
சென்னை: "கடந்த 70 ஆண்டுகளில் நாம் பெற்று தந்த உரிமைகள் மற்றும் நல்ல முயற்சிகளை சீரழிக்கின்ற வகையில் 9 ஆண்டுகால மோடி அரசின் நடவடிக்கைகள் இருப்பது மிகப்பெரிய துரதிஷ்டம்" என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி, "பஞ்சாயத்து ராஜ் சட்டத்திலும், உள்ளூர் ஆட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை ராஜீவ் காந்தி கொண்டு வந்தார். மிகப்பெரிய சமூக புரட்சிக்கு வித்திட்ட அத்திட்டம்தான் தற்போது மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தின் முன்னெடுப்பாக அமைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்