Wednesday, January 31, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/01/xlarge/1191613.jpgஇபிஎஸ் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கு: மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இபிஎஸ் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை மாஸ்டர் நீதிமன்றம் மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/01/xlarge/1191610.jpgசட்டப்பேரவை கூட்டம் பிப்.12-ல் தொடக்கம்: பட்ஜெட் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரியில் தொடங்க இருந்த நிலையில், வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதல் உள்ளிட்ட காரணங்களால் பேரவையின் முதல் கூட்டம் தள்ளிப்போனது. இதற்கிடையே, கடந்த ஆண்டு தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரும் முடித்து வைக்கப்படாமல் இருந்தது. ஆளுநர் - தமிழக அரசு இடையிலான பனிப்போர் காரணமாக, ஆளுநர் உரை இல்லாமலே கூட்டத்தொடரை ஆரம்பிக்கலாமா என்ற பேச்சும் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/01/xlarge/1191609.jpgகுடியுரிமை சட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதை அரசு அனுமதிக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) 7 நாட்களில் அமல்படுத்தப்படும் என்று மத்திய பாஜக இணை அமைச்சர் கூறியுள்ளார். இலங்கை தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதா, சட்டம் ஆனதற்கு முழு முதல் காரணமே, நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, January 30, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/31/xlarge/1191507.jpgகுற்ற வழக்கில் 230 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி எவ்வாறு அமைச்சராக நீடிக்கிறார்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: குற்ற வழக்கில் கடந்த 230 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி எந்தஅடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஜாமீன் மனு குறித்து அமலாக்கத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பைபாஸ் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு, சென்னை புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே நிராகரித்து தள்ளுபடி செய்தது. இதையடுத்து, 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/30/xlarge/1191050.jpgமதுரை கலைஞர் நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடக்கம் - இனி வீட்டிற்கு புத்தங்களை எடுத்து சென்று படிக்கலாம்!

மதுரை: மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

நத்தம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.215 கோடியில் மிக பிரம்மாண்டமாக இந்த நூலகம் 6 தளங்களுடன் நான்கரை லட்சம் புத்தங்கங்களுடன் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில், ரூ.60 கோடிக்கு புத்தகங்கள், ரூ.18 கோடிக்கு தளவாடப் பொருட்கள், புத்தகங்களை அடுக்கி வைக்கத் தேவையான ரேக்குகள் மற்றும் கட்டுமானத்துக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது. நவீன கட்டுமான தொழில்நுட்பத்தில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் தானியங்கி டிஜிட்டல் நூலகமாக இந்த நூலகம் செயல்பட தொடங்கி இருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, January 29, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/30/xlarge/1190977.jpgதமிழகத்தில் 750 சதுர மீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு 8 சமையலறை வரை பணிமுடிப்பு சான்றிதழ் தேவையில்லை: அமைச்சர் முத்துசாமி தகவல்

சென்னை: தமிழகத்தில் தற்போது 750 சதுரமீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு 3 சமையலறை வரை பணிமுடிப்பு சான்றிதழ் தேவையில்லை எனும் நடைமுறையை மாற்றி 8 சமையலறை வரை சான்றிதழ் தேவையில்லை என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடய்) தமிழக பிரிவின் சார்பில்,‘ ஸ்டேட்கான்’ எனப்படும் 2 நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, சென்னையில் நேற்று தொடங்கியது. இதனை வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நகர ஊரமைப்புத் துறை இயக்குநர் பி.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, கிரெடய் தமிழ்நாடு மற்றும் நைட் பிராங்க் இணைந்து தமிழகத்தின் பொருளாதார ஆற்றல் மற்றும் எதிர்கால திறன் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/30/xlarge/1190970.jpgசெந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை: காவல் 17-வது முறையாக நீட்டிப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன்நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னைபுழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/29/xlarge/1190546.jpg‘வெண்மணி கிராமத்தில் 127 பயனாளிகளுக்கு வீடு கட்ட அனுமதி’ - ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி 



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, January 28, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/29/xlarge/1190458.jpgமக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் முதல்கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் முடிவு எட்டப்படாததால் பிப்.9-ம் தேதிக்கு பிறகு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் நியமித்துள்ள கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோர் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/29/xlarge/1189847.jpg‘வன்மம் கலந்த நோக்கம்’ - காந்தி குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/28/xlarge/1189846.jpg“தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும்” - எல்.முருகன் @ நாமக்கல்

நாமக்கல்: மக்களவை தேர்தலில் 40 இடங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே பேசினார். இந்த பேச்சு, நாமக்கல் நகர பாஜக சார்பில் நாமக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை, கால்நடை பால்வளம், மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு பின் இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/28/xlarge/1189845.jpg“அரசியல் எளிதானது அல்ல; கடும் உழைப்பு தேவை” - குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் @ புதுச்சேரி

புதுச்சேரி: அரசியல் எளிதானது அல்ல; கடும் உழைப்பு தேவை என பல்கலைக்கழக மாணவர்களிடம் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உரையாற்றினார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவர் வந்தடைந்தார்.

அவரை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அங்கு, ‘பாரதம் @ 2047’ என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் அறிஞர்களுடன் இன்று இரவு கலந்துரையாடி பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, January 27, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/28/xlarge/1189788.jpgதமிழகத்துக்கு மேலும் புதிய முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் பயணம்: பிப்.7-ம் தேதி சென்னை திரும்புகிறார்

சென்னை: தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஸ்பெயின் புறப்பட்டுச் சென்றார்.

தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் வகையில், ஜனவரி முதல் வாரத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மொத்தம் ரூ.6,64,180 கோடிக்கான 631 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/0KfTzmS மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

சென்னை: சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தோட்டக்கலைத் துறை இயக்குனராக இருந்த ஆர். பிருந்தா தேவி சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித் துறை துணைச் செயலாளராக இருந்த கே.தர்பகராஜ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த முருகேஷ் வேளாண் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, January 26, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/27/xlarge/1189314.jpgஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: அமைச்சர்கள், அதிமுக, பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை: ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக, பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

குடியரசு தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை தேநீர் விருந்துநடந்தது. முதல்வர், அமைச்சர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் மீதான அதிருப்தியால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/27/xlarge/1189315.jpgஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை: முப்படைகள், காவல் துறை அணிவகுப்பு

சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைத்து, முப்படையினர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நாட்டின் 75-வது குடியரசு தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின விழாநடைபெற்றது. முதலில், காலை 7.52 மணிக்கு சென்னை போக்குவரத்து காவலர்களின் புல்லட் அணிவகுப்புடன் முதல்வர் ஸ்டாலின், வாலாஜா சாலை வழியாக விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவரை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். இதைத் தொடர்ந்து, விமானப்படை வீரர்களின் புல்லட் அணிவகுப்புடன் ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். அவரை முதல்வர் வரவேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/27/xlarge/1188996.jpg“தமிழகத்தில் பாஜக என்பது பூஜ்ஜியம்” - விசிக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருச்சி: திருச்சி சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு வெள்ளிக்கிழமை (ஜன.26) மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.

“திருச்சியில் கடல் போல திரண்டு இருக்கும் திருமாவின் சிறுத்தைகளே. இப்படை தோற்கின் எப்படி வெல்லும் என்பதற்கு இலக்கணமாக தீரர்கள் கோட்டமாம் அருமை சகோதரர் திருமாவளவனின் படை வீரர்கள் ஜனநாயகம் காக்க கூடி இருக்கிறீர்கள். அவர் சட்டக் கல்லூரி மாணவராக திமுக மாணவர் அணியில் பணியாற்றிய காலத்தில் இருந்தே தெரியும். அப்போதே மேடைகளில் அவரது பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும். நாள்தோறும் கொள்கை வலு பெரும் இளம் காளையாக தான் இன்று ஜனநாயகம் காக்கும் இந்த மாநாட்டை கூட்டியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/26/xlarge/1188994.jpg“பத்மஸ்ரீ விருது கிராமிய கலைஞர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்” - நாட்டுப்புற நடனக் கலைஞர் பத்ரப்பன் தகவல்

கோவை: மத்திய அரசு வழங்கிய, பத்மஸ்ரீ விருது கிராமிய கலைஞர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த நாட்டுப்புற நடனக் கலைஞர் பத்ரப்பன் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகள் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தாசம்பாளையத்தைச் சேர்ந்த வள்ளி கும்மி நாட்டுப்புற நடனக் கலைஞரான பத்ரப்பன் (87) என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் வள்ளி கும்மி நாட்டுப்புற நடனக் கலையை இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க பாடுபட்டு வருவதை ஊக்கப்படுத்தியும், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு கற்றுத் தருவதையும், பாராட்டும் வகையில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. பத்ரப்பனுக்கு மனைவி, மகன், மகள் இருந்தனர். மனைவி, மகன் உடல்நலக்குறைவால் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டனர். தற்போது மகள் வீட்டில் பத்ரப்பன் வசித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, January 25, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/26/xlarge/1188932.jpgதமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 24 பேருக்கு குடியரசு தலைவர் விருது

சென்னை: குடியரசு தினத்தையொட்டி தமிழக காவல்துறையைச் சேர்ந்த 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீஸாருக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் என ஆண்டுக்கு இருமுறை விருதுகள் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையில் 24 பேருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் மற்றும் மற்றும் மெச்சத் தகுந்த பணிக்கான விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/26/xlarge/1188926.jpgஇன்று 75-வது குடியரசு தினம் | ஆளுநர் ரவி கொடியேற்றுகிறார்; விருதுகளை வழங்குகிறார் முதல்வர்

சென்னை: குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைக்கிறார். பல்வேறு விருதுகள், பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 8 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைக்கிறார். முன்னதாக, 7.50 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின், போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடனும், அவரை தொடர்ந்து ஆளுநர் ரவி, ராணுவ வாகன அணிவகுப்புடனும் விழா நடைபெறும் இடத்துக்கு வருவார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/26/xlarge/1188927.jpgஅங்கக விவசாயிகள் 3 பேருக்கு நம்மாழ்வார் விருது

சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, 3 அங்கக விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2023-24-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ‘‘வேளாண்மை வளர்ச்சிதிட்டத்தின்கீழ் அங்கக(ஆர்கானிக்) வேளாண்மையில் ஈடுபடுவதுடன், பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் 3 அங்கக விவசாயிகளுக்கு சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருதுடன், பரிசுத்தொகை, சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும்’’ என்று அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/26/xlarge/1188564.jpgவிஜயகாந்துக்கு பத்ம பூஷண் - தமிழகத்தில் யார் யாருக்கு பத்ம விருதுகள்?

சென்னை: ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, January 24, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/25/xlarge/1188483.jpgமீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு மூலம் மீனவர் பிரச்சினையை தீர்க்கவும், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: மீன்பிடிக்க 2 படகுகளில் சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த ஜன.22-ல் கைது செய்துள்ளனர். இத்தகைய போக்கு, பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/25/xlarge/1188484.jpgபோயஸ் தோட்டத்தில் மீண்டும் குடியேறிய சசிகலா: கோ பூஜை நடத்தி வழிபாடு செய்தார்

சென்னை: சென்னையில் உள்ள போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த சசிகலா, மீண்டும் அதேபகுதியில் உள்ள புதிய வீட்டில் கோ பூஜை செய்து நேற்று குடியேறினார்.

எம்ஜிஆர் மறைவுக்கு முன்பிருந்தே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன், அவரது சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தில் வசித்து வந்தவர் சசிகலா. ஜெயலலிதா முதல்வரானது முதல், அவர் மறைவு வரை அதே வீட்டில் வாழ்ந்து வந்தார். அப்பகுதி இடம்பெற்றுள்ள ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளர் பட்டியலிலும் தனது பெயரை சேர்த்துக்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/25/xlarge/1188476.jpgசென்னையில் 2 நாட்கள் ‘ட்ரோன்’ பறக்க தடை: மெரினாவில் 5 அடுக்கு பாதுகாப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னையில் பாதுகாப்பு பணியில் 7,500 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். விழா நடைபெறும் மெரினா கடற்கரை சாலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (26-ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் விழாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறார். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/25/xlarge/1188474.jpgகிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கும் விவகாரம்: அரசு உத்தரவை ஏற்க உரிமையாளர்கள் மறுப்பு - கோயம்பேட்டில் போலீஸ் குவிப்பு

சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க மறுத்து சிஎம்டிஏ, காவல் துறை அதிகாரிகளுடன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக அரசும், அவ்வாறு இயக்க அவகாசம் தர வேண்டும் என்று உரிமையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, ஜன.24-ம் தேதி (நேற்று) முதல் ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சிஎம்டிஏ அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டனர். மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, January 23, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/23/xlarge/1187495.jpgஶ்ரீவில்லிபுத்தூர் | இடியும் நிலையிலுள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் பயிலும் குழந்தைகள் - சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் இடியும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் கல்வி பயின்று வருவதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மடவார் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் சேதமடைந்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. தற்போது அங்கன்வாடி மையத்தின் சமையல் கூடத்தில் கான்கிரீட் மேற்கூரையும், வகுப்பறையில் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையும் உள்ளது. சமயலறை கட்டிடத்தின் மேல் இரு ஆலமரங்கள் வளர்ந்துள்ளது. மரத்தின் வேர்கள் சுவரில் வளர்ந்து, வகுப்பறையின் கரும்பலகை மற்றும் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/23/xlarge/1187494.jpgகுமரி நாம் தமிழர் நிர்வாகி கொலை வழக்கு | தேவாலய வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் தடை

மதுரை: குமரி மாவட்டம் மயிலோடு தேவாலயத்தில் கொலையானவர் உடலை ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யக்கூடாது, கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலோடு பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஜோஸ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மயிலோடு பகுதியில் செயின்ட் மைக்கேல் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்தவர்கள் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையுடன் உள்ளனர். சேவியர் குமார் என்பவர் ஆலயத்தில் தேவையற்ற பிரச்சனைகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வந்தார். இதனால் அவரை ஜன. 20ல் கிராம மக்கள் தாக்கினர். இதில் சேவியர்குமார் உயிரிழந்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, January 22, 2024

https://ift.tt/qINOQMr வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்: தமிழக பொது சுகாதாரத் துறை

சென்னை: இந்தியாவில் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதால் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குப் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடங்கப்படுகிறது என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

இந்தியாவில் 2030-ம் ஆண்டுக்குள் இதயம், புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால், தொற்றா நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/23/xlarge/1187393.jpgஇறுதி பட்டியலின்படி தமிழகத்தில் 6.19 கோடி வாக்காளர்கள்: கடந்த ஆண்டைவிட 7.61 லட்சம் பேர் அதிகம்

சென்னை: இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 90,348 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு வெளியிட்ட வரைவு வாக்காளர்கள் எண்ணிக்கையைவிட 7.61 லட்சம் பேர் அதிகமாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் சத்யபிரத சாஹு கூறியதாவது: தேர்தல் ஆணைய உத்தரவின்படி தமிழகத்தில், 2024 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் 2023 அக்.27-ம்தேதி தொடங்கியது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அக்.27 முதல், டிச.9-ம் தேதி வரை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, January 21, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/22/xlarge/1186945.jpg“திமுகவை அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்தும் செல்லும் ஆற்றல் உதயநிதிக்கு உண்டு” - துரைமுருகன் @ சேலம் இளைஞரணி மாநாடு

சேலம்: திமுக இளைஞரணி மாநாட்டின் போது, "திமுகவை அடுத்து வழிநடத்திட உதயநிதிக்கு ஆற்றல் உண்டு" என குறிப்பிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர், கொறாடா ஆகியோர் பேசினர்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில், "சென்னையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொண்டு இருக்கின்றேன். அதன் பின்னர், திமுகவின் அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்டு உள்ளேன். ஆனால், தற்போது நடைபெற்ற இளைஞரணி மாநாடு போல பெரிய பிரம்மாண்ட மாநாட்டை கண்டது இல்லை. நூறு ஆண்டு கால திராவிட இயக்கத்தில் கருணாநிதி 50 ஆண்டுகள் தலைவராக இருந்தார். இப்போது, ஸ்டாலின் தலைவராக இருக்கிறார். இங்கு பேசியவர்கள், திமுகவை அடுத்த நூற்றாண்டிற்கு அழைத்து செல்லும் ஆற்றல் உதயநிதிக்கு உண்டு என குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். அதற்கான தகுதியும், உரிமையும் எனக்கு உண்டு." என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/22/xlarge/1186432.jpgபுதிய அரங்கில் 5 நாட்களா ஜல்லிக்கட்டு? - குழப்பத்தில் மதுரை மாவட்ட அதிகாரிகள்

மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கும் புதிய ஜல்லிக்கட்டு அரங்கில் ஆரம்பத்தில் 5 நாட்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக அறிவிக்கபட்டநிலையில் தற்போது ஒரு நாள் மட்டும் போட்டியை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் எதிர்ப்பால் அந்த அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டி ஒரு நாளா? 5 நாட்களா? என முடிவெடுக்க முடியாமல் மாவட்ட நிர்வாகிகள் குழப்பமடைந்துள்ளனர்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பார்க்க உள்நாட்டு, வெளிநாட்டு பார்வையாளர்கள் திரண்டனர். ஆனால், அவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு பார்க்கக்கூடிய வகையில் கேலரிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதனால், ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிகழ்வே நடப்பாண்டு வரை தொடர்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/21/xlarge/1186431.jpg“அதிமுகவின் இரு பெரும் தலைவர்களின் கோட்டை சேலம்” - எடப்பாடி பழனிசாமி பேச்சு

மேட்டூர்: அதிமுகவின் இரு பெரும் தலைவர்களின் கோட்டை சேலம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லிகுந்தம், சாத்தப்பாடி பகுதிகளில் மேச்சேரி ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட அதிமுக கொடியை இன்று (ஜனவரி 21) அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு ஏற்றி வைத்தார். முன்னதாக, அவருக்கு, கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மல்லிகுந்தத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/21/xlarge/1186429.jpg“அமலாக்கத் துறை மூலம் திமுகவை மிரட்டுகிறார்கள்” - இளைஞரணி மாநாட்டில் உதயநிதி குற்றச்சாட்டு

சேலம்: அமலாக்கத் துறை மூலம் திமுகவை மிரட்டுகிறார்கள் என்று திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஞாயிறு) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, மாநாட்டுத் திடலில் உள்ள கொடிமரத்தில் உள்ள கட்சிக் கொடியை திமுக எம்.பி. கனிமொழி ஏற்றிவைத்தார். மாநாட்டில் திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீர்மானங்களை முன்மொழிய அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் பதவியை அகற்றிட வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும், துணைவேந்தர் பதவி முதல்வர் வசமே ஒப்படைக்கப்பட வேண்டும் ஆகியனவற்றை வலியுறுத்தி 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, January 20, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/21/xlarge/1186370.jpgவேதா நிலைய இழப்பீட்டுத் தொகையில் ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை செலுத்த தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு

சென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையில் இருந்து அவருடைய வருமான வரி பாக்கியை செலுத்த தடை கோரிய வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நோக்கில் தமிழக அரசு அதை அரசுடமையாக்கி கடந்த 2020 ஜூலையில் அரசாணை பிறப்பித்தது. அப்போது இதற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.69 கோடி சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/21/xlarge/1186368.jpgஅரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட 100 புதிய பேருந்துகளை முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட 100 பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி சட்டப் பேரவையில் 110-விதியின் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவதாகவும், ரூ.500 கோடிக்கு 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார். மேலும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/20/xlarge/1185960.jpg“கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செயல்படும்” - உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை: “கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி இல்லை” என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இவ்வாறு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மேலும் பேசுகையில், “தற்போதைய நிலையில் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்த போதுமான இடவசதி இல்லை. மேலும் அங்கு ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடம் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. பணிகள் அனைத்தும் முடிந்து ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்ற வசதி ஏற்படுத்திதந்தால் பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றுவோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, January 19, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/20/xlarge/1185897.jpgஇந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகத்தை நிலைநிறுத்துவதே குறிக்கோள்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: ‘இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகத்தை நிலைநிறுத்துவதே குறிக்கோள்’ என்று கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கேலோ இந்தியா இளைஞர்விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி போட்டிகளைத்தொடங்கி வைத்தார். இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/20/xlarge/1185894.jpgபட்ஜெட், புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவை ஜன.23-ல் கூடுகிறது

சென்னை: சட்டப்பேரவை கூட்டத் தொடர், பட்ஜெட் மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜன.23-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இம்மாதம் 3-வது வாரத்தில் நடைபெறலாம் என கூறப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் 3, 4 தேதிகளில் மிக்ஜாம் புயல், டிச 17, 18 தேதிகளில் அதிகனமழை, வெள்ளம் இவற்றின் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழல், அதற்கான நிவாரணம் வழங்குதல், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குதல், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் ஆளுநருடனான கருத்துமோதல் உள்ளிட்ட காரணங்களால் பேரவைக்கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/20/xlarge/1185489.jpgபட்டியலின மாணவி வன்கொடுமை | மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவு - திருமாவளவன்

சென்னை: பட்டியலின மாணவிக்கு எதிரான வன்கொடுமை மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவை ஏற்படுத்துகிறது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமைகளைத் தடுத்திட அரசு ஆணையம் அமைக்க வேண்டும் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் விடுத்துள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநருங்குன்றம் கிராமம், ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்துள்ள வன்கொடுமைகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பனிரெண்டாம் வகுப்பை முடித்துள்ள மாணவி நீட் தேர்வு எழுதி மருத்துவம் பயிலும் கனவில் இருந்துள்ளார். அதற்காக அவர் வீட்டு வேலை செய்ய முடிவெடுத்து, திருவான்மியூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் முகவர் ஒருவர் மூலம் வீட்டுப் பணியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார். வீட்டு உரிமையாளர் அன்டோ மதிவாணன் என்பவர் பல்லாவரம் தொகுதியைச் சார்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார். அவரது மனைவி மெர்லின் என்பவர் தான், மாணவியை குரூரமாகக் கொடுமைப் படுத்தியுள்ளார் எனத் தெரியவருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, January 18, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/19/xlarge/1185409.jpgபிரதமர் மோடி வருகையால் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு - கேலோ இந்தியா போட்டிகளை இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் இன்று மாலை கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்த ஆண்டு தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இப்போட்டிகள் இன்று முதல் ஜன.31-ம் தேதி வரை நடைபெறுகின்றன. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இதன் தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/18/xlarge/1185052.jpg“ஒரு பிரிவினரை வருத்தப்படுத்தி ராமர் கோயில் கட்டியதில் எனக்கு உடன்பாடில்லை” - வேல்முருகன் கருத்து

கிருஷ்ணகிரி: "ராமர் கோவில் கட்டியுள்ள இடத்தில் பாபர் மசூதி இருந்ததாக நான் படித்துள்ளேன். அதை இடித்து ஒரு பிரிவினரை வருத்தத்திற்குள் தள்ளி ராமர் கோயில் கட்டியதில் எனக்கு உடன்பாடில்லை." என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ., முன்னிலையில் தங்களை தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். இதனை தொடர்ந்து வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம், 'தமிழ் மக்களுக்கே, தமிழத இளைஞர்களுக்கே' என்ற கொள்கைக்காகவும், ஓசூர் சிப்காட்டில் உள்ளூர் மக்களுக்கும், அரசு திட்டங்களுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். தமிழகத்தில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகளில், 90 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு பணி வழங்க வேண்டுமென தொடர்ந்த கோரி வருவதால் எங்கள் கட்சியில் பலர் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் லஞ்ச லாவண்யம், போதை இல்லாத மாற்று அரசியலை எதிர்பார்த்து எங்களிடம் இணைகின்றனர். கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி உட்பட, 60 கி.மீ., தொலைவுக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற தொடர்ந்து போராடி வருகிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/6aFe3tw புதிய மாநகராட்சிகள் உதயம் | பாதாள சாக்கடை, கார்பன் நியூட்ரல் திட்டங்கள் இருந்தும் கோட்டைவிட்ட ராஜபாளையம்

ராஜபாளையம்: காரைக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உட்பட 6 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகும் என நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பட்டியலில் பாதாள சாக்கடைத் திட்டம், கார்பன் நியூட்ரல் ராஜபாளையம் உள்ளிட்ட மாநகராட்சிக்குரிய திட்டங்கள் இருந்தும் ராஜபாளையம் நகராட்சி இடம் பெறாதது மக்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இதில் வருவாய், மக்கள் தொகை அடிப்படையில் சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல்நிலை என வரிசைபடுத்தப்பட்டு அதற்கேற்ப திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் சிறப்பு நிலை பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், சிறப்பு நிலை மற்றும் பெரிய நகராட்சிகளை மாநகராட்சியாகவும் தரம் உயர்த்த வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகியவற்றை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என அந்தந்த நகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, January 17, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/18/xlarge/1184960.jpgபிரதமர் மோடி 3 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகை

சென்னை: தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை நாளை தொடங்கி வைக்கிறார். ரங்கம், ராமேசுவரம், தனுஷ்கோடி சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (ஜன.19) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/18/xlarge/1184634.jpgஇளவட்டக் கல் தூக்கிய இளைஞர் நிலை தடுமாறியதில் கல் தவறி விழுந்து உயிரிழப்பு @ திருநாவலூர்

திருநாவலூர்: திருநாவலூர் அருகே இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் பங்கேற்றவர், கல்லை தூக்கும் போது நிலை தடுமாறிய காரணத்தால் அவர் மீதே கல் விழுந்து உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரை அடுத்த சேந்தநாடு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் முன்பு காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக இளவட்டக் கல் தூக்கும் போட்டியும் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் திருமணமாகதவர்கள் மட்டுமே பங்கேற்பர் என்பதால் அதே கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் பிரபு (29) என்பவரும் பங்கேற்றுள்ளார். அவர் இந்தப் போட்டியில் இளவட்டக் கல்லை தூக்கும் போது நிலை தடுமாறிய காரணத்தால் கல் தவறி அவர் தலை பகுதியில் விழுந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, January 16, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/17/xlarge/1184558.jpgதன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலை. துணைவேந்தர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் என்றஅமைப்பை அனுமதி பெறாமல்தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்தநிறுவனத்தை செயல்படச் செய்ததாக பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/17/xlarge/1184549.jpgஅலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைக்கிறார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி நடந்து வருகின்றன. இதில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/16/xlarge/1184082.jpg“தமிழகத்தில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” - ஆளுநர் எக்ஸ் தள பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்வினை

சென்னை: “தமிழ்நாட்டில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். காவி உடையில் திருவள்ளுவரை சித்தரித்து அவரை சனாதனத் துறவி என்று தமிழக ஆளுநர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் முதல்வர் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, January 15, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/16/xlarge/1184079.jpg“பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி திருவள்ளுவர்” - ஆளுநர் ரவி ட்வீட்டால் சர்ச்சை

சென்னை: காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் உருவப்படத்தைப் பகிர்ந்து, அவரை சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி என்று குறிப்பிட்டு சமூகவலைதளத்தில் கருத்தைப் பகிர்ந்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், “#திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்புக்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலத்தால் அழிக்க இயலாத அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருக்கிறது. இந்தப் புனித நாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/16/xlarge/1184066.jpgபாலமேடு ஜல்லிக்கட்டு தொடக்கம் | 1000 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

பாலமேடு: மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள பாலமேடு கிராமத்தில் உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பிறகு போட்டி தொடங்கியது. சுமார் 1,000 காளைகள் மற்றும் 700 மாடுபிடி வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த வகையில் நேற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து இன்றைய தினம் பாலமேட்டில் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...