Thursday, September 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721713.jpgடாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச இதய சிகிச்சை: ரோட்டரி சங்கத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது

பள்ளிக்கரணையில் உள்ள டாக்டர்காமாட்சி நினைவு மருத்துவமனையில் இதுவரை 350-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச இதயமருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இலவச சேவையை மேற்கொள்ள ‘பிஞ்சு இதயங்களைக் குணப்படுத்துவோம்’ என்ற திட்டத்தை நடத்திவரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் டெம்பிள் சிட்டியுடன் இம்மருத்துவமனை கைகோர்த்துள்ளது.

இந்த கூட்டிணைவின் தொடக்க விழா, சர்வதேச இதய நாள் விழிப்புணர்வு தினமான நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அர்விந்த் ரமேஷ், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ஜெ.ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர். இதுவரை இலவச இதய சிகிச்சை பெற்ற ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மறு ஆய்வுகள் இந்நிகழ்வின்போது மேற்கொள்ளப்பட்டன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721715.jpgபாப்பான் சத்திரம் காசி விஸ்வநாதர் கோயில் நில ஆக்கிரமிப்பு புகார்; சரியான ஆதாரங்கள் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி

பாப்பான் சத்திரம் காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி கோயில் நில ஆக்கிரமிப்பு புகார்தொடர்பாக சரியான ஆதாரங்கள் அளித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உறுதியாக தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாப்பான் சத்திரத்தில் காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபாலசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தைதனியார் பொழுது போக்கு பூங்கா,தனியார் கல்வி நிறுவனம் உள்ளிட்டவை ஆக்கிரமித்துள்ளதாக பிரச்சினை எழுந்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721717.jpgவருமானவரித் துறை அலுவலர்களுக்கு ரூ.65 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ.65 கோடியில் கட்டப்பட்ட, வருமான வரித் துறை அலுவலர்களுக்கான ‘சிகரம்’ அடுக்குமாடு குடியிருப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமானவரித் துறை அலுவலகம் (ஆயக்கர் பவன்) இயங்கி வருகிறது. அந்த வளாகத்தில் வருமானவரித் துறை சார்பில் 234 சதுர மீட்டர் பரப்பளவில் 19 தளங்கள் கொண்ட, வருமானவரி அலுவலர்களுக்கான ‘சிகரம்’ அடுக்குமாடி குடியிருப்பு ரூ.65 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று அடுக்குமாடி குடியிருப்பை திறந்துவைத்தார். பின்னர் அந்த குடியிருப்புகளை பார்வையிட்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721753.jpgதமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை: லட்சக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல்

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நேற்று சோதனை நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 3 மாதங்களாக பல முக்கிய இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று சென்னை திருவான்மியூர், தாம்பரம், பெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721762.jpgஅண்ணாவுக்கு பிறகு கருணாநிதியை முதல்வராக்கிய எம்ஜிஆரை நம்பிக்கை துரோகி என்று கூறுவதா?- துரைமுருகனுக்கு ஓபிஎஸ், பழனிசாமி கண்டனம்

அண்ணாவுக்கு பிறகு கருணாநிதியை முதல்வராக்கிய எம்ஜிஆரை நம்பிக்கை துரோகி என கூறுவதா என்று திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு அதிமுகஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721763.jpgவளர்ச்சி திட்டம் தயாரிக்க 12,525 கிராம ஊராட்சிகளிலும் மக்கள் திட்டமிடல் இயக்கம் அக்.2-ல் தொடக்கம்: தேசிய ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்க தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ம் தேதி முதல் இந்தஆண்டு இறுதி வரை மக்கள் திட்டமிடல் இயக்கம் நடத்தப்படும் என்றுமத்திய அமைச்சர் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

வரும் 2022-23 ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமையில் காணொலியில் நேற்று நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர்கள், பல்வேறு மாநில அமைச்சர்கள், துறை செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721764.jpg2021-ம் ஆண்டுக்காக எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட எழுத்தாளர்கள் 6 பேருக்கு கருணாநிதி பொற்கிழி விருது: பபாசி அறிவிப்பு

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சார்பில் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 6 எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721765.jpgஇளவெயினிக்கு நினைவு மண்டபம்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினிக்கு மதுரையில் நூலகம், முழு உருவச் சிலையுடன் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சங்க காலத்தில் குறவர் குடியில் பெண்ணாக பிறந்து இளமைக் காலத்திலேயே புலமை பெற்று பெரும் புலவராய் விளங்கியவர் பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721766.jpgவிவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு வலியுறுத்தல்

விவசாயிகளை பாதிக்கும் புதிய சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பி.சீனிவாச ராவ் 60-வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அவரது படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721767.jpgவிமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சரை தடுத்து நிறுத்திய அதிகாரி

சென்னை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பாதுகாப்பு அதிகாரி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தூத்துக்குடி செல்வதற்காக நேற்று காலை சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது, விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி, ‘‘கையில் 2 மடிக்கணினி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை’’என்று கூறி, அமைச்சரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721768.jpgஉள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர், காவல் அதிகாரிகளுடன் ஆணையர் ஆலோசனை: பறக்கும் படையினரால் ரூ.34 லட்சம், பரிசுப் பொருட்கள் பறிமுதல்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடன் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக அக்.6, 9-ம்தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721754.jpgஜிஎஸ்டி குறித்து தெரியாமல் பேசும் எம்பிக்கள்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம்

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் முதலாம் ஆண்டுநினைவு நாளையொட்டி, திருச்சி மாவட்டம் சீராத்தோப்பில் உள்ளஅவரது நினைவிடத்தில் பாஜகமாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் பேசியது: 1980-ல் மீனாட்சிபுரத்தில் 300 குடும்பங்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேறி, மாற்று மதத்தைத் தழுவும்போது அதற்கான காரணங்களை ஆய்வு செய்து, அவற்றை அடியோடு மாற்ற முயற்சி செய்தவர். தீண்டாமையை வேரோடு அகற்றப் பாடுபட்டவர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721756.jpgஇயற்கை முறையில் ஊடுபயிர் விவசாயம்; விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து சாதனை: செங்கோட்டையில் பிரமிக்க வைக்கிறார் 78 வயது பொறியாளர்

தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (78). மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ள இவர், சிமென்ட் மற்றும்உரங்களை பேக்கிங் செய்வதற்கான பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கினார். பின்னர், தொழிற்சாலைப் பொறுப்பை சகோதரரிடம் கொடுத்துவிட்டு, 100 ஏக்கரில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். விளைபொருட்களை மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துகிறார். சீரகச் சம்பா, கருப்பு கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் உயரிய மா, வாழை ரகங்களை சாகுபடி செய்து, இயற்கை அங்காடிகளுக்கு விற்பனை செய்கிறார்.

இதுகுறித்து, ஈஸ்வரன் மேலும் கூறியதாவது: கடந்த 1976 முதல் விவசாயம் செய்து வருகிறேன். நெல் சாகுபடியில் வருவாய் கிடைக்கவில்லை. பெரும்பாலும் நஷ்டம் ஏற்படும். இதனால், 20 ஏக்கரில் நெல் சாகுபடியும், எஞ்சிய 80 ஏக்கரில் மரப்பயிர்களையும் சாகுபடி செய்துள்ளோம். ஒட்டு மா, தேக்கு, கொய்யா, நெல்லி, பலா உள்ளிட்ட பணப்பயிர்களை சாகுபடி செய்யத்தொடங்கினேன். தென்னந்தோப்பில் ஊடுபயிராக வாழை ரகங்களை சாகுபடி செய்துள்ளேன். சீரகச்சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருப்பு கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களையும் சாகுபடி செய்து வருகிறேன்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721758.jpgஅரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரத்தை அறிவிப்பு பலகையில் தனியார் பள்ளிகள் ஒட்ட வேண்டும்: தேனி மக்கள் நீதிமன்றம் உத்தரவு

தேனியைச் சேர்ந்த சிவகுமார் தனது மகன் படிக்கும் தனியார் பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வசூலிப்பதாக தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் மாவட்ட நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் தலைமையில் உறுப்பினர்கள் குமரேசன், பிரதாப்சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721759.jpgபழைய கம்பீரத்துடன் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மீண்டெழும்: தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்கள் விரைவில் பழைய கம்பீரத்துடன் மீண்டெழும் என தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வத்தல்மலை மலைக் கிராமத்தில் பெரியூர் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நேற்று மாலை பழங்குடியினர் மற்றும் விவசாயிகளுடன் தமிழக முதல்வர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721780.jpgபோலீஸ் இன்பார்மர் என கருதி விவசாயி கொலை; 10 பேருக்கு ஆயுள் தண்டனை: திருச்சி நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

போலீஸ் இன்பார்மர் என கருதி விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சியை அடுத்த ராம்ஜிநகரைச் சேர்ந்தவர் சுப்பன் என்ற பாலசுப்பிரமணியன் (60). விவசாயியான இவர், கடந்த 2013 ஜூன் 27-ம் தேதி பெரிய கொத்தமங்கலம் பகுதியில் உள்ள பொதுக் குளத்தின் கரையில் நண்பர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கள்ளிக்குடியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. இந்த தாக்குதலில் ஆறுமுகம் என்பவர் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721787.jpgதெற்கு ரயில்வேயில் புதிய காலஅட்டவணை இன்று முதல் அமல்: தென்மாவட்ட ரயில்கள் உட்பட 132 ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு

தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணைஇன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி 132 விரைவு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ரயில்களின் நேரத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும்ஜூலை மாதங்களில் ரயில்களின் காலஅட்டவணை தயாரித்து தெற்கு ரயில்வே அறிவிக்கும். கரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் புதிய காலஅட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் புதிய காலஅட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721788.jpgஉள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட நிர்வாகிகளுடன் 3 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார் ஓபிஎஸ்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்9 மாவட்டங்களிலும் அதிமுக நிர்வாகிகளுடன் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் 3 நாட்களுக்கு ஆலோசனை நடத்துகிறார்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியைபறிகொடுத்த அதிமுக, உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாகஇறங்கியுள்ளது. இதையொட்டி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வரு கிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721789.jpgதேனி, மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை முதல் 4-ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721790.jpgஅக்.1 - உலக முதியோர் தினம்: முதியோர் நலம் பேண ‘முதியோர் நலவாரியம்’ அமைக்க வேண்டும்

பத்மஸ்ரீ டாக்டர் வி.ஏஸ். நடராஜன்

முதியோர் நல மருத்துவர், சென்னை

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721800.jpgநேபாளத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற பூங்கோதை

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பொக்ராவில் அனைத்து விளையாட்டுகள் தெற்காசிய கூட்டமைப்பு சார்பில் போட்டிகள் நடைபெற்றது. இதில்இந்தியா, நேபாளம், பூடான், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 130 பேர் கொண்ட அணி பல்வேறு போட்டிகளில் பங்கேற்றது.

இதில் மகளிருக்கான 5 ஆயிரம்மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர்பட்டணத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், ராமுத்தாய் ஆகியோரது மகள் பூங்கோதை தங்கப் பதக்கம் வென்றார். பந்தய இலக்கை அவர்24 நிமிடங்களில் கடந்து அசத்தினார். பூங்கோதை எஸ்என்எம்வி கல்லூரியில் பிஎஸ்சி உயிரி தொழில்நுட்பவியல் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721195.jpgநெல்லையில் அண்ணாமலை பிரச்சாரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் அவர் பேசும்போது, “ உள்ளாட்சி அமைப்பு என்பது மிகவும் பலம் பொருந்தியது. மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு உள்ளாட்சி அமைப்புகள் மிகவும் முக்கிய பங்காற்றுகின்றன. பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, September 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721264.jpgகளியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடிகளில் சோதனை- கணக்கில் வராத ரூ.14,600 பறிமுதல்: எஸ்.ஐ., உட்பட 3 போலீஸார் மீது வழக்கு

களியக்காவிளை மற்றும் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடிகளில் கணக்கில் வராத ரூ.14,600 பறிமுதல் செய்யப்பட்டது.

கேரள எல்லையில் உள்ளகளியக்காவிளை சோதனைச்சாவடி, திருநெல்வேலி மாவட்டஎல்லையில் உள்ள ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி ஆகியவற்றின் வழியாக, கனிம வளங்கள் மற்றும் ரேஷன்பொருட்கள் கடத்துவது அதிகரித்துள்ளது. இதற்குசோதனைச்சாவடிகளில் பணியாற்றும் போலீஸாரே உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்தது. சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதிலும், அவற்றில் சிக்காமல் வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெற்று வருவதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721313.jpgமதுரையில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான புகார்கள்: எஸ்ஐகள் பற்றாக்குறையால் திணறும் மகளிர் போலீஸ்?

மதுரை நகரில் குடும்பப் பிரச்சினை, கணவன்- மனைவி தகராறு, வரதட்சிணை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான புகார்கள் மற்றும் போக்ஸோ குறித்த சம்பவங்களை தல்லாகுளம், மதுரை நகர், தெற்குவாசல், திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.

4 காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் இருந்தாலும், பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வுகாண போதிய எஸ்ஐகளை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721314.jpgபசுமைக்குடில் மூலம் தக்காளி பயிரிட்டு வருவாய் ஈட்டும் பொறியியல் பட்டதாரி

பசுமைக்குடிலில் தக்காளி பயிரிட்டு வருவாய் ஈட்டி வருகிறார் பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர்.

மதுரை மாவட்டம், சோழ வந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ரா.கார்த்திக் (34). பொறியியல் முதுநிலை பட்டதாரியான இவர் சென்னையில் வேலை பார்த்தார். கரோனா ஊரடங்கால் வேலையை இழந்த இவர், சொந்த ஊரில் தற்போது பசுமைக்குடிலில் தக்காளி பயிரிட்டு வருகிறார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721317.jpgதிருப்புவனம் அருகே பேருந்து பற்றாக்குறையால் படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே பேருந்து பற்றாக்குறையால் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணிக்கின்றனர்.

பூவந்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாண வர்கள் திருப்புவனத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721360.jpgமதுரவாயல்- துறைமுகம் இடையே 2 அடுக்கில் பறக்கும் சாலை திட்டம்; திட்ட அறிக்கை கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும்: நெடுஞ்சாலைத் துறை செயலர் தீரஜ் குமார் தகவல்

நாட்டில் முதல் முறையாக 2 அடுக்கு சாலையாக அமையவுள்ள மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 3 மாதங்களில் நிறைவடையும். திட்ட அறிக்கை கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை செயலர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு திமுக ஆட்சியில், மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையில் பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. ரூ.1,815 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு 2007-ல் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அப்போதைய அதிமுக அரசு, திட்டம் தொடர்பாக ஆய்வு செய்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721361.jpgஆதரவற்ற பிராணிகளையும் நேசிப்போம்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்

ஆதரவற்ற பிராணிகளையும் நேசிப்போம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார்.

உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் `விலங்குகள் மற்றும் மனிதர்களில் நாய்களின் மூலமாக பரவும் வெறிநோயினை தடுக்க முற்படும் ஒருங்கிணைந்த முயற்சிகள்' என்ற தலைப்பில் இணைய வழி பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கருத்தரங்கை தொடங்கிவைத்து உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் 320 கால்நடை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர். சர்வதேச அளவிலான வெறிநோய் வல்லுநர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721401.jpgதேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை: அன்னூர் தேர்தல் பிரச்சாரத்தில் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை அன்னூர் ஒன்றியத்தில் 3-வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.கருப்புசாமியை ஆதரித்து கரியாம்பாளையம், பொகளூர், மூக்கண்ணூர், ஆம்போதி, அன்னூர் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 1.5 சதவீத வாக்குகளில்தான் நாம் ஆட்சியை இழந்துள்ளோம். மக்கள் நமக்குத்தான் மீண்டும் வாய்ப்பளிக்க இருந்தார்கள். ஆனால், திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டனர். 525-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை கூறி திமுக வெற்றி பெற்றது. மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை திமுக இதுவரை நிறைவேற்றவில்லை.

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என்று மாணவர்களை ஏமாற்றினார்கள். அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு காரணமாக ஏராளமான ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்கிறார்கள். நீட் தேர்வு ரத்து என்று திமுக அளித்த பொய் வாக்குறுதியால் தமிழகத்தில் மூன்று மாணவர்களை இழந்துள்ளோம். வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவை புறக்கணியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721363.jpgபருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணிக்க, சென்னையின் 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணை:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721423.jpgசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு மரணம் அடையும் வரை ஆயுள் சிறை: கடலூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேருக்கு மரணம் அடையும் வரையில் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள குமாரக்குடியைச் சேர்ந்தவர்கள் குணசேகரன் என்ற திலகர் (34), கட்டமணியன் என்ற ஜெயசங்கர் (49). இருவரும் கடந்த 12-2-2019 அன்று அப்பகுதியில் உள்ள கோயிலின் அருகே நின்று, அவ்வழியாக சென்ற 14 வயது சிறுமியை தாக்கி கோயிலின் பின் பகுதிக்கு தூக்கிச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721425.jpgஎனது பேச்சால் யாருக்காவது மனது புண்பட்டு இருந்தால் வருத்தமான விஷயம்தான்: ஹெச்.ராஜா விளக்கம்

எனது பேச்சால் யாருக்காவது மனது புண்பட்டிருந்தால் வருத்தமான விஷயம்தான் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

காரைக்குடியில் நடந்த தனது பிறந்தாள் விழா கொண்டாட்டத்துக்குப் பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721429.jpgமத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கிறது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

“மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கிறது” என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத் தில் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘நீட்' தேர்வு சமூகநீதியை நிலைநாட்டக் கூடியது. மன அழுத்தத்தால் மாணவர்கள் உயிர்இழந்து வரும் நிலையில், தமிழக அரசு அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் ‘நீட்' தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக அரசியல் செய்து வருகிறது. மாணவர்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு திமுக அமைதியாக இருந்தாலேபோதும். தேர்தல் வரும்போதெல்லாம் ‘நீட்' தேர்வு தொடர்பாக பேசி திமுக ஆதாயம் தேடிக் கொள்கிறது. ‘நீட்' தேர்வை பெற்றோர், மாணவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். இதை எதிர்ப்பவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வைத்துள்ள திமுகவினர்தான்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721431.jpgவங்கிகளுக்கு அக்டோபர் மாதம் 21 நாட்கள் விடுமுறையா? - அதிகாரிகள் விளக்கம்

வங்கிகளுக்கு அடுத்த மாதம் 21 நாட்கள் விடுமுறையா என்பது தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வங்கிகளுக்கு அடுத்த மாதம் 21 நாட்கள் விடுமுறை என வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: அக்டோபர்மாதம் பல்வேறு பண்டிகைகள்வருவதால், நாடு முழுவதும் சில மாநிலங்களில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை விடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721433.jpgமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் இந்திரகுமாரி வரை... ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அமைச்சர்கள்

ஊழல் வழக்கில் தண்டனை பெறும் அமைச்சர்களின் பட்டியலில் முன்னாள் அமைச்சர் புலவர்இந்திரகுமாரியும் இணைந்துள்ளார்.

1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தவர் புலவர் ஆர். இந்திரகுமாரி.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721437.jpgதமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத 1,351 வாகனங்கள் ஏலம்: ரூ.2.60 கோடி வருவாய் அரசு கணக்கில் சேர்ப்பு

தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த, உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விட்டு, அதில்கிடைத்த ரூ.2 கோடியே 60 லட்சம் அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை ஏலம் விடும் முறையை எளிமையாக்கி, சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் அல்லது காவல் கண்காணிப்பாளருக்கு ஏலம்விடும் அதிகாரம் வழங்கப்படும்' என்று அறிவித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/3EYyTy9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணியில் உரிய இடங்கள் கிடைக்காதது வருத்தம்தான்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்றது.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721462.jpgஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்; பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு: மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மாநில தேர்தல்ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721467.jpgநடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்குவதில் ஆர்வம்: கரோனா பாதிப்பில் இருந்து மீ்ண்டு வரும் ரியல் எஸ்டேட்

நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவதால் கரோனா பாதிப்பில் இருந்து ரியல்எஸ்டேட் தொழில் மீண்டு வரு கிறது.

கரோனா பாதிப்பு, கட்டுமானத் தொழிலை வெகுவாகப் பாதித்தது. வீடு விற்பனை மந்தம், வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியது, பழைய வீட்டு வசதித் திட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளை விற்க முடியாததால், புதிய வீட்டு வசதித் திட்டங்களை தொடங்க முடியாத நிலை என பல்வேறு வழிகளில் சரிவைச் சந்தித்தது ரியல் எஸ்டேட் தொழில்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721468.jpgவாக்காளர் பட்டியலில் தவறு நடந்துள்ளது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

வாக்காளர் பட்டியலில் தவறு நடந்துள்ளது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள 8-வது வார்டில்வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நடந்துள்ளன என்றும், தவறுகளை திருத்தி புது வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி அதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721470.jpgதமிழகம், புதுச்சேரியில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721471.jpgஅரசு ஏசி பேருந்துகளின் சேவை நாளை தொடக்கம்

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நாளை முதல் 702 ஏசி அரசு பேருந்துகளின் சேவை தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல்குறைந்து வருவதையடுத்து, ஏசிபேருந்துகளின் சேவை விரைவில்தொடங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, September 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/29/large/720894.jpgஅரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கியதாக நடப்பாண்டில் திருச்சி, புதுகையில் தலா ஒரு வழக்கு மட்டுமே பதிவு: லஞ்சம் கேட்டால் தயக்கமின்றி புகார் அளிக்க போலீஸார் அழைப்பு

நடப்பாண்டில் அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கியதாக திருச்சி, புதுக்கோட்டையில் இதுவரை தலா ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின்கீழ் சென்னை பெருநகரம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், சிறப்பு புலனாய்வு பிரிவு ஆகியவை ஏற்படுத்தப்பட்டு லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/29/large/720982.jpgதேர்தல் பணிக்கு தடுப்பூசி சான்று கட்டாயம்?- முகவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம்

உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மைய முகவர்களுக்கு தடுப்பூசி சான்று கட்டாயமாக்கப்படும் என்று கருதப்படுவதால், முகவர்களாக பணியாற்ற உள்ளவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கிராமப்பகுதிகளில் இலக்கு நிர்ணயித்து, கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்கும் இலக்கை பூர்த்தி செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/29/large/720992.jpgகுழந்தைத் தொழிலாளர்களைப் பணியமர்த்தினால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வாய்ப்பு: தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை

குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில், துறை ஆய்வாளர்கள், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர், சைல்டு லைன் அமைப்பு உள்ளிட்டோர் ஈரோடு - சத்தி சாலையில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஒரு கடையில் 18 வயது பூர்த்தியடையாத இருவர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/29/large/720996.jpgகாஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.450 கோடியில் மருத்துவ சாதனங்கள் உற்பத்தி பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.450 கோடியில் மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழிற் பூங்காக்களும், குறிப்பிட்ட தொழில்களுக்கான சிறப்புப் பூங்காக்களும் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டு வருகின்றன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/29/large/721008.jpgகோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் இருதய நோயாளிகளில் 25 சதவீதம் பேர் இளைஞர்கள்

தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக சுமார் ஒரு லட்சம் பேர் மாரடைப்பால் பாதிக்கப் படுகின்றனர். மற்ற நாடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இங்கு 40 வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப் பவர்களில் 50 சதவீதம் பேர் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.

மாரடைப்பு பாதிப்பை தவிர்க்க தமிழக அரசு செயல்படுத்திவரும் திட்டம் குறித்து கோவை அரசு மருத்துவமனையின் இருதயவியல் துறை டாக்டர் ஜெ.நம்பிராஜன் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/29/large/721014.jpgமாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அட்டை வழங்கும் முகாம்- மனவளர்ச்சி குன்றியவர்கள் அலைக்கழிப்பு

தாம்பரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாமுக்கு வந்த மனவளர்ச்சி குன்றியவர்கள், மருத்துவர் வராததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தாம்பரத்தில் உள்ள தனியார்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு கை, கால்ஊனமடைந்தவர்கள், கண் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், வாய்பேச முடியாதவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதில்பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அந்தந்த குறைபாடு தொடர்பான மருத்துவர்கள் பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும். அப்போதுதான் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/29/large/721015.jpgஎந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஒடுக்குவதிலேயே காவல் துறையினர் முனைப்பாக உள்ளனர்: திருமாவளவன் குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம் மோரூரில் விசிக கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அண்மையில் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் மோரூரில் பேருந்து நிலையம் அருகில் பொது இடத்தில் விசிக கொடியேற்ற காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். அரசியல்கட்சிகள், ஜாதி சங்கங்கள், ரசிகர் மன்றங்களின் கொடிகள் பறக்கும்போது, விசிக கொடியை மட்டும் ஏற்ற அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/29/large/721016.jpgகொடைக்கானல் மலை கிராமங்களில் உலாவரும் காட்டு யானைகள்: வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவிப்பு

கொடைக்கானல் அருகே உள்ளபேத்துப்பாறை, பாரதி அண்ணா நகர், அஞ்சுரான் மந்தை, அஞ்சுவீடுஉள்ளிட்ட மலை கிராமப் பகுதிகளில் சில மாதங்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

இவை, விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் பேத்துப்பாறை மலை கிராமப் பகுதியில் பகலிலேயே 2 காட்டு யானைகள் உலாவந்ததால் கிராம மக்கள் அச்சம்அடைந்தனர். வீடுகளை விட்டுவெளியே வரமுடியாமல் தவித்தனர். காட்டு யானைகள் அருகேஉள்ள தோட்டப் பகுதிக்குச் சென்று விளைந்திருந்த பயிர்களை சேதப்படுத்தின.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...