Tuesday, October 31, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/01/large/1147279.jpgமசோதாக்கள், அரசாணைகளை கிடப்பில் போடுகிறார்: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். இதற்கு கால வரம்பு நிர்ணயம் செய்யவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 198 பக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/31/large/1146889.jpgதொழில் நிறுவனங்களுக்கு தொகுப்பு சலுகைகள் வழங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

அது குறித்து அவர் தெரிவித்தது. இன்று முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்ட இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்கெனவே தமிழகத்தில் இயங்கி வரும் நிறுவனங்களும் புதிய முதலீடுகளை தமிழகத்தில் உருவாக்கும் நோக்கில் அரசுக்கு உரிய முன்மொழிவுகளை அளித்திருந்தன. அவர்களுக்கு அமைப்பு முறையினாலான தொகுப்பு சலுகைகளை வழங்குவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, October 30, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/31/large/1146794.jpgகழிவு நீரிலிருந்து மாசுக்களை அகற்றும் திடப்பொருள்: சென்னை ஐஐடி சாதனை

சென்னை: ஜவுளி உற்பத்தி துறைகள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து, கழிவு நீர் மாசுக்கள் அதிகளவு வெளியேற்றப்பட்டு வருகின்றன. இந்த கழிவு நீரில் இருந்து மாசுக்களை அகற்றுவதற்கான அதிநவீன கருவிகளை கண்டறியும் முயற்சியில், சென்னைஐஐடி மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து செயல்பட்டு வந்தன.

ஆராய்ச்சிக்கு சென்னை ஐஐடி பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் தலைமை வகித்தார். இக்குழுவில் சென்னை ஐஐடி வேதிப் பொறியியல் துறையை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுபாஷ்குமார் சர்மா, பி.ரஞ்சனி மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹடாஸ் மாமனே ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/2oxb1ul மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக். 31, நவ.1 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களிலும், 2, 3 தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, October 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/30/large/1146290.jpgமதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 30) பெரும்பாலான இடங்களிலும், நாளை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/29/large/1145771.jpgபுதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு - அமைச்சர்கள், எம்.பி பங்கேற்பு

புதுச்சேரி: வருங்காலத்தில் நாம் நமது நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காப்பதுடன் இந்துக்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். ஆங்கிலேயர் காலத்தில் நமது உண்மை வரலாறு மறைக்கப்பட்ட நிலையில், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வட தமிழக அமைப்புச் செயலர் சரவணன் குறிப்பிட்டார். ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் புதுச்சேரி அமைச்சர்கள், எம்பி ஆகியோரும் பங்கேற்றனர்.

புதுச்சேரி அருகே வீராம்பட்டினத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் புதுச்சேரி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) சார்பில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் 200 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் தேசியச் சிந்தனைகள் நினைவூட்டல் விழா ஆகிய முப்பெரும் விழா வீராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, October 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/29/large/1145708.jpgதீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர 17,587 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தீபாவளியையொட்டி நவ.9, 10, 11 ஆகிய தேதிகளில் 10,595 சிறப்பு பேருந்துகளும் நவ.13 முதல் 15 வரை 6,992 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திரரெட்டி, சிறப்புச் செயலாளர் தி.ந.வெங்கடேஷ், ஆணையர் சண்முகசுந்தரம், காவல்துறை, அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, October 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/28/large/1145299.jpgநீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்: குடியரசு தலைவரிடம் முதல்வர் மனு

சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளிக்குமாறு சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னையில் இருந்து நேற்று பிற்பகல் டெல்லி திரும்பினார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஓராண்டுக்கும் மேலாகநிலுவையில் உள்ள, தமிழ்நாடுஇளங்கலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை(நீட் விலக்கு) மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க கோரி அவரிடம் மனுவை வழங்கினார். அதில் முதல்வர் கூறியுள்ளதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/27/large/1144823.jpgஅரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.17 லட்சத்தை கைப்பற்றி விசாரணை

கரூர்: அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சார்பதிவாளர் சக்திவேலிடமிருந்து கணக்கில் வராத ரூ.1,17,500 கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி க.இமயவரம்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாமியப்பன் மற்றும் உதவி ஆய்வாளர்கள், போலீஸார் என 6 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, October 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/27/large/1144734.jpgபெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் | ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி மறுப்பு

சென்னை: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநரின் புகாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42) கிண்டி சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை அருகே தனியாக பாதசாரி போன்று நடந்து வந்தார். அவர் பெட்ரோல் நிரம்பிய4 பாட்டில்களைக் கொண்டுவந்து, அவற்றை ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சர்தார்படேல் சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்து எறிய முற்பட்டபோது, ஆளுநர் மாளிகை வெளிப்புறத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த தமிழக போலீஸாரால் தடுக்கப்பட்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/27/large/1144727.jpgதமிழக அமைச்சரவை அக்.31-ம் தேதி கூடுகிறது

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அக்.31-ல் கூடுகிறது.

தமிழக தொழில் துறை சார்பில் சென்னையில் வரும் 2024 ஜன.7, 8-ல்உலக முதலீட்டாளர் மாநாடு நடக்க உள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராக உள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/27/large/1144728.jpgபோக்குவரத்து கழகம், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நஷ்டத்தில் இயங்கும்பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு10 சதவீத போனஸ் வழங்கப்படும். இதன்மூலம் மொத்தம் 2.84 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.403 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, October 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/25/large/1143795.jpgபாசி நிதி நிறுவன மோசடி வழக்கு: ஐ.ஜி பிரமோத்குமாரை கைது செய்து ஆஜர்படுத்த கோவை நீதிமன்றம் உத்தரவு

கோவை: பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் லஞ்சம் பெற்ற வழக்கில் ஆஜராகாத ஐ.ஜி பிரமோத்குமாரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என சிபிஐ டிஐஜி-க்கு கோவை சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை (அக்.25) உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2009-ம் ஆண்டில் ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி, இந்த நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் திரும்ப வழங்கப்படவில்லை. இதையடுத்து, முதலீட்டாளர்கள் அளித்த புகார் அடிப்படையில், திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/25/large/1143797.jpgமேல்முறையீடு நிலுவையில் இருந்தாலும் ஆயுள் கைதியின் பரோல் கோரிக்கையை பரிசீலிக்கலாம்: உயர் நீதிமன்றம்

மதுரை: ஆயுள் தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருந்தாலும் ஆயுள் கைதியின் பரோல் கோரிக்கையை பரிசீலிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த லதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் திருப்பதிராஜன் குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளார். அவருக்கு 40 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்தோம். பரோல் விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்து உத்தரவிட்டனர். அந்த உத்தரவை ரத்து செய்து போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் 40 நாள் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, October 24, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/25/large/1143683.jpgஅக்.27-ல் வாக்காளர் பட்டியல் திருத்த பணி: தலைமை செயலகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்த பணி வரும் 27-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் இன்று நடக்கிறது.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ம் தேதி வெளியிடப்பட்டு, அன்றைய தினமே வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடங்குகிறது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடக்கிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/25/large/1143702.jpgசென்னை வண்டலூர் அருகே தண்டவாளத்தில் விளையாடியதால் ரயில் மோதி 3 மாற்றுத் திறன் சிறுவர்கள் உயிரிழப்பு

ஊரப்பாக்கம்: சென்னை ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 மாற்றுத் திறன் சிறுவர்கள், மின்சார ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னை புறநகர் பகுதியான ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருபவர்கள் அனுமந்தப்பா, ஜம்பன்னா சகோதரர்கள். இவர்கள் கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியை சேர்ந்தவர்கள்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/25/large/1143703.jpgடிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம்: அரசு பரிந்துரையை ஆளுநர் மீண்டும் நிராகரிப்பு

சென்னை: ‘டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்கும் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, வேறொருவரை தலைவராக பரிந்துரைக்க வேண்டும்’ என்று தெரிவித்து, இதுதொடர்பான கோப்பை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக டிஜிபியாக இருந்து கடந்த ஜூன் 30-ம் தேதி ஓய்வுபெற்ற சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அத்துடன் அதன் உறுப்பினர்களாகவும் 8 பேரை புதிதாக நியமித்து, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/MN5AjyT ஆண்டு பணியில் 12 முறை இடமாறுதல்: வருவாய் ஆய்வாளரை மீண்டும் பணியில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பணியில் சேர்ந்த 13 ஆண்டுகளில் 12 முறை இடமாறுதல் செய்யப்பட்டு இறுதியில் பணி நீக்கம் செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளரை மீண்டும் பணியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு. என் தந்தை விஸ்வாம்பரன் கிராம உதவியாளராக பணிபுரித்தார். அவர் பணியில் இருந்தபோது இறந்தார். இதனால் எனக்கு கருணை அடிப்படையில் 13.12.2006-ல் கிராம உதவியாளர் பணி வழங்கப்பட்டது. 13 ஆண்டுகளில் என்னை 12 முறை இடமாறுதல் செய்தனர். வட்ட வழங்கல் துறையில் பறக்கும் படையில் சிறப்பு வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தேன்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, October 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/23/large/1143169.jpgதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் பாராதீப் நகருக்கு தெற்கே சுமார் 590 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் டிகா நகரத்துக்கு தெற்கே சுமார் 740 கி.மீ. தொலைவிலும் நிலவுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, October 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/22/large/1142792.jpgதேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை இணைத்து நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை இணைத்து நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டிட, சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பை இணைத்து நடத்திட வேண்டும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, October 20, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/21/large/1142395.jpg‘ககன்யான்’ திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனை: ஆளில்லா மாதிரி விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனையாக, டிவி-டி1 ராக்கெட் மூலம் ஆளில்லா மாதிரி விண்கலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்படுகிறது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டிவருகிறது. ‘விண்ணுக்கு செல்லும் வாகனம்’ என்று பொருள்படும் வகையில், ‘ககன்யான்’ என்று இத்திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 400 கி.மீ. தூரம் கொண்ட சுற்றுவட்ட பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வரும் இத்திட்டம் வரும் 2025-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு முன்பு 3 கட்ட பரிசோதனைகளை நடத்த இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/21/large/1142012.jpgஆன்மிக உலகுக்கு பேரிழப்பு: பங்காரு அடிகளார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மறைவு ஆன்மிக உலகுக்கு பேரிழப்பு என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமான செய்தி வேதனை தருகிறது. கோயில் கருவறைகளில் பெண்களும் சென்று வழிபாடு நடத்தும் முறையைக் கொண்டு வந்து, பாமர மக்கள்கூட அம்மன் சந்நிதானத்தில் சென்று வழிபாடு நடத்தும் வகையில் புரட்சி செய்தவர். அவரது மறைவு ஆன்மிக உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பு.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/21/large/1142009.jpgதமிழக அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல், தமிழக அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க கோயில் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தவர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் (82). வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் மறைந்தார். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் உள்ள சித்தர்பீட பக்தர்கள் அவரது மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/20/large/1141893.jpgககன்யான் மாதிரி விண்கலம்: டிவி-டி1 ராக்கெட்டில் நாளை ஏவப்படுகிறது

சென்னை: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் நாளை (அக்.21) விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டிவருகிறது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்கீழ் தரையில் இருந்து 400 கி.மீட்டர் தூரம் சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்துவர இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்குமுன் 3 கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, October 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/19/large/1141482.jpgநடிகர் பாபி சிம்ஹா வழக்கில் 4 பேருக்கு முன்ஜாமீன்

மதுரை: நடிகர் பாபி சிம்ஹா வழக்கில் 4 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா. இவருக்கு கொடைக்கானல் பேத்துப்பாறையில் பங்களா உள்ளது. இந்த பங்களாவை புதுப்பிக்கும் பணியை ஜமீர் என்பவரிடம் பாபி சிம்ஹா வழங்கினார். பின்னர் பாபி சிம்ஹா, ஜமீர் இடையே பிரச்சினை ஏற்பட்டு கட்டிடப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பங்களா புதுப்பிக்கும் பணிக்காக ரூ.1.70 கோடி பெற்றனர். இன்னும் ரூ.30 லட்சம் கேட்கின்றனர். அது குறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர் என ஜமீர் உட்பட பலர் மீது கொடைக்கானல் போலீஸில் பாபி சிம்ஹா புகார் அளித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, October 18, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/19/large/1140888.jpgமருந்து உற்பத்தி, இறக்குமதியில் வரி ஏய்ப்பு நடந்ததாக புகார்: பார்மா நிறுவனங்களில் வருமான வரி துறை சோதனை

சென்னை: மருந்து உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, சென்னையில் அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மருந்து, ரசாயன பொருட்கள் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யும் சில நிறுவனங்கள் தங்களது வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/19/large/1140887.jpgஅரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வங்கக்கடலிலும் நாளை உருவாக வாய்ப்பு

சென்னை: அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வங்கக்கடலிலும் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இது வரும் 21-ம் தேதி மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/19/large/1140886.jpgமத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பலன் அடைவார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/19/large/1140884.jpgசிவகாசி மாநகராட்சியில் கவுன்சிலர்களின் அழுத்தம் காரணமாக ஆணையர் பணியிட மாற்றம்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் ஆளும் திமுக கவுன்சிலர்களின் அழுத்தம் காரணமாக பொறுப்பேற்ற 6 மாதத்திற்கு உள்ளாகவே ஆணையர் சங்கரன் இடமாற்றம் செய்யப்பட்டார். சிவகாசி மாநகராட்சியில் ஏற்கனவே பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி மீண்டும் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது இணை இயக்குநர் நிலையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சுமூகமாக நடத்தி முடித்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, October 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/18/large/1140778.jpgசிவகாசி அருகே பட்டாசு கடை, ஆலையில் வெடி விபத்துகள்: 12 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு

சிவகாசி: சிவகாசி அருகே ரெங்கபாளையம் கம்மாபட்டியில் பட்டாசு பரிசுப் பெட்டி பேக்கிங் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மாரனேரி கீச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பட்டாசு மருந்து கலவை தயாரித்தபோது, வெடி விபத்து ஏற்பட்டதில், ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்காகுளத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் ரெங்கபாளையம் கம்மாபட்டியில் கனிஷ்கர் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு விதிமீறலில் ஈடுபட்டதால் இந்த ஆலை உரிமம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், ஆலை அருகே மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்று, பட்டாசு விற்பனை கடையைநடத்தி வந்தார். இந்த கடையின் பின்புறம், விதியை மீறி தகர கொட்டகை அமைத்து, பட்டாசு பரிசுப் பெட்டி (‘கிஃப்ட் பாக்ஸ்’) பேக்கிங் செய்யும் பணியை மேற்கொண்டு வந்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/17/large/1140274.jpgநியோமேக்ஸ் மோசடி வழக்கை ரத்து செய்ய அரசு வழக்கறிஞர் ஆட்சேபம்

மதுரை: நியோமேக்ஸ் மோசடி வழக்கை ரத்து செய்ய அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோமக்ஸ்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, October 16, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/17/large/1140181.jpgசிறு வணிகர்கள், நிறுவனங்களுக்கான ‘சமாதான்’ திட்டம் தொடங்கியது: வரி நிலுவை ரத்துக்கான சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: வணிகர்கள், நிறுவனங்களுக்கான வணிகவரி நிலுவை மேல்முறையீடு பிரச்சினைகளுக்கு முடிவுகாணும் வகையில் தமிழக அரசு அறிவித்த புதிய‘சமாதான்’ திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. சிறு வணிகர்களுக்கு வரி நிலுவை ரத்து சான்றிதழ்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

வணிகர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வணிகவரித் துறை இடையேஉருவாகும் வணிகவரி நிலுவை, மேல்முறையீடு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசால் ‘சமாதான்’ திட்டம் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு அமல்படுத்தப்படுகிறது. கடந்த2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் வரி நிலுவைதொடர்பாக சமாதான் திட்டம் எதுவும்அறிவிக்கப்படவில்லை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/17/large/1139652.jpgகுழந்தை விற்பனை குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உறுதி

நாமக்கல்: குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக விசாரிக்க முதற்கட்ட நடவடிக்கையாக சிறப்பு குழு அமைக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச. உமா தெரிவித்தார்.

திருச்செங்கோடு அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக எழுந்த புகாரில் இடைத்தரகர் லோகாம்பாள் மற்றும் அரசு பெண் மருத்துவர் அனுராதா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச. உமா செய்தியாளர்களிடம் கூறியதாவது.

கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கக்கூடிய எந்த வன்முறையையும், குற்றச்செயல்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஆணையிட்டார். எங்களுக்கு ஒரு நாள் முன்னதாக பொதுமக்களிடம் இருந்து ஒரு துருப்பு சீட்டு போல ஒரு தகவல் கிடைத்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/16/large/1139649.jpgதமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியட்டுள்ளார்.

வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். வணிக வரித்துறை ஆணையராக ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராக சமயமூர்த்தி நியமனம். கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக கோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/16/large/1139648.jpgகுழந்தை விற்பனை விவகாரம் | திருச்செங்கோடு அரசு பெண் மருத்துவரின் கிளினிக்குக்கு சீல்

நாமக்கல்: குழந்தை விற்பனை விவகாரத்தில் கைதான திருச்செங்கோடு அரசு மருத்துவமனை பெண் மகப்பேறு மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி நாகதேவிக்கு சமீபத்தில் பிறந்த மூன்றாவது பெண் குழந்தையை விற்பனை செய்வதற்காக பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திருச்செங்கோடு அரசு பெண் மகப்பேறு மருத்துவர் அனுராதா மற்றும் குழந்தையை விற்பனை செய்யும் புரோக்கர் லோகாம்பாள் ஆகிய இருவரையும் திருச்செங்கோடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தவிர பெண் மருத்துவர் அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, October 15, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/16/large/1139549.jpgசட்டப்பேரவையில் அறிவித்தபடி அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 92-வது பிறந்தநாளான நேற்று தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறை சார்பில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

‘இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இளைஞர்கள், மாணவர்களுக்கு பெரும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைக்கப்படும்’ என்று, கடந்த 2021-22-ம் ஆண்டுக்கான செய்தி, மக்கள் தொடர்பு துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/16/large/1139046.jpgஅடுத்த 15 ஆண்டுகளுக்கு AI சார்ந்த துறைகளில் அதிக வாய்ப்பு: அண்ணா பல்கலை துணைவேந்தர் பேச்சு

மதுரை: அடுத்த 15 ஆண்டுக்கு செயற்கை நுண்ணறிவு துறைகளில் அதிக வாய்ப்பு இருக்கும் என தியாகராசர் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் பேசினார்.

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் 2022-ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பழனிநாத ராஜா வரவேற்றார். கல்லூரி தலைவர், தாளாளர் ஹரி தியாகராசன் தலைமை வகித்து, விழாவை தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, உலகளவில் ‘டைம்ஸ் உயர் கல்வி’ நடத்திய ஆய்வில் இக்கல்லூரி 1201-ல் இருந்து 1500 இடையேயான தர நிலையை பெற்றுள்ளது. இந்த தரவரிசையில் இந்தியாவில் இருந்து வெகு சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஐடி துறையில் வேலை வாய்ப்பு சற்று குறைந்தாலும், பிற துறைகளில் வேலை உள்ளது. இருப்பினும், உயர் கல்விக்கு செல்லவேண்டும், என்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/15/large/1139043.jpgசிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகள் பறிப்பா? - தமிழக காவல் துறை மறுப்பு

சென்னை: தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள், அவர்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். இந்த சூழலில் அது தொடர்பாக தமிழக காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

வேலுார் மத்திய சிறையில் சிறைவாசிகளின் மத உரிமைகள் மறுக்கப்படுவதாக அண்மையில் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் விஷமத்தனமான குற்றச்சாட்டு ஆகும். வேலுார் மத்திய சிறை உட்பட தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளும் எவ்வித சிரமுமின்றி தங்கள் மத வழிபாட்டைத் தொடரும் வகையில் சமமான மத வழிபாட்டு உரிமையை பெற்றுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, October 14, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/15/large/1138985.jpgஅண்ணா, கருணாநிதி ஆட்சியில் மகளிர் முன்னேற்றம்: திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி புகழாரம்

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உண்மையாக உழைப்போம், வெற்றி நமதே என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு திமுக சார்பில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுக மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி முன்னிலை வகித்தார். மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/15/large/1138560.jpg“பெண்களுக்கான உரிமைகளை மோடி அரசு சீரழிக்கிறது” - சோனியா காந்தி பேச்சு @ திமுகவின் ‘மகளிர் உரிமை மாநாடு’

சென்னை: "கடந்த 70 ஆண்டுகளில் நாம் பெற்று தந்த உரிமைகள் மற்றும் நல்ல முயற்சிகளை சீரழிக்கின்ற வகையில் 9 ஆண்டுகால மோடி அரசின் நடவடிக்கைகள் இருப்பது மிகப்பெரிய துரதிஷ்டம்" என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி, "பஞ்சாயத்து ராஜ் சட்டத்திலும், உள்ளூர் ஆட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை ராஜீவ் காந்தி கொண்டு வந்தார். மிகப்பெரிய சமூக புரட்சிக்கு வித்திட்ட அத்திட்டம்தான் தற்போது மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தின் முன்னெடுப்பாக அமைந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/15/large/1138559.jpg“மகளிர் இடஒதுக்கீடு 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வராது” - கனிமொழி பேச்சு @ திமுகவின் ‘மகளிர் உரிமை மாநாடு’

சென்னை: "பாஜக ஆட்சியில் நாட்டில் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை. மணிப்பூரில் முகாம்களில், பெண்களும், குழந்தைகளும் வாழமுடியாத நிலையில், வாழ்ந்து கொண்டிருந்தார்கள்." என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கனிமொழி முன்னிலையில் நடந்த இந்த மாநாட்டில், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உட்பட இந்தியா கூட்டணியின் பெண் தலைவர்கள், சுப்ரியா சுலே, சுஷ்மிதா தேவ், மெகபூபா முஃப்தி, லேஷி சிங், ராக்கி பிர்லா, ஆனி ராஜா, சுபாஷினி அலி, டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, October 13, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/14/large/1138457.jpgஇஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை, கோவை வந்தனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயரதிகாரிகள் வரவேற்பு

சென்னை: இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை, கோவைக்கு நேற்று வந்தனர். இவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

போர் காரணமாக இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/14/large/1138033.jpgதிமுக ‘மகளிர் உரிமை மாநாடு’ | சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி: முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார் 

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு இன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது அமைச்சர்கள் நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி மற்றும் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் உடனிருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/13/large/1138030.jpgஒட்டன்சத்திரம் அருகே ஓட்டுநர் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த அதிமுக நிர்வாகி கைது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிகையில் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜை வெள்ளிக்கிழமை (அக்.13) சென்னையில் போலீஸார் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிகை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவர் ஒட்டன்சத்திரம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜ் என்பவரிடம் கார் ஓட்டுநராகவும், அவருக்கு சொந்தமான பால் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆக.17-ம் தேதி மர்மமான முறையில் சுரேஷ்குமார் இறந்தார். அவரது உடலை, அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் (44), அம்பிளிகை மயானத்துக்கு கொண்டு சென்று இரவோடு இரவாக எரித்தார். இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் அம்பிளிகை போலீஸில் புகார் அளித்ததன் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, October 12, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/13/large/1137928.jpgலாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 7 இடங்களில் வருமான வரி, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 7 இடங்களில் வருமான வரி, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று வருமானம் ஈட்டியதாக கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, 2019-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதையும், அந்த பணத்தை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மார்ட்டின் முதலீடு செய்திருப்பதையும் கண்டறிந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/13/large/1137959.jpgவடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக, அக்டோபர் மாத இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று விலகாத நிலையில், வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கேட்டபோது, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/13/large/1137648.jpgகடலூர் | சிப்காட் தனியார் ரசாயன தொழிற்சாலையில் விபத்து

கடலூர்: கடலூர் மாவட்டம் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் விபத்து. இந்த விபத்து காரணமாக காற்றில் துர்நாற்றம் வீசுவதாக தகவல்.

தனியார் ரசாயன தொழிற்சாலையின் பாய்லருக்கு செல்லும் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் அதிலிருந்து வெளியேறிய புகையினால் அப்பகுதி புகை மூட்டமாக காட்சி அளித்தது. துர்நாற்றம் வீசும் நிலையில் கண் எரிச்சல் மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டதாக சொல்லி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/12/large/1137644.jpg“எழுத்தும் கருத்தும்...” - மதுரை புத்தகத் திருவிழாவில் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

மதுரை: ‘‘எழுத்தும், கருத்தும்தான் சமூகத்தில் புதியனவற்றை உருவாக்கும் கருவிகள்’’ என்று புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத்திருவிழா இன்று தொடங்கியது. இந்த புத்தகத்திருவிழா வரும் 22ஆம் தேதி வரை நடக்கிறது. தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புத்தகத்திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். எம்பி.சு.வெங்கடேசன், ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் மற்றும் எழுத்தாளர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, October 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/12/large/1137547.jpgசட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்: வாகனங்களுக்கான வரி 2% உயர்வு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான வரி, வாழ்நாள் வரி உயர்வு தொடர்பான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை தொடர்பான மசோதாவை அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து துறையில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு வரிகள் உயர்த்தப்படவில்லை. எனவே,வரி விதிப்பு முறைகளில் திருத்தம்செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அனைத்து வகை வாகனங்களுக்கும் புதிய வரி நிர்ணயிக்கப்படுகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/11/large/1137174.jpgபுதுச்சேரி | ஆதிதிராவிடர் நலத்துறை பெயர்ப்பலகை நீல நிறத்திலிருந்து காவிக்கு திடீர் மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வளாக பெயர்ப்பலகையின் நிறத்தை நீல நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றியமைத்ததற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன கோஷமும் எழுப்பினர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியின் நலத்துறையின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தின் முன்பு அத்துறையின் பெயர்ப்பலகையானது நீலம் மற்றும் வெள்ளை நிற எழுத்துகளால் வைக்கப்பட்டிருந்தது. அதில் அம்பேத்கர் படமும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பழைய பெயர்ப்பலகையை எடுத்துவிட்டு புதிய பெயர்ப்பலகை நேற்று மாற்றப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...