Wednesday, May 31, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/01/large/999537.jpgதேனி மக்களை அலறவிடும் ‘அரிசிக்கொம்பன்’ - வனப்பகுதியிலேயே தங்கியிருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கம்பம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக் கானல், வட்டக்கானல் வனப்பகுதி அருகே அரிசிக்கொம்பன் என்ற காட்டுயானையின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வந்தது. வனப்பகுதியையொட்டிய கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளை சேதப்படுத்தி அரிசியை விருப்ப உணவாக உட்கொண்டதால் இந்த யானையை அரிசிக்கொம்பன் என அழைத்து வருகின்றனர்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த யானைக்கு கடந்த ஏப்.29-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி தமிழக எல்லையான முல்லைக்கொடி வனப் பகுதியில் கேரள வனத்துறையினர் விட்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/01/large/999362.jpgதிருப்பத்தூர் - தருமபுரி பிரதான சாலையில் சிறுபாலம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணிகள், சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. வாணியம்பாடி-செட்டியப்பனூர் கூட்டுச்சாலையில் இருந்து ஊத்தங்கரை வரை சாலை விரிவாக்க பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன. அதேபோல, திருப்பத்தூரில் இருந்து தருமபுரி வரை செல்லும் பிரதான சாலையில் 3 இடங்களில் சிறுபாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இப்பணிக்காக அங்கு மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றுப்பாதையில் ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சிறுபாலம் அமைக்கும் பணியை விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/01/large/999709.jpgரேடார், நவீன கேமராவுடன் ரோந்து வாகனம்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்

சென்னை: போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில், ரேடார் அமைப்பு, நவீன கேமராவுடன் கூடிய ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்இயக்கத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சென்னையில் விபத்து, போக்குவரத்து நெரிசல், விதிமீறல்களைக்கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் வாகனம் ஓட்டிவருபவர்களை கண்டுபிடிக்க, போக்குவரத்துப் போலீஸாருக்கு புதிதாக 50 ப்ரீத் அனலைசர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/31/large/999352.jpgதமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டில் ஈடுபட்ட 2 திருடர்கள் கைது - 24 பவுன் நகைகள் மீட்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட 2 திருடர்களை பிடித்து, அவர்களிடம் இருந்து 24 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர். இவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

ராமநாதபுரம் புளிக்காரத்தெருவைச் சேர்ந்த மல்லம்மாள் காளி கோயில் பூசாரி மனோகரன் வீட்டில் மே 14-ம் தேதி மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த நகைகள், வெள்ளிப்பொருட்களை வீட்டை உடைத்து திருடிச்சென்றனர். இதுதொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கேணிக்கரை ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில், சார்பு ஆய்வாளர் தினேஷ்பாபு, சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் அய்யனார், பாலமுருகன் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படையினர் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் மே 30-ம் தேதி (நேற்று) ஏர்வாடி பகுதியில் தங்கியிருந்த திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சேர்ந்த தமிழ்வேந்தன் மகன் முருகானந்தம்(35), சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த குமார் மகன் ஹரிபிரசாத்(33) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் பூசாரி மனோகரன் வீடு, மே 25-ம் தேதி ராமநாதபுரம் ராணிசத்திரத் தெருவில் 2 வீடுகள், கீழக்கரையில் ஒரு வீடு ஆகியவற்றில் நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/01/large/999354.jpg"இது வெற்றிகரமான பயணம்; ரூ.3,000 கோடி முதலீடுகளுக்கு வாய்ப்பு" - சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு (மே 31) இரவு சென்னை திரும்பினார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "உங்கள் வாழ்த்துகளோடு நான் மேற்கொண்ட சிங்கப்பூர் - ஜப்பான் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தமிழ்நாட்டிற்கும் ஜப்பானுக்கும், கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்லுறவை பெறக்கூடிய வகையில் இந்தப் பயணம் அமைந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய திட்டங்களான மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்றவற்றை செயல்படுத்தியிருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் ஜப்பானின் பங்கும் அதில் இருக்கிறது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/31/large/998943.jpgபுனல்காடு குப்பை கிடங்கை அகற்றுவது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

திருவண்ணாமலை: புனல்காடு குப்பை கிடங்கை அகற்றுவது தொடர்பாக பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்துள்ள வாக்குறுதியை ஏற்று 17 நாட்களாக நடைபெற்று வந்த காத்திருப்பு போராட்டத்தை முடித்துக் கொள்வதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் அமைக்கப் பட்டுள்ள குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி, காஞ்சி சாலையில் கடந்த 13-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. 17-வது நாளான நேற்று முன்தினம், ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணமாக சென்று ஆட்சி யர் பா.முருகேஷிடம் மனு அளிக்க, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம் தலைமையில் கிராம மக்களும் விவசாயிகளும் முயன்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, May 30, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/31/large/999106.jpgமீனாட்சியம்மன் கோயிலில் நாள் முழுவதும் செயல்படுத்தப்படும் அன்னதான திட்டம்: ஆய்வு செய்த சட்டப்பேரவை குழுவினர்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் செயல்படுத்தப்படும் அன்னதான திட்டம் குறித்து சட்டப்பேரவை உறுதி மொழிக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் எம்எல்ஏக்கள் ஐ.கருணாநிதி (பல்லா வரம்), ரூபி ஆர்.மனோகரன் (நாங்குனேரி), எம்.கே.மோகன் (அண்ணா நகர்), பி.ராமலிங்கம் (நாமக்கல்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்று வந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/31/large/999187.jpgதிருப்பூரில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை: மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்: திருப்பூரில் நேற்று மாலை பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. திருப்பூர்- பல்லடம் சாலையில் இயங்கி வரும் வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகைகள் பலத்த காற்றில் பறந்தன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/31/large/999212.jpgகரூரில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை - அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்

கரூர்: கரூரில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நேற்று நடைபெற்றது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.

கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் மே 26-ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/30/large/998902.jpgஸ்ரீவில்லிபுத்தூரில் சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறிய நகர்ப்புற நல வாழ்வு மையம்

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு ஒராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத நகர்ப்புற நல வாழ்வு மையம், சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக மாறி உள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் இலவச அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சோதனை, தாய் சேய் சுகாதார சேவைகள் மற்றும் அடிப்படை மருத்துவ சேவைகளுக்காக குடியிருப்புகளுக்கு அருகில் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/30/large/998901.jpgகாரைக்குடி | திமுக ஆட்சியை நேரடியாக விமர்சித்து வருவாய்த் துறையினர் போராட்டம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மணல் கொள்ளை மற்றும் அரசியல்வாதிகளால் இந்த ஆட்சியில் அக்கப்போரு என திமுக ஆட்சியை நேரடியாக விமர்சித்து வருவாய்த்துறையினர் போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நரசிங்கபுரம் ஊராட்சி பச்சைமலையில் சட்டவிரோத மண் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை ஒரு கும்பல் தாக்கியது. இச்சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் தமிழரசன், மாவட்டத் தலைவர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/30/large/998546.jpgகாரைக்கால் வேளாண் கல்லூரி வளாகத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்திருந்ததாக புகார் - கல்லூரி நிர்வாகம் மறுப்பு

காரைக்கால்: காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி வளாகத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்திருந்ததாக புகார் கூறப்பட்ட நிலையில், அது முற்றிலும் பொய்யான தகவல் என கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை பகுதியில் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இக்கல்லூரி வளாகத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்திருந்ததாகவும், அதை கல்லூரி நிர்வாகம் ரகசியமாக அழித்து விட்டதாகவும், புதுச்சேரி இந்திய ஊழல்எதிர்ப்பு இயக்கத்தின் தலைவரும், அக்கல்லூரியின் இணைப்பேராசிரியருமான எஸ்.ஆனந்த்குமார் பெயரில் காரைக்கால், திருநள்ளாறு பகுதிகளில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, May 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/30/large/998769.jpgகோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க சிறப்புத் திட்டங்கள் - 3 சந்திப்புகளில் ரவுண்டானா

கோவை: கோவை மாவட்டத்தில், சாலை விபத்துகளை தடுக்க பிரத்யேக திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 6 காவல் நிலைய பகுதிகளில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.

கோவை மாவட்ட காவல்துறை பேரூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி ஆகிய உட்கோட்டங்களுடன் இயங்குகிறது. மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. அதிகரித்துவரும் சாலை விபத்துகளை தடுக்க, முக்கிய பகுதிகளில் தடுப்புகள் மற்றும் ரவுண்டானாக்கள் அமைக்க மாவட்ட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/30/large/998812.jpgதமிழகத்தில் இன்று வெப்பநிலை உயர வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 30-ம் தேதி ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 83 டிகிரிஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/30/large/998441.jpgசிவகங்கையில் ஆட்சியர் காருக்கு முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட இளைஞர் - கண்டுகொள்ளாமல் சென்ற ஆட்சியர்

சிவகங்கை: சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் காருக்கு முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட இளைஞரை ஆட்சியர் ஆஷா அஜித் கண்டுகொள்ளாமல் சென்றார்.

மதுரை தாசில்நகரைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன். இவரது தந்தைக்கு சொந்தமான இடம் மானாமதுரை அருகேயுள்ள சூரக்குளம் பகுதியில் உள்ளது. ஆனால் அந்த இடத்தை முறைகேடாக வேறுநபருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கடசுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/xSNcWKs பக்க அறிக்கைக்கு எந்த பதிலும் இல்லாத சூழலில் பொறுப்பு விலகினேன் - பேராசிரியர் ஜவகர் நேசன்

மதுரை: தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மதுரையில் ‘தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கை எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்த பேராசிரியர் எல்.ஜவகர் நேசன் இதில் பங்கேற்றார். சில முரண்பாடு காரணமாக அதிலிருந்து விலகிய, அவர் முன்னதாக கல்விக் குழு தலைவரிடம் அளித்த வரைவுக் குழு நகல் அறிக்கையை மேலும் செழுமைப்படுத்தி புதிய அறிக்கை தயாரித்துள்ளார். அதுபற்றி மக்கள் பார்வைக்குக் கொண்டு செல்லும் வகையில் இந்த அரங்கக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் ஜவகர் நேசன் பேசியது: "உலகம் முழுவதிலுமிருந்து 113 சிறந்த கல்வியாளர்களைத் தேர்வு செய்து அவர்களுடன் விவாதித்து வரைவுக் கொள்கை உருவாக்கப்பட்டு குழுத் தலைவருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. முதல்வரின் தனிச்செயலர் விரும்பும் வகையில் அவர் சொல்லும் குழுவுக்கு சம்பந்தப்படாத சிலரின் ஆலோசனையை ஏற்று அறிக்கை தயாரிக்க, அழுத்தம் கொடுக்கப்பட்டது. தமிழக முதல்வருக்கும் அது தொடர்பாக விளக்கி அளிக்கப்பட்ட நிலையில், சுமார் 250 பக்க அறிக்கைக்கு எந்த பதிலும் இல்லாத சூழலில் பொறுப்பு விலகினேன்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/29/large/998438.jpgதமிழகத்தில் வருமான வரித் துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை - ஆளுநருக்கு மதுரை வழக்கறிஞர் புகார் மனு

மதுரை: மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு நிர்வாகி வழக்கறிஞர் முத்துக்குமார் தமிழ்நாடு ஆளுநருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 2 ஆண்டாக குழந்தை கடத்தல் அதிகரித்துள்ளது. மதுரையில் குழந்தைகள் கடத்தலில் தனியார் அறக்கட்டளை நிர்வாகி, கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை ஏமாற்றி உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வென்றதாக பாராட்டு பெற்றுள்ளார். இதில் உளவுத் துறை சரிவர செயல்படவில்லை.

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை சோதனையிட சென்ற வருமான வரித் துறையினர் மீது தாக்குதல் நடந்துள்ளது. வருமான வரித்துறையினர் தமிழகத்தில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்ள வருவது தெரியாது என, அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, May 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/29/large/998229.jpgதமிழர் நலன், தமிழக மேன்மையே முக்கியம்: சிங்கப்பூரில் பேட்டியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழர் நலனும், தமிழகத்தின் மேன்மையும்தான் எங்களுக்கு முக்கியம் என்று சிங்கப்பூரில் பேட்டியளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூரில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து, திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். அதற்கான வரைவுத் திட்டத்தை தயாரிக்க ‘போஸ்டன் கன்சல்டிங் குரூப்’ என்ற நிறுவனத்தை பணியில் அமர்த்தியுள்ளோம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/TNsPQbU மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு திமுக அரசின் அலட்சியமே முக்கிய காரணம்: இபிஎஸ், ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்று அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி ஆகிய மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம். இதற்காக அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/29/large/998220.jpgமேகமலைக்கு இடம்பெயர்ந்த அரிசிக் கொம்பன்: கம்பம் பகுதி மக்கள் நிம்மதி

கம்பம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட வனப்பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித்திரிந்த அரிசிக் கொம்பன் என்ற காட்டுயானையை வனத் துறையினர் கடந்த ஏப்.29-ல் மயக்க ஊசி செலுத்தி தமிழக எல்லையின் வனப்பகுதியான முல்லைக்கொடி என்ற இடத்தில் விட்டனர்.

இந்த யானை, நேற்று முன்தினம் தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்தது. தெருக்களில் ஓடிய இந்த யானையைப் பார்த்து மக்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். மக்களின் பாதுகாப்புக் கருதி ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/29/large/998219.jpgஎங்கள் மீது அளித்த புகாருக்கு பயந்து ஓட மாட்டோம்: வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இயக்குநர் உறுதி

கரூர்: எங்கள் மீது புகார் அளித்திருப்பதால் நாங்கள் பயந்து ஓடிவிடுவோம் என யாரும் நினைக்க வேண்டாம் என வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு இயக்குநர் சிவசங்கரன் நேற்று தெரிவித்தார்.

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டுக்கு வருமான வரித் துறையினர் சென்றபோது, அவர்களை திமுகவினர் மறித்து வாக்குவாதம் செய்து, தாக்கியதுடன் அவர்கள் வந்த கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இதில் காயமடைந்த அதிகாரிகள் காயத்ரி, சுனில்குமார், கல்லா சீனிவாசராவ், பங்கஜ்குமார் ஆகியோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/kYM7bta அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் நிலைக்கு அலட்சியமே காரணம்: மாநில சுகாதாரத் துறை மீது பேராசிரியர்கள் குற்றச்சாட்டு

மதுரை: தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டதற்கு மாநில சுகாதாரத் துறை, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் அலட்சியமே காரணம் என பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு முறை, சிசிடிவி கேமராக்கள், பேராசிரியர் பணியிடம் உள்ளிட்டவற்றில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு அந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/29/large/998350.jpgஎடை குறைந்த, துருப்பிடிக்காத நவீன ரக சிலிண்டர்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம்

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் எடை குறைந்த, துருப்பிடிக்காத நவீன வடிவம் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்தி உள்ளது.

நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு இன்டேன் என்ற பெயரில் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/29/large/998353.jpgதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பம் நிலவும்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, May 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/28/large/997682.jpgதமிழகத்தில் ‘கேலோ’ போட்டிகள் - பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர், உதயநிதி நன்றி

சென்னை: ‘கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின்: 2023-ம்ஆண்டு ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்ற எனதுவேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/28/large/997688.jpgபோக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 612 ஊழியர்களுக்கு ரூ.171 கோடி பணப் பலன்கள் - அமைச்சர் உதயநிதி வழங்கினார்

சென்னை: கடந்த ஆண்டில் ஓய்வுபெற்ற 612 போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.171.23 கோடி பணப் பலன்களுக்கான காசோலையை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற, காலமான பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/28/large/997716.jpgதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 29, 30, 31-ம் தேதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 83 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/27/large/997344.jpgநாடாளுமன்றத்தில் செங்கோல் | பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி சொல்லியிருக்க வேண்டும் - ஆளுநர் தமிழிசை

திருவண்ணாமலை: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோல் வைக்கப்பட உள்ளதற்காக, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி கடிதம் எழுதியிருக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை இன்று இரவு (மே 27-ம் தேதி) சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாடாளுமன்ற கட்டிடம் நாளை (இன்று) திறக்கப்பட உள்ளது. 800 பேர் அமரலாம். நாடாளுமன்ற கட்டிடத்துக்கு, நமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம். நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் பெருமைபட்டாலும், தமிழர்கள் அனைவரும் பெருமைபட கூடிய நிகழ்வு உள்ளது. திருவள்ளுவர் எடுத்து கூறிய நல்லாட்சியின் அடையாளமாக, தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட உள்ளது. எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத பெருமை தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. ஆனால், செங்கோல் குறித்து அரசியலாக்கப்பட்டுள்ளது. செங்கோல் இருந்ததா, ஆட்சி மாற்றத்துக்குதான் கொடுத்தார்களா என பேச்சு எழுந்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/27/large/997340.jpgதஞ்சாவூர் | இறந்தவரின் உடலை எடுத்து செல்ல அனுமதி மறுப்பால் கலவரமாக மாறிய கிராமம் - போலீஸ் வாகனம் உடைப்பு

தஞ்சாவூர்: பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை, கீழக்கோயில்பத்து கிராமத்தில், இறந்தவரின் உடலை ஒரு தரப்பினரின் தெரு வழியாக கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், கல்வீச்சு, சாலை மறியல், போலீஸ் வாகனம் உடைத்து இருதரப்பினரிடைய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கீழகோவில்பத்து கிராமத்தில், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (53). இவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது உடலை வடபாதி கிராமம், ஆதிதிராவிடர் தெரு வழியாக இன்று மாலை எடுத்து சென்றுள்ளனர்.

அதற்கு, வடபாதி ஆதிதிராவிடர் தெருவினர், திருமண வரவேற்பு விழா நடப்பதால், வேறு வழியாக செல்ல கூறியுள்ளனர். ஆனால், சீனிவாசன் உடலை அந்த தெரு வழியாக தான் எடுத்து செல்வோம் என கூறி, சீனிவாசன் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, May 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/27/large/997221.jpgதமிழ் வழி பாடப்பிரிவுகள் நிறுத்தம்; அரசுக்கே தெரியாமல் அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்: அமைச்சர் பொன்முடி விளக்கம்

விழுப்புரம்: பொறியியல் படிப்பில், தமிழ் வழி பாடப்பிரிவுகளை மூடுவது தொடர்பாக அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கில வழியில் பொறியியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ் வழியிலான இயந்திரவியல், கட்டிடவியல் பாடப் பிரிவுகளில் சமீபகாலமாக மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/27/large/997233.jpgவருமான வரித் துறையினரை தாக்கிய திமுகவினர் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: வருமான வரித் துறையினரை திமுகவினர் திட்டமிட்டு தாக்கியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்வதாக இருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/27/large/997255.jpgடாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் அபராதத்துடன் நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகளை நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அதற்குரிய அபராதம் விதிப்பதுடன், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் பலர் இறந்த சம்பவங்கள், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவது குறித்த புகார்கள் உள்ளிட்டவை தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று ஆலோசனை நடத்தினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/27/large/997249.jpgசெந்தில்பாலாஜியின் தம்பி, ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகம் உட்பட 40 இடங்களில் வருமான வரி சோதனை - முழு விவரம்

சென்னை/ கோவை/ கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பியின் வீடு, அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக், மின்துறை ஒப்பந்ததாரர்கள், அவர்களது நண்பர்கள், உறவினர்களின் வீடு, அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, திமுகவினர் வாக்குவாதம், ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனால், சோதனையை அதிகாரிகள் பாதியில் கைவிட்டு,போலீஸில் புகார் கொடுத்தனர்.

அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த விவகாரம், சமீபத்தில் நடந்த கள்ளச் சாராய உயிரிழப்புகள் காரணமாக, தமிழக மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/26/large/996887.jpgசிவகாசி, ராஜபாளையத்திற்கு வந்த தாமிரபரணி கூட்டுக் குடிநீர் - தினசரி நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் வழங்க ஏற்பாடு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி, ராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி திட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில், நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிவகாசி மாநகராட்சியில் 38,670 குடிநீர் இணைப்புகள் உள்ளது. தற்போது மாநகராட்சியில் மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 34 லட்சம் லிட்டர், வெம்பக்கோட்டை அணை மூலம் 21 லட்சம் லிட்டர், உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் 28 லட்சம் லிட்டர் என நாள் ஒன்றுக்கு 80 லட்சத்திற்கும் மேல் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 60 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/26/large/996886.jpgகாரைக்குடியில் ஆலங்கட்டி மழை - சூறாவளி காற்றால் சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்

காரைக்குடி: காரைக்குடியில் இன்று மாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்றால் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தன.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, May 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/26/large/996686.jpgஆட்டோ ஓட்டுநர்கள் காத்திருப்பு போராட்டம் தள்ளிவைப்பு

சென்னை: ஆட்டோ ஓட்டுநர்களின் காத்திருப்புபோராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், ஆட்டோ முன்பதிவுக்கான செயலியை அரசு வடிவமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 26-ம் தேதிமுதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தோம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/26/large/996420.jpgதமிழகத்தில் பார்கள் செயல்படும் நிலையில் மது விற்பனைக்கு எப்படி தடை கோர முடியும்? - உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

சென்னை: தமிழகத்தில் பார்கள் நடத்த சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மது விற்பனைக்குத் தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ஆர்.பூமிராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அனைத்து டாஸ்மாக் பார்களிலும் போலீஸார் மற்றும் கலால்துறை அதிகாரிகள் உதவியுடன் 24 மணி நேரமும் தடையின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பார்களில் தரமற்ற மதுபானங்கள் விற்கப்படுவதால், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூலமாக விற்கப்படும் மதுபான வகைகள் உண்மையிலேயே தரமானவையா, அதில் எத்தனை சதவீதம் ஆல்கஹால் உள்ளது. அவை குடிப்பதற்கு உகந்ததா என்று தெரியவில்லை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/26/large/996398.jpgஆன்லைனில் இழந்த 82 ஆயிரம் ரூபாயை உடனடியாக மீட்ட சிவகங்கை சைபர் கிரைம் போலீஸார்

சிவகங்கை: காரைக்குடி இளைஞர் ஆன்லைனில் இழந்த ரூ.82,000-த்தை சிவகங்கை சைபர் கிரைம் போலீஸார் உடனடியாக மீட்டனர்.

காரைக்குடியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (24). இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என விளம்பரம் இருந்தது. இதையடுத்து ராமமூரத்தி முதலில் குறைவான பணத்தை முதலீடு செய்துள்ளார். அவரது பணம் இரட்டிப்பானது. இதனால் சந்தோஷம் அடைந்த ராமமூர்த்தி பணத்தை எடுக்காமல் தொடர்ந்து 16 தவணைகளில் ரூ.82,400 வரை முதலீடு செய்தார். ஆனால் அதன்பிறகு அந்த பணத்தை எடுக்க முடியவில்லை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/26/large/996397.jpgபொதுமாறுதல் கலந்தாய்வு: காலிப்பணியிடங்களை மறைத்து காலதாமதம்? - ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மதுரை: மதுரையில் நேற்று பட்டதாரி ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் காலிப்பணியிடங்களை மூடி மறைத்தும், சர்வர் பிரச்சினை என மாலை 6 மணிக்கு மேலும் காலதாமதம் செய்து கலந்தாய்வு நடத்தப்பட்டதாக, ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் நேற்று அரசு உயர்நிலை, மேல்நிலப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்ளான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆசிரியருக்கு 34 காலிப்பணியிடங்களுக்கு 364 ஆசிியர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/25/large/996396.jpgசெங்கோலில் உள்ள நந்தி சிலை மத சின்னம் என்பதால் எதிர்க்கிறோம் - திருமாவளவன்

மதுரை : பாராளுமன்ற திறப்பின்போது, தமிழகத்தில் இருந்து வழங்கப்படும் செங்கோலிலுள்ள நந்தி சிலை மதச்சின்னமாக இருப்பதால் எதிர்க்கிறோம் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

மதுரை பெருங்குடியிலுள்ள தனியார் ஓட்டலில் அவர் இன்று (மே 25)செய்தியாளர்களிடம் கூறியது; மக்களவை, மாநிலங்களவையின் தலைவராக இருப்பவர் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு. நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாக்கு இவரையும், குடியரசு துணைத் தலைவரும் புறக்கணிக்கப்படுவது ஜனநாயக மாண்புக்கு எதிரானது. ஜனநாயகத்தை கொச்சைபடுத்தும் செயல். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட 18 கட்சிகளும் புறக்கணிக்கப் பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, May 24, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/25/large/995882.jpgசி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு நாள்: தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 42-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், வணிகர்கள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாடார் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/25/large/996290.jpgசங்கரன்கோவில் அருகே பள்ளி வேன் மீது கார் மோதி 5 பேர் மரணம்

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி வேன் மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தப்புளி ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி (45). இவர், தனது மனைவி வேலுத்தாய் (35), மாமியார் உடையம்மாள் (60), மகன் மனோஜ் குமார் (22) ஆகியோருடன் காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு, ஊருக்கு நேற்று மாலை திரும்பிக் கொண்டு இருந்தார். காரை மேல ஒப்பனையாபுரத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஓட்டினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/u7Q3Xck வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம்

சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து அரசுப் பேருந்துகளில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு, தொலைதூரம் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து, நகரப் பேருந்துகளிலும் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இது நடைமுறைக்கு வந்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/25/large/996317.jpgதமிழகத்தில் 4 நாள் மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் மே 24-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை, ஈரோடு மாவட்டம் நம்பியூரில் தலா 3 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கோவை மாவட்டம் வால்பாறை, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை, நீலகிரி மாவட்டம் உதகையில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/24/large/995391.jpgதருமபுரி | பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

பாலக்கோடு வட்டம் மகேந்திரமங்கலம் அடுத்த சிலந்தியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் ஹரீஷ்குமார்(20). இவர் பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இன்று மாலை கல்லூரி முடித்து இருசக்கர வாகனத்தில் ஹரீஷ் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தையில் மாங்காய் மண்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரில் வந்த சிறிய வகை சரக்கு வாகனம் ஒன்று ஹரீஷ்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, May 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/24/large/995216.jpgமத்திய அரசின் திட்டங்களில் திமுக அரசு ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: மத்திய அரசின் திட்டங்களில் திமுக அரசு ஊழல் செய்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வஉசி மைதானத்தில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேற்கூரை, அரைமணி நேரம் மழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/24/large/995264.jpg‘கிலோய்’ ஆயுர்வேத மருந்து குறித்து பதஞ்சலி நிறுவனம் ஆராய்ச்சி

சென்னை: ஆயுர்வேத மருந்தான ‘கிலோய்’ குறித்த ஆராய்ச்சியில் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆயுர்வேதத்தின் புகழ்பெற்ற மருந்தான, குடுச்சி (கிலோய்) (டினோஸ்போரா கார்டிஃபோலியா) அமிர்தா என்றும் அழைக்கப்படுகிறது. இது கரோனா தொற்று காலத்தில் பல லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/24/large/995286.jpgவங்கிகளில் ரூ.2,000 நோட்டு மாற்றம் செய்யும் பணி தொடக்கம்

சென்னை: மத்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, ‘கிளீன் நோட் பாலிசி’ என்ற திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி, ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் நேற்று முதல் (23-ம் தேதி) வரும் செப். 30-ம் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. ரூ.2,000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றுவதற்கு வசதியாக அனைத்து வங்கிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

குறிப்பாக, ரூ.2,000 நோட்டுகள் அதிகளவு வரும்பட்சத்தில் அவற்றை மாற்றி கொடுப்பதற்கு வசதியாக அனைத்து வங்கிகளிலும் தேவையான அளவுக்கு ரூ.200, ரூ.500 நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டன. அத்துடன், ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பேரில், பெரும்பாலான வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற சில வங்கிகளில் தனி வரிசை அமைக்கப்பட்டு இருந்தது. அத்துடன், பொதுமக்கள் வங்கியில் அமர இருக்கை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/24/large/995282.jpgஅரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றார் முதல்வர் ஸ்டாலின்: அமைச்சர்கள், அதிகாரிகள் வழியனுப்பினர்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நேற்று அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு உயர் அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

தமிழகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரசு சார்பில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் முதல்வர் ஸ்டாலின் மே 23-ம் தேதி (நேற்று) முதல் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/23/large/994646.jpgசிவகங்கை நகராட்சியில் பழைய பொருட்களை பெற்று ஏழைகளுக்கு வழங்கும் திட்டம் தொடக்கம்

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் மக்களிடம் பழைய பொருட்களை பெற்று, ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை நகராட்சியில் தினமும் 13.08 டன் குப்பை சேகரமாகின்றன. இதில் தேவையில்லாத குப்பைகளோடு, மீண்டும் பயன்படுத்தக் கூடிய பாடப்புத்தகங்கள், துணிகள், செருப்புகள், வீட்டு உபயோக பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவையும் மக்கள் தூக்கிவீசுகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...