Thursday, January 18, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/18/xlarge/1185052.jpg“ஒரு பிரிவினரை வருத்தப்படுத்தி ராமர் கோயில் கட்டியதில் எனக்கு உடன்பாடில்லை” - வேல்முருகன் கருத்து

கிருஷ்ணகிரி: "ராமர் கோவில் கட்டியுள்ள இடத்தில் பாபர் மசூதி இருந்ததாக நான் படித்துள்ளேன். அதை இடித்து ஒரு பிரிவினரை வருத்தத்திற்குள் தள்ளி ராமர் கோயில் கட்டியதில் எனக்கு உடன்பாடில்லை." என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ., முன்னிலையில் தங்களை தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். இதனை தொடர்ந்து வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம், 'தமிழ் மக்களுக்கே, தமிழத இளைஞர்களுக்கே' என்ற கொள்கைக்காகவும், ஓசூர் சிப்காட்டில் உள்ளூர் மக்களுக்கும், அரசு திட்டங்களுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். தமிழகத்தில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகளில், 90 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு பணி வழங்க வேண்டுமென தொடர்ந்த கோரி வருவதால் எங்கள் கட்சியில் பலர் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் லஞ்ச லாவண்யம், போதை இல்லாத மாற்று அரசியலை எதிர்பார்த்து எங்களிடம் இணைகின்றனர். கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி உட்பட, 60 கி.மீ., தொலைவுக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற தொடர்ந்து போராடி வருகிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...