Saturday, May 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/27/large/997340.jpgதஞ்சாவூர் | இறந்தவரின் உடலை எடுத்து செல்ல அனுமதி மறுப்பால் கலவரமாக மாறிய கிராமம் - போலீஸ் வாகனம் உடைப்பு

தஞ்சாவூர்: பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை, கீழக்கோயில்பத்து கிராமத்தில், இறந்தவரின் உடலை ஒரு தரப்பினரின் தெரு வழியாக கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், கல்வீச்சு, சாலை மறியல், போலீஸ் வாகனம் உடைத்து இருதரப்பினரிடைய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கீழகோவில்பத்து கிராமத்தில், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (53). இவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது உடலை வடபாதி கிராமம், ஆதிதிராவிடர் தெரு வழியாக இன்று மாலை எடுத்து சென்றுள்ளனர்.

அதற்கு, வடபாதி ஆதிதிராவிடர் தெருவினர், திருமண வரவேற்பு விழா நடப்பதால், வேறு வழியாக செல்ல கூறியுள்ளனர். ஆனால், சீனிவாசன் உடலை அந்த தெரு வழியாக தான் எடுத்து செல்வோம் என கூறி, சீனிவாசன் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...