபுரம் கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் மகேஷ்(45). அவனியாபுரம் பகுதியில் கம்பெனி நடத்துகிறார். இவரது கம்பெனியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் உட்பட 5 பேர் கடந்த சனிக்கிழமை இரவு செல்லூர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்த்துவிட்டு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர். மதுரை டவுன் ஹால் சாலையில் வரும்போது அங்கிருந்த திலகர்திடல் குற்றப்பிரிவு காவலர் முருகன் உட்பட 3 பேர் அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742581.jpgவருவாய்க்கு அதிக சொத்து சேர்த்த புகார்: தனித்துணை ஆட்சியர் வீடு, பள்ளி, பங்க்கில் சோதனை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வருவாய் நீதிமன்றத்தில் தனித்துணை ஆட்சியராக பணிபுரிபவர் பவானி. இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து, திருவானைக்காவலில் உள்ள பவானியின் வீடு, பவானியை நிர்வாக உறுப்பினராகக் கொண்டு மண்ணச்சநல்லூர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி, பவானியின் மகன் ஹர்ஷவர்தன் வாளாடியில் நடத்தி வரும் பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742584.jpgநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை; சென்னையில் இன்று அதிமுக செயற்குழுக் கூட்டம்: தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்பு

அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சென்னையில் இன்று நடைபெற உள்ள செயற்குழுக் கூட்டம், தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வியூகம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கும் வகையில், அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 24-ம் தேதி நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742585.jpgவேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி; ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி பண மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துபாண்டியன் ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.‘எங்கள் மீது புகாரை கொடுத்துள்ள நபர்கள், ஏற்கெனவே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பல புகார்கள் உள்ளன. பணம் பறிக்கும் நோக்கில் எங்கள் மீதுபொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742587.jpgஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர் குழு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவம் வகையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம்அமைத்து தமிழக அரசு கடந்த2017-ல் உத்தரவிட்டது. அப்போலோமருத்துவர்கள் மற்றும் சாட்சிகளிடம் ஆணையம் ஓராண்டுக்கு மேல் விசாரணை நடத்தியது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742589.jpgடிச.5-ல் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், பழனிசாமி அஞ்சலி

அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தொண்டர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். காலத்தால் அழியாத புரட்சிகரமான திட்டங்களால் தமிழக மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது அதிமுக தொண்டர்களின் கடமையாகும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742608.jpgஅந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி; வட ​ஆந்திரா அருகே புயலாக டிச 4-ல் கரையை கடக்கும்: 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று வரும் 4-ம் தேதி வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும். குமரிக்கடல் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/01/large/742614.jpgதென் ஆப்பிரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்: விமான நிலைய இயக்குநர்களுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவு

தென் ஆப்பிரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட12 நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்ட ‘ஒமைக்ரான்’ கரோனா வைரஸ் தடுப்புநடவடிக்கை குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களின் இயக்குநர்களுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, November 29, 2021

https://ift.tt/3d4ZZXD ஆண்டுக்கு பின் நிரம்பிய மாடக்குளம் கண்மாய்: விழா எடுத்து கொண்டாடிய கிராம மக்கள்

50 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மாடக்குளம் கண்மாய் நேற்று நிரம்பியது.

மாடக்குளம் கண்மாய் 167 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. கண் மாய் கரையின் நீளம் 3,400 மீட்டர். இக்கண்மாயை நம்பி 2,500 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. 3 மதகுகள் உள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/3rtHTXs ஆண்டுகளாக இல்லாத வகையில் மணிமுக்தா ஆற்றில் வெள்ளப் பெருக்கு: ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம் சரியும் அபாயம்

விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம் சரியும் அபாயத்தில் உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழையால் கோமுகிமற்றும் மணிமுக்தா அணை நிரம்பியுள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடந்த 3 தினங்களாக பெய்த இடைவிடாத மழையால் மணிமுக்தா அணைக்கு வினாடிக்கு 2,579 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் 34 அடியை எட்டியுள்ளது. எனவே அணையில் பாதுகாப்புக் கருதி அணையிலிருந்து 3,609 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து செல்வதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742210.jpgகனமழைக்கு நடுவில் அச்சுறுத்தும் மின்கம்பங்கள்

கடலூர் மாவட்டத்தில், விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படும் மின் மோட்டார் இணைப்புக்கான மின்கம்பங்கள் போதிய பராமரிப்பின்மையால் சாய்ந்து நிற்கின்றன. மழைக்காலத்தில், அசம்பாவிதம் ஏதும் நடந்து விடுமோ என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

விவசாயிகள் தங்கள் நிலப் பகுதியில் உள்ள திறந்தவெளி அல்லது ஆழ்குழாய் கிணறுக்காக மின் இணைப்பு பெற்று வருகின்றனர். அவ்வாறு பெறப்படும் மின் இணைப்பை மின்வாரியத்தினரின் முறையாக பராமரிக்காததால், கடலூர் மாவட்டத்தில் சில இடங்களில் அந்த மின் கம்பங்கள் சாய்ந்து, மின் கம்பிகள் தாழ்வான நிலையில் தொங்கியபடி காட்சியளிக்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742243.jpgஇயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களைக் காக்க ஈரோடு கந்தூரி காடு விழாவில் முஸ்லிம்கள் கூட்டுப் பிரார்த்தனை

ஈரோடு லக்காபுரத்தில் நேற்று நடந்த கந்தூரி காடு விழாவில், இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களைக் காக்க வேண்டி முஸ்லிம்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.

ஈரோடு நகரில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னர் பரவிய காலரா தொற்றால் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். அந்த காலகட்டத்தில் பெரிய பள்ளிவாசலில் இமாமாக இருந்த பிலால் என்பவர், எல்லோரும் ஒருநாள் ஊரை விட்டு காலி செய்து, எல்லையில் கூடாரம் அமைத்து தங்குங்கள். அங்கேயே சமைத்து சாப்பிட்டு, அனைத்தையும் ஏழை மக்களுக்கு தானம் அளித்துவிட்டு இறைவனை தொழுது கூட்டு பிரார்த்தனை நடத்துங்கள் எனக் கூறியுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742253.jpgகுலதெய்வ கோயிலுக்கு பூசாரியாக நியமிக்கப்பட்ட சிறுவனுக்கு கல்வி வழங்க என்ன நடவடிக்கை?- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

குலதெய்வ கோயிலுக்கு பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவனுக்கு கல்வி வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், “நீலகிரி மாவட்டம், நெடுக்காடு எனும் கிராமத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வக் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் பூஜை உள்ளிட்ட விழாக்களை படுகர் இன மக்களே செய்து வருகின்றனர். அந்த கோயிலில் அதே கிராமத்தை சேர்ந்த 2-ம் வகுப்பு படித்துவந்த 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742326.jpgகனமழை: இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தேனி, திண்டுக்கல், கடலூர், ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம், உடுமலைப்பேட்டை கல்வி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742217.jpgதமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை: சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உறுதி

தமிழக நீதிமன்றங்களில் தமிழைவழக்காடு மொழியாக கொண்டுவருவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்என்று சட்டத் துறை அமைச்சர்எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.இதில், தமிழக சட்டம், நீதி மன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று 506 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742220.jpgகாஞ்சிபுரம் மாவட்டத்தில் தரைப்பாலங்கள் சேதமடைந்து 20 நாட்களாக போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் தரைப்பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இது மட்டும் இல்லாமல் ஆந்திரா மற்றும் தமிழக கரையோர பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி, பாலாற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை போன்ற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக செய்யாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742226.jpgநவீன தொழில்நுட்பத்துடன் வடிகால் வசதிகள் அவசியம்: சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்சினையை தீர்க்க கட்டுமானப் பொறியாளர்கள் ஆலோசனை

பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கும் பிரச்சினையை தீர்க்க, நகர் முழுவதற்குமான மழைநீர் வடிகால் வரைபடத்தை உருவாக்கி, அதனை அதிநவீன தொழில்நுட்பத்துடன் செயல்படுத்த வேண்டும் என்று கட்டுமானப் பொறியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஆண்டுதோறும் மழைப் பொழிவும், வெள்ள பாதிப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. சென்னையில் ஏற்கெனவே உள்ள மாஸ்டர் பிளான் மற்றும் அதன் செயலாக்கத்தில் உள்ள குறைகள்தான் மழைநீர் தேக்கத்துக்கான காரணம் என்று கூறும் கட்டுமானப் பொறியாளர்கள், சென்னை புறநகரில், குறிப்பாக பழைய மகாபலிபுரம் சாலையில் சிறுசேரி, கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூர், ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு உள்ளிட்ட வளர்ச்சியடைந்து வரும் பகுதிகளில் உள் கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பிறகே வீடுகள் உள்ளிட்ட கட்டுமானங்களை கட்டுவதற்கும் நகரமயமாக்கலுக்கும் அரசு அனுமதிக்க வேண்டு்ம். இதில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது என்கின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742280.jpgசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு: கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்ஸோ சட்டத்தின்கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை வெள்ளலூர், காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் நாகமுத்து என்கிற பேச்சி(30). பெயின்டர். இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்ளுவதாக கூறி, கடந்த 2018 ஆக.15-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742281.jpgஅரசுடமையை நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் வேதா இல்லம் தொடர்பாக அதிமுக சார்பில் மேல் முறையீடு: இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தகவல்

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் தொடர்பாக மேல்முறையீடு செய்வோம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள மாநகர, மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742283.jpgஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு 4-வது முறையாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது: தமிழக விவசாயிகள் கொண்டாட்டம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, 4-வது முறையாக நேற்றிரவு 142 அடியை எட்டியதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1979-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு தொடர் சட்டப் போராட்டங்களின் பயனாக 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக நிலைநிறுத்தலாம் என்றும் தீர்ப்புஅளித்தது. இதன்படி 2014, 2015, 2018-ம் ஆண்டுகளில் 3 முறை 142 அடி உயரத்துக்கு நீர்மட்டம் நிலைநிறுத்தப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742284.jpgதிருச்சி அருகே விவசாயி கொலை; திமுக ஒன்றியச் செயலாளர், ரியல் எஸ்டேட் அதிபர் மீது வழக்கு: மேலும் 2 பேரை கைது செய்து விசாரணை

திருச்சி மாவட்டம் அல்லித்துறை அருகே மல்லியம்பத்து பகுதியில் உள்ள செங்கதிர் சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(50). விவசாயியான இவர் ரியல் எஸ்டேட்தொழில் செய்து வந்தார். இவரதுமனைவி மைதிலி. இத்தம்பதிக்குஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த வாரம் மல்லியம்பத்து ஊராட்சித் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் செங்கதிர்சோலை கிராமத்தில் இருந்த மயான ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த இடத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் தொடர்புடைய சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு கிடைக்காமல், அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியதற்கு சிவக்குமார்தான் முக்கியக் காரணம் என நினைத்த ரியல் எஸ்டேட் கும்பல், சிவக்குமாரிடம் கடந்த சில நாட்களாக பிரச்சினை செய்து வந்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742285.jpgஅமைச்சர் செந்தில் பாலாஜி - ஜோதிமணி எம்பி இடையேயான நட்பில் விரிசல்: வெட்டவெளிச்சமாக்கிய உள்ளிருப்புப் போராட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொண்ட எம்பி ஜோதிமணியின் உள்ளிருப்புப் போராட்டத்தால், அவருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே இருந்து வந்த ஈகோ மோதல் தற்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தற்போது அமைச்சராக உள்ளசெந்தில்பாலாஜி, 2018 டிசம்பரில் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த பிறகு அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2019 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் ஜோதிமணிக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால், இந்தத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தம்பிதுரையை 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வென்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742287.jpgஒமைக்ரான் சாத்தியக் கூறுகளை கண்டறிய 12 ஆய்வகங்களுக்கு அனுமதி

தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸின் முதல்கட்ட சாத்தியக் கூறுகளை கண்டறியும் பரிசோதனையை, சென்னை, கோவை,திருச்சி, சேலம், மதுரை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆய்வகங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742290.jpgபெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி: சென்னையில் பாஜக முற்றுகைப் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி பாஜக சார்பில், சென்னை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்அருகே நேற்று மாநில பொதுச் செயலர் கரு.நாகராஜன் தலைமையில் திரண்ட கட்சியினர், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி கோஷமெழுப்பினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களைத் தடுத்து நிறுத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742291.jpgகோயம்பேட்டில் தக்காளி லோடுகளை இறக்கி, ஏற்ற ஒரு ஏக்கர் இடத்தை ஒதுக்க நீதிபதி உத்தரவு: அனைத்து வியாபாரிகளையும் அனுமதிக்க பரிந்துரை

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த மைதானம் ஏற்கெனவே மூடப்பட்டது.

இந்த மைதானத்தை திறந்து விடக் கோரி கோயம்பேடு மார்க்கெட் தந்தை பெரியார் தக்காளிமொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் சாமிநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742293.jpgபோக்சோ, வன்கொடுமை வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சோதனை: ஆவணங்களை கைப்பற்றியது சிபிசிஐடி

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (79).

இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜூன் 16-ம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 4 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருக்கு உடந்தையாக இருந்ததாக நடன ஆசிரியை சுஷ்மிதாவையும் சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742295.jpgகுறுக்கு வழியில் சம்பாதித்தால் சிக்கிக் கொள்வீர்கள்: அரசு அலுவலர்களுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவுறுத்தல்

நேர்மை தவறி, குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தால் சிக்கிக் கொள்வீர்கள் என்று அரசு அலுவலர்களுக்கு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவுறுத்தினார்.

அரசுப் பணியில் புதிதாக சேரும்பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே அடிப்படைப் பயிற்சி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/30/large/742312.jpgஇந்த ஆண்டு 80% அதிகமாக பெய்துள்ளது; தமிழகம், புதுச்சேரியில் இனி மழை குறையும்: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நாட்களில் மழை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/29/large/742048.jpgகோமாரி நோய்த் தாக்கத்தில் இறந்த கன்றுகளுடன் புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு போராட்டம்: மூடப்பட்ட வாயில்

புதுவை அரசும், கால்நடைத்துறையும் அலட்சியமாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்டு, கோமாரி நோய்த் தாக்கத்தில் உயிரிழந்த கன்றுகளுடன் சட்டப்பேரவை முன்பு பாதிக்கப்பட்டோர் போராட்டம் நடத்தினர். இதனால் சட்டப்பேரவை வாயில் மூடப்பட்டது.

கோமாரி நோய் பாதிப்பால் புதுச்சேரியில் ஏராளமான மாடுகள், கன்றுகள் உயிரிழந்து வருகின்றன. குறிப்பாக பாகூர், ஏம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை உயிரிழப்புகள் அதிக அளவில் உள்ளன. கால்நடைத்துறை மருத்துவமனைகளில் மருந்துகளோ, தடுப்பூசியோ இல்லை எனக் குற்றச்சாட்டுகளைக் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அரசு சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கியதாகத் தெரிவித்தனர். ஆனால், முழு அளவில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. தொடர்ந்து கால்நடைகள் உயிரிழப்பு தொடர்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/29/large/742045.jpgஒப்பந்த மருத்துவர்கள், பணியாளர்களைப் பணி நீக்கம் செய்வதைக் கைவிட வேண்டும்: வேல்முருகன்

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்வதைக் கைவிட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/29/large/742040.jpgவிடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

ராஜிவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்துக்கு ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/29/large/742042.jpgஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்வதா?- டிடிவி.தினகரன் கண்டனம்

மக்கள் நலத்திட்டங்களில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரை திமுக அரசு சத்தமில்லாமல் இருட்டடிப்பு செய்யும் வேலைகளை செய்வது கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/29/large/742038.jpgகோயம்பேட்டில் தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்த ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒரு ஏக்கர் பரப்பளவிற்குக் குறையாத இடத்தை ஒதுக்க வேண்டுமென கோயம்பேடு மார்க்கெட் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு தக்காளி மைதானத்தைத் திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் வழக்குத் தொடர்ந்தது. அதில் வாகனங்களை நிறுத்தக்கூடிய இடத்தில் சிறு கடைகளின் உரிமையாளர்கள் விற்பனை செய்ததால் மைதானம் மூடப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/29/large/742035.jpgகாஞ்சிபுரத்தில் மழை பாதிப்பு: சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் ஏற்பட்ட மழை பாதிப்பைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாக அதி கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் புகுந்துள்ள மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/29/large/742033.jpgஇன்று 5 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, November 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/29/large/742025.jpgபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குக: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி முதல் நேரில் பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி, பத்மாவதி நகரில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்து, மழை நீரைப் போர்க்கால அடிப்படையில் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/29/large/742017.jpgமழை வெள்ளம் வடியும் வரை நிவாரணம் வழங்குக: வாசன் கோரிக்கை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை வெள்ளம் வடியும் வரை அவர்களுக்கான நிவாரணத்தைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/29/large/742015.jpgஅம்மா உணவக ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் தற்போது அம்மா உணவகங்களில் பணியாற்றுபவர்களை பணியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, என்ன நடக்கிறது என்பதை விசாரித்து அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஏழை, எளிய தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்திட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...