Thursday, March 31, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/01/large/783708.jpgபள்ளி வேனின் முன்சக்கரம் ஏறியதாலேயே மாணவன் உயிரிழப்பு: பார்வை குறைந்த, காதுகேளாத ஓட்டுநர் - போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல்-ஜெனிபர் தம்பதியின் மகன் தீக்‌சித் (8), ஆழ்வார் திருநகர் விரிவாக்கப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 28-ம் தேதி பள்ளி வேன் மோதியதில் தீக்சித் உயிரிழந்தான்.

இது தொடர்பாக, பள்ளித் தாளாளர் ஜெயசுபாஷ், தலைமை ஆசிரியை தனலட்சுமி, வேன் ஓட்டுநர் பூங்காவனம், குழந்தை கவனிப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர், ஓட்டுநர் பூங்காவனம், ஞானசக்தி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/01/large/783793.jpgமருத்துவர் சுப்பையா இடைநீக்கம் உத்தரவு ரத்து

சென்னை: மருத்துவர் சுப்பையாவை இடைநீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தஞ்சாவூர் பள்ளி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு முதல்வர்ஸ்டாலின் வீட்டை ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்த அவர்களை மருத்துவர் சுப்பையா நேரில் சென்று சந்தித்ததால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/01/large/783797.jpgமாணவர் சேர்க்கை அதிகமுள்ள கல்லூரிகளில் 25 சதவீதம் கூடுதல் இடங்கள்: ஏஐசிடிஇ அனுமதி

சென்னை: மாணவர் சேர்க்கை அதிகமுள்ள பொறியியல் கல்லூரிகள் 25 சதவீதகூடுதல் இடங்களை உருவாக்கி கொள்ள ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) சார்பில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான அங்கீகார வழங்கல் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், பொறியியல் படிப்புகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல் பாடம் படித்திருப்பது கட்டாயமில்லை என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/01/large/783787.jpgபிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ அனுமதி கோரினார்

சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும், நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவையும் அளித்துள்ளார்.

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய கட்டிட திறப்பு விழா ஏப்.2-ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் முதல்வர் நேற்று பிற்பகல் சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/01/large/783794.jpgஓபிஎஸ், இபிஎஸ்-ஸுக்கு எதிராக புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து

சென்னை: அதிமுக கர்நாடக மாநில செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும், அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பதவி வகித்த வா.புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் கடந்தாண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தனர்.

இதை எதிர்த்து புகழேந்தி, சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/01/large/783796.jpgகரோனா தொற்றால் இறந்தவரின் குடும்பத்தினர் நிவாரணம் பெற 90 நாட்களுக்குள் விண்ணப்பம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற, இனி 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/01/large/783786.jpgவன்னியருக்கான 10.5% உள் இடஒதுக்கீடு செல்லாது: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்; தமிழக அரசு, பாமக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி

சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்பிசி) 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரியில் எம்பிசி பிரிவில் உள்ள வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி அப்போதைய அதிமுக ஆட்சியில் சட்டம் கொண்டுவரப் பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/31/large/783553.jpgமத்திய, மாநில அரசுகள் சிறுபான்மையினர் நலன் காக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானங்கள்

மதுரை: நீதிபதி சச்சார் குழு பரிந்துரை மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளின் அடிப்படையில் சிறுபான்மையினரின் நலன்களை மத்திய மாநில அரசுகள் பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அதில், "மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டவிதிகளை மதித்து கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும். ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் (2016) அமலுக்கு வந்த 5 ஆண்டுகளுக்குள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அரசு பொதுக்கட்டிடங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்ற சட்டவிதி அமலாகவில்லை. தொழில்நுட்பத்தை பயன்டுத்தி போக்குவரத்து, தகவல் தொடர்பு சாதனங்களும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட வேண்டும். அனைத்து வறுமை ஒழிப்பு சமூகப் பாதுகாப்பு திட்டங்களிலும் மற்றவர்களை விட கூடுதலாக 25 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் . உணவுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி 35 கிலோ உணவு தானியத்துக்குரிய அந்தியோதயா அன்னயோஜன குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும். தனியார் துறைகளில் 5 சதவிகிதம் வேலைகளை பெற்றுத்தர வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, March 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/31/large/783480.jpgஜவ்வாது, கொல்லிமலைப் பகுதிகளில் சாகச பயணத்துக்கு விரைவில் அனுமதி: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

தமிழகத்தில் கொல்லி மலை மற்றும் ஜவ்வாது மலைப்பகுதிகளில் சாகசப் பயணங்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

இந்திய பயணம் மற்றும் சுற்றுலா நிபுணர்கள் சங்கத்தின் (ஐஏடிடிஇ) தமிழக கிளை தொடக்க விழா சென்னை தி.நகரில் நேற்றுநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், கிளையைத் தொடங்கி வைத்தார். அதன்பின் தமிழகத்தின் சுற்றுலா தலங்கள் குறித்த சிறப்பு காணொலி ஒளிபரப்பு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/31/large/783481.jpgஓராண்டுக்குள் பாரத் நெட் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி: அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி

சென்னை: தமிழகத்தில் ஓராண்டுக்குள் பாரத் நெட் திட்ட பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் அதிவேக இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் முன்னிலையில், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (டான்பிநெட்), தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்தும் முதன்மை திட்ட ஒருங்கிணைப்பாளரான பாலிகேப் என்ற நிறுவனம்இடையே சேவை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/31/large/783484.jpgதுறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஏப்.6 முதல் மே 10 வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்: மு.அப்பாவு அறிவிப்பு

சென்னை: துறைவாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஏப்.6 தொடங்கி மே 10-ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மார்ச் 18-ம் தேதி பொது பட்ஜெட்டும், 19-ம்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 24-ம் தேதி வரைபட்ஜெட்கள் மீதான விவாதம் நடந்தது. அத்துடன் தேதி குறிப்பிடாமல் பேரவை தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின், துறை வாரியான மானிய கோரிக்கைகள் விவாதத்துக்காக சட்டப்பேரவை மீண்டும் ஏப். 6-ம்தேதி தொடங்கும் என்றும், கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/31/large/783482.jpgஇளநிலை பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும்: திருவாரூர் மத்தியப் பல்கலை. அறிவிப்பு

சென்னை: திரூவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி., பிஎட் உட்பட 7ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளும், எம்எஸ்சி கணிதம், எம்எஸ்சி வேதியியல், எம்எஸ்சி இயற்பியல், எம்ஏ பொருளாதாரம் உட்பட 23 முதுகலை பட்டப் படிப்புகளும், 28 பிஎச்டி படிப்புகளும் உள்ளன.

முந்தைய ஆண்டுகளைப் போலவே வரும் கல்வி ஆண்டிலும் (2022-2023) பொது நுழைவுத்தேர்வு மூலம் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை நடத்தப்பட உள் ளது. இதற்கான நுழைவுத்தேர்வை என்டிஏ நடத்தும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/31/large/783475.jpgசுங்கச்சாவடி கட்டணம் நாளை முதல் உயர்வு

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வானகரம் மற்றும் சூரப்பட்டு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நாளை (1-ம் தேதி) முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, March 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/30/large/782965.jpgபள்ளி வேன் விபத்தில் இறந்த சிறுவனின் உடலை அடக்கம் செய்ய கிறிஸ்தவ சபைகள் இடம் தர மறுத்ததாக தாய் வேதனை: வைரலாகும் வீடியோ

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல்-ஜெனிபர் தம்பதியின் மகன் தீக்சித் (7). வளசரவாக்கத்தில் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த தீக்சித் நேற்று முன்தினம் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில், சிறுவனின் உடலைப் புதைக்க கிறிஸ்தவ சபைகள் இடம் தரவில்லை என அவரது தாயார் ஜெனிபர் கூறிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகியது.

இதுகுறித்து ஜெனிபர் கூறும்போது, “எனது கணவர் இந்து. நான் கிறிஸ்தவர். எனது மகன் இரண்டுமதத்தையும் விரும்பினார். ஆனால், இயேசுவை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், அவனது உடலைப் புதைக்க முடிவெடுத்து, அருகில் உள்ள ஆர்.சி. சபையிடம் அனுமதி கேட்டேன். அதற்கு, `நீங்கள் சி.எஸ்.ஐ. இங்கு சந்தா கட்டாமல், சடலத்தை புதைக்க இடம் கொடுக்க முடியாது' என்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/fupEoFg நாள் பாரத் பந்த் நிறைவு: தமிழகத்தில் ரூ.1.60 லட்சம் கோடி காசோலை பரிவர்த்தனை பாதிப்பு

சென்னை: மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் நடத்திய 2 நாள் பொது வேலைநிறுத்தம் நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் 90 சதவீத அரசுபேருந்துகள் இயக்கப்பட்டன.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் கடந்த 2 நாட்கள் பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/30/large/783009.jpgமுதல்வர் குறித்து அவதூறு பரப்பிய புகாரில் பாஜக பிரமுகர் கைது

சேலம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக எடப்பாடியைச் சேர்ந்த பாஜக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். இதுதொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பாஜக மேற்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் அருள் பிரசாத் தனது ட்விட்டரில், “முதல்வர் ஸ்டாலின் அணிந்து சென்ற ஓவர் கோட் ரூ.17 கோடி என்றும், இத்தகவலை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாகவும்” பதிவிட்டுஇருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/30/large/783004.jpgஸ்டாலின் அமைச்சரவையில் முதல் மாற்றம்: போக்குவரத்துத் துறைக்கு சிவசங்கர் நியமனம்; ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் ஏன்?

சென்னை: தமிழக போக்குவரத்துத் துறைஅமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கும், அத்துறையில் இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021-ம்ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைபொதுத்தேர்தலில் திமுக வெற்றிபெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 பேர் கொண்டஅமைச்சரவை மே.7-ம் தேதிபொறுப்பேற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சராக ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/Ut7Pfep மெகாவாட்' - தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டிய தினசரி மின்தேவை: மின்வெட்டு பிரச்சினையை தடுக்க தீவிர நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் தினசரி மின்தேவை 17 ஆயிரம் மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டிய நிலையில், வரும்கோடைகாலத்தில் இது 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மின்தேவையை சமாளிக்க தேவையானநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2.29 கோடி வீட்டு மின்இணைப்புகளும், 34 லட்சம் வர்த்தக இணைப்புகளும், 7.50 லட்சம் தொழிற்சாலைகளுக்கு குறைந்தழுத்த மின் இணைப்புகளும், 10 ஆயிரம் உயரழுத்த மின்இணைப்புகளும் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/30/large/783045.jpgடிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட புதிய நடைமுறை அறிமுகம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளின் முடிவுகளை விரைவாக வெளியிடபுதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே, தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் பி.உமா மகேஸ்வரி நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தேர்வுகளின் முடிவுகளை விரைவாக வெளியிடும் வகையில், குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் நீங்கலாக, இதர அனைத்து நேரடி நியமனங்களுக்கான பதவிகளுக்கும் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/30/large/783034.jpgமுதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து பேசுகிறார்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா, வரும் ஏப்.2-ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, March 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/29/large/782672.jpgவிருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு | கைதான 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத் தாக்கல்

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளநீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் நேற்று மனுத் தாக்கல் செய்தனர்.

விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஹரிஹரன், அவரது நண்பர்களான திமுக நிர்வாகி ஜூனத்அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, ஜுனத்அகமது திமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/29/large/782676.jpgசென்னையில் தனியார் பள்ளி வளாகத்தில் வாகனத்தை பின்னோக்கி இயக்கியபோது விபரீதம் - சக்கரத்தில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு: ஓட்டுநர், உதவியாளர் கைது; பள்ளி நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் பின்னோக்கி வந்த பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 7 வயது மாணவன்உயிரிழந்தான். இந்த விபத்து தொடர்பாக வேன் ஓட்டுநர், பெண் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைசேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இருவரும் ஐ.டி ஊழியர்கள். இவர்களது 7 வயது மகன் தீக்சித். இந்தச் சிறுவன் வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/29/large/782701.jpgஒரு தலைவருக்கான உயரிய பண்புகளுடன் வாழ்ந்து காட்டியவர் அப்துல்கலாம்: கலாமுடன் இணைந்து பணியாற்றிய பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகள் பெருமிதம்

சென்னை: இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் 6-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் ஆன்லைன் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், மூத்த பாதுகாப்புத் துறை விஞ்ஞானியும் வேல்ஸ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் கே.சேகர், ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடலில் அவர்கள் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/29/large/782698.jpgதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் - துணைவேந்தராக கீதாலட்சுமி நியமனம்: ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வி.கீதாலட்சுமியை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர்மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநரும், கோவை வேளாண் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, அப் பல்கலைக்கழக துணைவேந்தராக வி.கீதாலட்சுமியை நியமித்துள்ளார். அவர் துணைவேந்தராகப் பதவி ஏற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/IB1ZjsD நாள் பொது பாரத் பந்த் | போக்குவரத்து, வங்கி சேவை பாதிப்பு: பொதுமக்கள் கடும் அவதி; தொழிலாளர்கள் மறியல், ஆர்ப்பாட்டம்

சென்னை: மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்த 2 நாள் பொது வேலைநிறுத்தம் நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. முதல்நாளில் தமிழகத்தில் 68 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வங்கிச் சேவைகளும் பாதிக்கப் பட்டன.

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2 நாள் பொது வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/29/large/782699.jpgமுதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்: 31-ம் தேதி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார்

சென்னை: திமுகவின் ‘கலைஞர் அறிவாலயம்’ கட்டிடத்தை திறப்பதற்காக நாளைடெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 31-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கிறார்.

கடந்த 2006-ம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்பிக்களை கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம்ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி திமுகவுக்கு, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயாமார்க் பகுதியில், பாஜக அலு வலகம் அருகில் 2013-ம் ஆண்டு நிலம் வழங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/28/large/782479.jpg'இனி அடிக்கடி துபாய்க்கு வந்து போவேன்' - அபுதாபியில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுடன் தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். முன்னதாக இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில், இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சமூகம் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் கடைசியாக அவர் ஆற்றிய உரையில், "நான்கு நாட்களாக துபாயிலும், இந்த அபுதாபி பகுதியிலும் நான் ஒரு சுற்றுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். தமிழகத்திலே தான் சுற்றுப் பயணம் நடத்துவது எனக்கு வழக்கம்.

அழைத்த இடங்களுக்கு எல்லாம் நான் போவது உண்டு. அப்படி அழைக்கப்பெறும் இடங்களிலெல்லாம் எனக்கு வரவேற்புக்களை மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு என்னை வரவேற்பது உண்டு. அதற்குக் கொஞ்சம் கூட குறைவில்லாமல், கொஞ்சம் கூட இல்லை, ஒரு இன்ச் கூட குறைவில்லாமல், இந்த நான்கு நாட்களாக நான் திக்குமுக்காடிப் போயிருக்கிறேன். எதைப் பேசுவது, என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று நான் யோசிக்கின்ற நேரத்தில், பேசாமல் உங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் போதும், அப்படி என்கிற உணர்வு தான் என்னை ஆட்கொண்டிருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/28/large/782150.jpgமுதல்வரின் தனி விமானத்துக்கான பயணச் செலவை திமுக ஏற்றுள்ளது: தங்கம் தென்னரசு விளக்கம்

சென்னை: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துபாயில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் துபாய் பயணத்துக்கு விமானம் கிடைக்காததால், தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த தனி விமானத்துக்கான செலவை திமுக-தான் ஏற்றுள்ளது. தமிழக அரசின் நிதி செலவழிக்கப்படவில்லை. முதல்வர் குடும்பச் சுற்றுலா மேற்கொண்டிருப்பதாக பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். முதல்வரின் இந்த பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மட்டும் இல்லை. கடைக்கோடி தமிழகத்திலிருந்து வெளிநாட்டுக்கு வந்து உழைக்கும் ஒவ்வொரு குடும்பத்தினுடைய வளத்துக்காகவும்தான்.

உலக வர்த்தகப் பொருட்காட்சி முடியும்போதுதான் மிகப் பெரிய கூட்டம் வந்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் உலகின் பல பகுதியிலிருந்தும் ஏராளமானோர் வந்துள்ளனர். இந்த நேரத்தில் அரங்கைத் திறப்பதுதான் சரியாக இருக்கும் என்பதை முதல்வர் உணர்ந்து தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டு உள்ளார். பழனிசாமி முதல்வராக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களினால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது. ஆனால், தற்போது இந்த 3 நாட்களில் துபாய், அபுதாபி பயணங்களில் ஏறத்தாழ ரூ.6,200 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்து வெற்றிகரமான பயணத்தை முதல்வர் மேற்கொண்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, March 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/28/large/782140.jpgவிருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மீண்டும் விசாரணை; மொபைல் போன் பதிவுகள் ஆய்வு

விருதுநகர்: விருதுநகரில் 22 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், அவரது நண்பர்களான திமுக நிர்வாகி ஜூனத்அகமது, பிரவீன், மாடசாமி ஆகியோரும், பள்ளி மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். ஜுனத் அகமதுவை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் திமுக மேலிடம் தற்காலிகமாக நீக்கியது. பாதிக்கப்பட்ட பெண், அவரது தாய் ஆகியோர் சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் கவுன்சலிங் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இருவருக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிசிஐடி போலீஸார் கடந்த 25-ம் தேதி 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 சிறுவர்கள் உட்பட 8 பேரின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/28/large/782139.jpgசசிகலாவுக்கு அதிமுகவில் வாய்ப்பில்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

சேலம்: “அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்து தலைமை அலுவலகத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரை கட்சியில் இணைக்க வாய்ப்பில்லை” என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் துபாய் பயணத்தை அவரது குடும்பச் சுற்றுலாவாகத்தான் மக்கள் பார்க்கின்றனர். தனி போயிங் விமானத்தில் குடும்ப உறவுகளை அழைத்துக் கொண்டு ஸ்டாலின் துபாய் சென்றிருக்கிறார். இது தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது குடும்பத்துக்கு புதிய தொழில் தொடங்கவா? என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

நான் முதல்வராக இருந்தபோது, பயணிகள் விமானத்தில் தான் வெளிநாடு சென்றேன். என்னுடன் துறைஅமைச்சர்கள், செயலர்கள் மட்டுமே உடன் வந்தனர். தற்போதைய துபாய் கண்காட்சியில் அதிமுக அரசின் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாங்கள் வெளிநாடு சென்றபோது, அதனை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார். (இது தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பேசிய வீடியோ பதிவை பழனிசாமி காண் பித்தார்). ஆனால், நாங்கள் ஆக்கப்பூர்வமான திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தோம். விருதுநகர் பாலியல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடுவோம். அதிமுகவில் தற்போது 25 மாவட்டங்களுக்கான அமைப்புத் தேர்தல் நடைபெற்று வருகிறது. உட்கட்சித் தேர்தல் முடிந்த பின்னர் நானும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் ஆலோசித்து திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை அறிவிப் போம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/28/large/782132.jpgவானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவாது: உள் தமிழகப் பகுதியில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் மார்ச் 28-ம் தேதி (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 29-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 30, 31-ம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/28/large/782131.jpgநம்மை பிளவுபடுத்தும் சக்திகளை உதறித் தள்ளுங்கள்: துபாய் தமிழர்களிடையே முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்

சென்னை: துபாய் தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நம்மை பிளவுபடுத்தும் சக்திகளை உதறித் தள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வளம், அறிவு, தொழில் நுட்பங்களை தமிழகத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் அழைப்பு விடுத்தார். தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாள்பயணமாக கடந்த 24-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றார்.

துபாயில் நடந்துவரும் சர்வதேச கண்காட்சியில் தமிழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை முதல்வர் திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து அமீரக அமைச்சர்களையும் தொழில் துறையினரையும் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் அதிக முதலீடு செய்ய வருமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, March 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/27/large/781847.jpgகாட்பாடியில் நான் தான் நிற்பேன், நான் தான் ஜெயிப்பேன்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை

நான் இருக்கும் வரை காட்பாடி தொகுதியில் நான் தான் நிற்பேன், நான் தான் ஜெயிப்பேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.

தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட நகைக்கடன்தள்ளுபடி திட்டத்தில் பயனாளிகளுக்கு நகைகளை திருப்பி அளித்து சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/27/large/781969.jpgபுதுச்சேரியில் பந்தல் சரிந்து இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

புதுச்சேரி பாரதி வீதியில் அமைந் துள்ளது காமாட்சி அம்மன் கோயில். சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோயிலின் முகப்பு பகுதியில் பந்தல் அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. நேற்று மாலையும் இப்பணி நடந்தது. இப்பணிக்கான ஒப்பந் ததாரராக மணி உள்ளார்.

பந்தல் அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர் மணி மகன் வேலு,சீர்காழியை சேர்ந்த ஆறுமுகம், லட்சுமணன், முத்துலிங்கம் ஆகி யோர் ஈடுபட்டிருந்தனர் ‌. அப்போது பந்தல் சரிந்து விழுந்து, வேலை செய்துகொண்டிருந்த 4 பேரும் மேலே இருந்து விழுந்தனர். காயமடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/27/large/781970.jpgஎன்ஆர் காங்-பாஜக ஆட்சியமைத்து ஓராண்டு ஆன பிறகு ஊழல் பட்டியலை வெளியிடுவோம்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் அணை கட்ட ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்னர். தமிழக அரசு இதை கண்டித்து, சட்டப்பேரவையில் தீர்மானம்நிறைவேற்றியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/27/large/781976.jpgபெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை பாஜக ஆட்சி உறுதி செய்துள்ளது: தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பெருமிதம்

பாஜகவைச் சேர்ந்த அனைத்து மாநிலங்க ளின் மகளிரணி தலைவிகளும், தேசிய மகளிரணி நிர்வாகிகளும் கலந்துகொண்ட கூட்டம் புதுச்சேரியில் நேற்று நடந்தது. தேசியமகளிரணி தலைவி வானதி சீனிவாசன் குத்துவிளக்கேற்றி இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநில மகளிரணி தலைவிஜெயலட்சுமி, பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தேசிய மகளிரணி பொறுப்பாளர் குல் சாந்தகுமார் கௌதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மாநில மகளி ரணி தலைவிகளும், பொறுப்பாளர்களும், தேசிய மகளிரணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/27/large/781981.jpgபுதுச்சேரியில் இன்று முதல் மீண்டும் விமான சேவை: முதல் விமானத்தில் ஆளுநர் வருகை

புதுச்சேரியில் இருந்து இன்று மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. முதல் விமானத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசைவரவுள்ள உள்ளார். அவரைமுதல்வர் ரங்கசாமி வரவேற்கவுள்ளார்.

மத்திய அரசின், ‘உதான்’ திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்கும் விமான சேவை சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஹைதராபாத்திற்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்கியது. கரோனா காலத்தில்விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/27/large/781852.jpgஅரக்கோணம் அருகே ஊராட்சி தலைவரை சாதி ரீதியாக துன்புறுத்தல்: நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி., அலுவலகத்தில் தர்ணா

பாராஞ்சி கிராம ஊராட்சியில் சாதி ரீதியாக அவமானப்படுத்தி வரும்துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி., அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பாராஞ்சி கிராமத்தில் நடந்து முடிந்த கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு குறவர் சமூகத்தைச் சேர்ந்த ரவி என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திமுகவில் இணைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/27/large/781857.jpgபிளாஸ்டிக் இல்லாத ராணிப்பேட்டை திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் காந்தி: ஒரே நாளில் 3.5 டன் பிளாஸ்டிக் குப்பை அகற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத நிலையை ஏற்படுத்தி வீடு தோறும் மஞ்சப்பை வழங்கும் திட்டம் விரைவில் தொடங் கப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். அரசு அலுவலர்களால் நேற்று ஒரே நாளில் 3.5 டன் பிளாஸ்டிக் குப்பை அகற்றப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக் கடை பேருந்து நிலையத்தில் 75-வது சுதந்திர தின திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு வார நிகழ்வு நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் இல்லாத ராணிப்பேட்டை மாவட்டம் என்ற இலக்கை அடைய அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கூட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, March 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/26/large/781621.jpgவெளிநாடு செல்லும் முதல்வரை வாழ்த்துவோர் பிரதமரை மட்டும் விமர்சிப்பது ஏன்? - வானதி சீனிவாசன் கேள்வி

புதுச்சேரி: வேலைவாய்ப்பு, தொழில் முத லீட்டை ஈர்க்க வெளிநாட்டுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலினை வாழ்த்துவோர், நாட்டின் வளர்ச் சிக்காக பிரதமர் செல்லும்போது மட்டும் விமர்சனம் செய்வது ஏன் என்று வானதி சீனிவாசன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் பாஜக மகளிரணி தேசிய நிர்வாகிகள் கூட்டம் இன்று (மார்ச் 26) நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை பாஜக மகளிரணி பேரணி நடை பெற்றது. பேரணியை தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ராஜா திரையரங்கம் அருகே தொடங்கிய பேரணி அண்ணா சாலை வழியாக வந்து கம்பன் கலையரங்கத்தில் முடிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/26/large/781772.jpgஇந்திய மருத்துவ முறையில் புற்று நோய்க்கு மருந்து கண்டறிய மத்திய அரசு தீவிர முயற்சி: கனிமொழி என்விஎன் சோமுவுக்கு மத்திய அமைச்சர் பதில்

சென்னை: இந்திய மருத்துவ முறைகளின்படி புற்று நோய்க்கான மருந்தைக் கண்டறியும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக நாடாளு மன்றத்தில், திமுக எம்பி.யின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழிஎன்விஎன்.சோமு, ‘‘அகில இந்தியஆயுர்வேத நிறுவனம், தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனவா?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/26/large/781771.jpg‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ கலந்துரையாடல்: நாளை மாலை 6 மணிக்கு ஆன்லைனில் நடைபெறுகிறது

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் ஆன்லைன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு நாளை (ஞாயிறு) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது

நாளைய இந்தியாவை வளமானதாகவும், அறிவியல் சிந்தனையோடும் வளர்த்தெடுக்க வேண்டுமென்று விரும்பியவர் மறைந்த அப்துல்கலாம். இளைய தலைமுறையினரிடம் உரையாடும் போதெல்லாம் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/26/large/781769.jpgபொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும் அகற்றப்படும்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கருத்து

சென்னை: பொது இடத்தை கடவுளே ஆக்கிர மித்திருந்தாலும் அதையும் அகற்றஉத்தரவிடப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்டபலபட்டரை மாரியம்மன் கோயில் சார்பில் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் நடைபெறுகிறது. இது தங்களது இடத்துக்குச் செல்லும் பாதையை மறைக்கும் வகையில் உள்ளதால், கட்டுமானத்துக்குத் தடை விதிக்க வேண்டும்என்று நாமக்கல்லைச் சேர்ந்த பாப்பாயி தொடர்ந்த வழக்கில் மாவட்ட முதன்மை முன்சீப் நீதிமன்றம், கோயில் நிர்வாகத்துக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/26/large/781768.jpgமார்ச் 28, 29-ல் நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் சம்பளம், படி கிடையாது: இறையன்பு அறிவிப்பு

சென்னை: மார்ச் 28, 29-ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் சம்பளம், படிகள் கிடையாது என்று தலைமைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்

புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு பணியாளர்கள் சங்கங்கள் மார்ச் 28, 29-ம்தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழகத்திலும் பல்வேறு அரசியல் சார்ந்த தொழிலாளர் சங்கங்கள் பங்கேற்க உள்ளன. ஆளுங்கட்சியான திமுகவும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, March 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/25/large/781367.jpgநகைக்கடன் தள்ளுபடி, உள்ளாட்சி மானியம் உள்ளிட்ட திட்டங்களுக்காக ரூ.10,567 கோடிக்கு இறுதி துணை பட்ஜெட்: சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தாக்கல் செய்தார்

சென்னை: கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ரூ.10,567 கோடி மதிப்பிலான இறுதி துணை பட்ஜெட்டை பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2021-22 நிதியாண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/25/large/781372.jpgசென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக என்.மாலா, எஸ்.சவுந்தரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய கூடுதல் நீதிபதிகளாக, என்.மாலா மற்றும் எஸ்.சவுந்தரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடத்துக்கு அரசு மற்றும் அரசு சாராத வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர்மோகன், கே.குமரேஷ்பாபு, அப்துல் ஹமீத், ஆர்.ஜான்சத்யன்ஆகிய 6 பேரையும் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்தமாதம் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/25/large/781376.jpgதமிழகத்தில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளது. இதுதொடர்பாக ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் மார்ச் 25-ம்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

வரும் 26, 27, 28-ம் தேதிகளில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில்ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 24 (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 8 செ.மீ., விருதுநகர் மாவட்டம் பிளவக்கல், ராஜபாளையத்தில் தலா 6 செ.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூர், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/25/large/781378.jpgபெண் குழந்தைகளின் மாதவிடாய் நேரத்தில் டம்பான், பேட் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு: ஆன்லைனில் நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது

சென்னை: பெண் குழந்தைகள் மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்தும் டம்பான், பேட் உள்ளிட்டவை குறித்த ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை (சனி) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக அரசின் ஐசிடிஎஸ் மற்றும் பாரதப் பிரதமரின் போஸ்ஹன் அபியானும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன.

பெண் குழந்தைகளிடம் ஊட்டச்சத்தின் தேவையையும், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் உண்டாக்கும் வகையில் நடைபெறும் இந்த ஆன்லைன் நிகழ்வில், அப்போலோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனைகளின் ஆலோசகரும், முதியோர் நல சிறப்பு பயிற்சியாளருமான டாக்டர்கெளசல்யா நாதன், தெற்கு ரயில்வே அலுவலரும், சர்வதேச கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான வித்யா வெங்கட்ராமன் ஆகியோர் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்க உள்ளனர். இந்த நிகழ்வில் 11 முதல் 19 வயது வரையுள்ளபெண்கள் அவர்களது பெற்றோர்களுடன் பங்கேற்கலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/25/large/781374.jpgவலைதள தகவலை நம்ப வேண்டாம் - விரைவில் குரூப்-4 தேர்வு அறிவிக்கை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை மார்ச் மாதம்வெளியிடப்பட்டு, ஜூன் மாதம்போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று இந்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் 5,255 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்நிலையில், குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் கடந்த 23-ம் தேதி இரவு தகவல் பரவியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/25/large/781375.jpgஆசிய நாடுகளில் தொற்று அதிகரிப்பு; கரோனா விதிகளை 3 மாதம் கடைபிடிக்க வேண்டும்: சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: ஆசிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக மக்கள் கரோனா விதிமுறைகளை 3 மாதங்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து கட்டுப்பாடுகளும் ஏற்கெனவே தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் மட்டும் சில கட்டுப்பாடுகள் நீடிக்கிறது.முதல்வர் தலைமையில் உயர்நிலைக் குழு கூடி, தற்போதுள்ள ஓரிரு கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...