Friday, September 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/01/large/876826.jpgதனுஷ்கோடி அருகே மணல் தீடையில் 5 குழந்தைகளுடன் தவித்த 2 பெண் அகதிகள்: இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர்

ராமேசுவரம்: தமிழகத்துக்கு அகதிகளாக வர முயன்ற 5 குழந்தைகள் உட்பட 7 இலங்கைத் தமிழர்களை தனுஷ்கோடி அருகே உள்ள மணல்தீடையில் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று தலைமன்னார் போலீஸிடம் ஒப்படைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும்உணவுப் பொருட்களின் விலைஉயர்வு காரணமாக, அந்நாட்டிலிருந்து இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலை தனுஷ்கோடி அருகே ஏழாம் தீடையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக, அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் போலீஸாருக்கு தகவல்கொடுத்துள்ளனர். ஆனால் ஏழாம்தீடை பகுதி இலங்கைக்குச் சொந்தமான பகுதி என்பதால் அவர்களை மெரைன் போலீஸார் மற்றும் கடலோர காவல்படையினரால் மீட்க முடியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/01/large/876838.jpgசென்னையில் வெளிநாடு வாழ் இந்தியரின் வீட்டில் 7 சோழர் கால வெண்கல சிலைகள் மீட்பு: 15-ம் நூற்றாண்டை சேர்ந்த தஞ்சாவூர் ஓவியங்களும் பறிமுதல்

சென்னை: சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 சோழர் கால சிலைகள், 15-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 தஞ்சாவூர் ஓவியங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரது வீட்டில் விலை மதிப்பற்ற சோழர் கால வெண்கல சிலைகள், பழங்கால தஞ்சாவூர் ஓவியங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறையின் சிலை கடத்தல்தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அப்பிரிவின் டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் உத்தரவிட்டனர். அதன்படி, டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு சோழர் காலத்தைசேர்ந்த 7 வெண்கல சிலைகள், 15-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 தஞ்சாவூர் ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தஞ்சாவூர் ஓவியம்.

சம்பந்தப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர் தற்போது அமெரிக்காவில் உள்ளதாக, அந்த வீட்டைபராமரித்து வருபவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை போலீஸார் போனில் தொடர்பு கொண்டு, சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள் தொடர்பான ஆவணங்களை கேட்டனர். ‘‘பழங்கால சிலைகள், ஓவியங்களை என் பெற்றோர் வைத்திருந்தனர். அதுசம்பந்தமான ஆவணங்கள் எதுவும் இல்லை’’ என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து, சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்களை போலீஸார் கைப்பற்றினர். இந்த சிலைகள் தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டவையாக இருக்கலாம்என்ற சந்தேகம் இருப்பதால், அதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிலைகளை மீட்ட தனிப்படையினரை டிஜிபி சைலேந்திர பாபு நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/01/large/876742.jpgகாஞ்சிபுரம் | காஸ் கிடங்குக்கு சீல் வைப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஸ் கிடங்கு வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் அந்த காஸ் கிடங்குக்கு நேற்று சீல் வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த தேவரியம்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு காஸ் கிடங்கில் இருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்தன. இதில் 12 பேர் காயமடைந்தனர். இதில் பீஹாரைச் சேர்ந்த ஆமோத்குமார் என்ற இளைஞர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மேலும் 7 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/01/large/876745.jpgஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு: மக்கள் பார்வையிட அனுமதி

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கொலுவை கடந்த 26-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த கொலுவை பொதுமக்கள் பார்வையிட முதன்முறையாக அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, இன்று முதல் (அக்.1) முதல் அக்.5-ம் தேதி வரை நாள்தோறும் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை ஆளுநர்மாளிகையில் மக்கள் கொலுவை காணலாம்.

கொலுவை காண விருப்பமுள்ளவர்கள், பெயர், பாலினம், முகவரி, தொடர்பு எண், அடையாள அட்டை, கொலு காண வரும் நாள் ஆகியவற்றை navaratrirb22@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அழைக்கப்படுபவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும்என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/01/large/876871.jpgவிலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: விலை மதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு, நேற்று அவர்வெளியிட்ட செய்தி:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/01/large/876867.jpgஓபிஎஸ் வழக்கை விசாரித்து முடிக்கும்வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்து முடிக்கும்வரை, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று இபிஎஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, September 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/30/large/876211.jpgஎழும்பூரில் அக். 2-ம் தேதி வரை ‘தேசி மேளா’ - கலை, கைவினை பொருட்கள் கண்காட்சி

சென்னை: தனித்துவமான கலை, கைவினை, ஜவுளி,நகை, ஓவியக் கண்காட்சி மற்றும் விற்பனை சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் 'தேசி மேளா' என்ற பெயரில் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியை நடத்திவரும் கிராவிட்டி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் 'தேசி மேளா' கடந்த செப். 23-ம் தேதி முதல் நடைபெறுகிறது. வரும் அக்.2-ம் தேதி வரை கண்காட்சியைக் கண்டு தேவையான பொருட்களை வாங்கமுடியும். இங்கு 100 ஸ்டால்களில் வசீகரிக்கும் கலை மற்றும் கைவினைப் பொருட்கள், ஜவுளிகள், மயக்கும் நகைகள், நம்ப முடியாத ஓவியங்கள், பித்தளையால் ஆன சிலைகள், ஃபர்னிச்சர்கள் விற்பனைக்கு உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/30/large/876212.jpgசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம், வேளச்சேரி, அடையாறில் ரூ.174 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு பணிகள்: அக்டோபருக்குள் பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவு

சென்னை: செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு ஆகிய இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளைமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அக்டோபர் மாதத்துக்குள் பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்குஅறிவுறுத்தினார்.

இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில், மழைநீர் வடிகால் பணிகளை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன்படி, செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு ஆகிய இடங்களில் ரூ.174.48 கோடியில் வெள்ளத் தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. செம்மஞ்சேரி டிஎல்எப் அருகில் ரூ.21.70 கோடியில் மதுரபாக்கம் ஓடையில் கதவணையுடன் கூடிய வெள்ள ஒழுங்கி அமைத்து, 500 மீட்டர் நீளத்துக்கு கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அரசன்கழனி கால்வாயிலிருந்து நூக்கம்பாளையம் பாலம் வரை ரூ.24.30கோடியில், 1,900 மீட்டர் தாங்குசுவர் அமைத்தல் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/30/large/875905.jpgஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட பாஜக மாவட்டத் தலைவருக்கு நிபந்தனை ஜாமீன்

கோவை: திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட கோவை மாநகர், மாவட்ட பாஜக தலைவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, இந்து மதம் குறித்து அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, இந்து முன்னணி சார்பில் கடந்த 18-ம் தேதி கோவையில் 13 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பீளமேடு புதூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநகர், மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, ஆ.ராசா எம்.பி குறித்து மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/29/large/875901.jpgபுதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கம் | போராட்டம் செய்வது நல்லதல்ல - ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக போராட்டம் செய்வது நல்லதல்ல என்றும் போராடக்கூடாது என்றும் ஆளுநர் தமிழிசை எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு நூலகங்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய, துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று கலை மற்றும் பண்பாட்டுத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் இயக்குனர் கந்தன் பங்கேற்றார். அப்போது, நூலகங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து முருங்கப்பாக்கம் மற்றும் வில்லியனூரில் உள்ள அரசு கிளை நூலகங்களை துணைநிலை ஆளுநர் பார்வையிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/29/large/875903.jpgமக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்பு - மதுரை அதிமுக பொதுக் கூட்டத்தில் இபிஎஸ்

மதுரை: ‘‘தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்’’ என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர், புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதுவரை இதுபோல் மூன்று மாவட்ட செயலாளர்கள் சேர்ந்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுகவின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே மூன்று மாவட்டங்கள் சார்பிலும் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்கு வந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் அதிமுகவின் அனைத்து அணி சார்பில் பழங்காநத்தம் ரவுண்டானாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு மாநகர அதிமுக செயலாளர் செல்லூர் கே.ராஜூ தலைமை வகித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, September 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/29/large/875703.jpgவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அரசு: சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை தமிழக அரசு தவறாக பயன்படுத்துவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமியை நேற்று சந்தித்துவிட்டு வெளியே வந்த பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/29/large/875642.jpgகுழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்து இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கனிமொழி எம்.பி., வலியுறுத்தினார். குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் இளைய ஆர்வலர்களை ஊக்குவித்தல் குறித்த கருத்தரங்கம், சென்னை, சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. இந் நிகழ்வில் கனிமொழி, எம்.பி பேசியதாவது:

சமூக நீதியைப் பற்றி நாம் தொடர்ந்து பேசுகிறோம். இதில் குழந்தைகளை பெரும்பாலும் இணைப்பதில்லை. தற்போது குழந்தையை சரியாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது. அவ்வாறு குழந்தைகளை சுய மரியாதையோடு, கவுரவத்தோடு, சம உரிமையோடு நடத்துவதற்கு இந்தச் சமூகம் தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும்.அப்போது தான் அனைவருக்குமான சமூக நீதி உருவாகும். பாலியல் வன்கொடுமை அதிகரிக்க தொழில்நுட்பமே காரணம்என எளிதில் கூறிவிடலாம். முன்பெல்லாம் நடப்பதை வெளியில் கூறவே முடியாமல் குழந்தைகள் அடக்கி வைக்கப்படுவார்கள். இதனால் மனச்சோர்வோடு அவர்கள் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்போதுதான் வெளிப்படையாக பல விஷயங்கள் தெரிய வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/29/large/875654.jpgசென்னையில் இடியுடன் திடீர் மழை: வாகன நெரிசலால் போக்குவரத்து முடங்கியது

சென்னை: சென்னையில் நேற்று திடீரென பெய்த மழையால் அண்ணா சாலைஉட்பட பல்வேறு சாலைகளில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து நின்றன. சென்னையில் வாகன நெரிசலுக்குத் தீர்வுகாண பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பின், சில மாற்றங்களை போக்குவரத்து போலீஸார் செயல்படுத்தினர். அதன்படி, அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எல்ஐசி நிறுத்தத்தைக் கடந்ததும், தாராப்பூர் டவர் இடதுபுறமாக திரும்பி, டேம்ஸ் சாலை வழியாகச் சென்று, வலதுபுறம் பிளாக்கர்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையில் இணைய வேண்டும்.

அகலமான அண்ணா சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் டேம்ஸ் சாலை சென்று, குறுகலான பிளாக்கர்ஸ் சாலைக்குள் நுழைவதால் சிரமம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று திடீரென பெய்த மழையால் இந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காசினோ திரையரங்கம் எதிரேயும் கடும் நெரிசல் காணப்பட்டது. தற்போதைய நிலையில், வாலாஜா சாலையில் வரும் வாகனங்கள், அண்ணா சிலை அருகே வலதுபுறம் திரும்பி சென்ட்ரல் நோக்கிச் செல்ல முடியாது. எனவே, அண்ணா சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, சுமார் 50 மீட்டர் தொலைவில், ‘யு டர்ன்’ எடுத்து, சென்ட்ரலை நோக்கிச் செல்ல வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/29/large/875809.jpgதிருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடியில் திருப்பணி - முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பிலான திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/28/large/875292.jpgமதுரை | அரசு மருத்துவமனைக்கு ஒரு நாள் மருத்துவ சுற்றுலா - நோயாளிகளுடன் கல்லூரி மாணவிகள் ஆடிப்பாடி நெகிழ்ச்சி

மதுரை: மதுரை அருகே அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சுற்றுலா சென்ற கல்லூரி மாணவிகள், மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் சேர்ந்து ஆடி, பாடி மகிழ்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனைகள் என்றாலே இறைச்சல், கூட்டம், சுகாதார சீர்கேடு, தரமற்ற சிகிச்சை என்ற தவறான பிபம்பம் இன்றைய இளைய தலைமுறையினரிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான சுகாதாரமான அடிப்படை வசதிகளில் தொடங்கி சர்வதேச தரத்திலான சிகிச்சைகள் வரை சிறப்பான சேவைகளை அருசு மருத்துவமனைகள் வழங்குகிறது. எந்த ஒரு உயிர் காக்கும் சிகிச்சையும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் வெற்றிகரமாக வழங்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/28/large/875291.jpgஎம்ஜிஆர், ஜெயலலிதா சாதி அரசியல் செய்ததில்லை - பெங்களூரு புகழேந்தி

சேலம்: ‘மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா என்றுமே சாதி அரசியல் செய்ததில்லை, அதைபற்றி பேசியதில்லை’ என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பெங்களூரு புகழேந்தி, "அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், செம்மலை போன்றவர்கள் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பின்னால் நின்று எவ்வாறு வேடிக்கை பார்க்கின்றனர் என்பது எனக்கு தெரியவில்லை. செங்கோட்டையன் தனது சமுகத்தைச் சேர்ந்த தங்கமணி, வேலுமணி, பொன்னையன் உள்ளிட்டோர் பின்புலத்தை கொண்டு, சாதி சார்ந்த அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா என்றுமே சாதி அரசியல் செய்ததில்லை, அதைபற்றியோ பேசியதில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, September 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/28/large/875002.jpgஅரசு மருத்துவமனையில் கால் துண்டிக்கப்பட்ட மதுரை இளைஞருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவமனையில் கால் துண்டிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அலங்காநல்லூர் பூதக்குடியைச் சேர்ந்தவர் எஸ்.செல்வகுமார்(22). பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். கரோனா பரவலால் விடுதிகள் மூடப்பட்டதால் செல்வகுமார் ஊருக்கு வந்திருந்தார். கடந்த 19.7.2020-ல் செல்வகுமார் பாட்டி வீட்டுக்குச் செல்வதற்காக தனது சகோதரருக்காக காத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/4xDntuf டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி ரக மீன்கள் காரிமங்கலம் அருகே அழிப்பு

தருமபுரி: ஆப்பிரிக்கன் கெளுத்தி என்ற ரகத்தை சேர்ந்த மீன்கள் நீர்வாழ் பாரம்பரிய உயிரினங்களை மொத்தமாக உண்டு அழிக்கும் குணம் கொண்டவை.

மேலும், இவ்வகை மீன்களை உணவாக உட்கொள்வோருக்கும் பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே, இவ்வகை மீன்களை வளர்ப்பது, விற்பனை செய்வது ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/28/large/875044.jpgசுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிக்கும் சிறு நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய இணையமைச்சர் வலியுறுத்தல்

சென்னை: சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிக்கும் சிறு நிறுவனங்களை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என மத்தியசுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே வலியுறுத்தியுள்ளார். ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குக்குமாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் கண்காட்சி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான மாநாட்டை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே நேற்று தொடங்கி வைத்தார்.மாநாட்டில் அவர் பேசியதாவது:

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மத்தியஅரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் மாசுவை கட்டுப்படுத்துவதில் சர்வதேச அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கடலில் கலக்கப்படுவது வேதனை அளிக்கிறது. இதைத் தவிர்க்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். பிளாஸ்டிக்கை தடை செய்வதன் மூலம் புதிய தொழில்கள் உருவாகின்றன. பிளாஸ்டிக்குக்கு மாற்றான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிக்கும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுயசார்பு இந்தியாவை அடைய உதவுகின்றன. இத்தகையநிறுவனங்களை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை மாநில அரசுகள் தொடர்ந்து நடத்த வேண்டும். மீண்டும் மஞ்சப்பை, துணிப் பை பயன்படுத்துவோம், பூமியை ரசிப்போம் என்று அவர் கூறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/28/large/874742.jpgதிருப்பூர் | துணை மேயர் முயற்சியால் 14 ஆண்டுகளுக்கு பிறகு  மேம்பால பணி மீண்டும் தொடக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் முயற்சியால் 14 ஆண்டுகளுக்கு பிறகு, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பாலப்பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான நிலம் அளக்கும் பணி நடந்தது.

திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் இருந்து மங்கலம் சாலை பகுதிக்கு செல்லும் வகையில், கடந்த 2008-ம் ஆண்டு பாலம் அமைக்க பூமி பூஜை நடந்தது. தேவைப்படும் நிலம் கையகப்படுத்தப்படும்போது சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் நீண்ட காலமாக இந்த பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பலரிடம் நடந்த பேச்சுவார்த்தையை, சுமூகமான முறையில் துணை மேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் தற்போது முடிவுக்கு கொண்டுவர முயன்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/27/large/874741.jpg‘படிப்பை தொடர முடியாதவர்களை கருத்தில் கொண்டே புதிய கல்வி கொள்கை உருவாக்கம்’ - உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

மதுரை: ‘குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டு தான் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது’ என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் வஹிதா பேகம். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் திண்டுக்கல் தொலைதூர கல்வி திட்ட மையத்தின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். பின்னர் திறந்த நிலை பல்கலைக்கழக பட்டத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டதால், பதவி இறக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து வஹிதா பேகம் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/27/large/874740.jpgபுதுச்சேரி | மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியீடு - காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று முதல் துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொறியாளர்கள், தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார்மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார்மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, September 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/27/large/874460.jpgஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரவேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்

சென்னை: ஜெனிவாவில் நடைபெற்றுவரும்ஐநா மனித உரிமைகள் பேரவையில் தற்போதைய 51-வது அமர்வில் இலங்கை தமிழர் பிரச்சினைபரிசீலனையில் உள்ளது. அதற்கு ஆதரவாக இந்தியா தன்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் எனபிரதமரிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த வகையில், ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் மன்றத்தில் விசாரணை நடத்தவும், இலங்கையின் வடகிழக்கு மாநிலங்களில் தமிழ் ஈழம் குறித்துப் பொது வாக்கெடுப்பு நடத்தவும், ஈழத் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள பகுதிகளைத் திரும்பஈழத்தமிழர்களுக்கே கொடுக்கவும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானங்கள் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து பிரதமருக்கு வைகோ கடிதம் அனுப்பிஉள்ளார். மேலும், ஐநாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/27/large/874481.jpgசென்னை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வரைவு செயல்திட்ட பரிந்துரைகள் தமிழில் இன்று பதிவேற்றம்

சென்னை: சென்னை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வரைவு செயல் திட்டம், இன்று தமிழில் வெளியிடப்படுகிறது. சென்னை மாநகரம் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 மீட்டர் உயரத்துக்குள் உள்ளது. இதனால் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் இயற்கை பேரிடர்களால் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் மாநகரமாக சென்னை உள்ளது. இதையடுத்து, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான செயல் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அதற்கான சில பரிந்துரைகளை உருவாக்கி பொதுமக்களின் கருத்துகளை கேட்க முன்வந்துள்ளது. அந்த பரிந்துரைகளை அண்மையில் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டிருந்தது . அதை தமிழிலும் வெளியிட வேண்டும் என்றுசுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலர்வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், வரைவு செயல் திட்ட பரிந்துரைகளை தமிழில் மாநகராட்சி இன்று வெளியிடுகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரம் இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் 5-வது மாநகரமாக உள்ளது. சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் விரைவான நகரமயமாக்கலுக்கு ஏற்ப, இயற்கை வளம்மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், பல்வேறு சவால்களை சமாளிக்கும் வகையிலும் காலநிலைக்கான செயல்திட்டத்தை தயாரிக்க சி40 நகரங்களுக்கான கூட்டமைப்பில் சென்னை இணைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/27/large/874656.jpgராம்கோ சூப்பர்கிரீட், ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் கட்டிடக் கலைநுட்ப, கட்டமைப்பு கலைநுட்ப விருதுகள்

சென்னை: ராம்கோ சூப்பர்கிரீட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சிறப்பான பொறியாளர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் வழங்கப்படவுள்ள விருதுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானங்களிலும் கட்டமைப்புகளிலும் சிறந்து விளங்கும் பொறியாளர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு ‘கட்டிடக் கலைநுட்ப விருதுகள்’ மற்றும் ‘கட்டமைப்பு கலைநுட்ப விருதுகளை’ வழங்கும் அறிவிப்பு வெளியான 2 வாரத்துக்குள் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/27/large/874133.jpgபுதுச்சேரி | பாஜக செயல்களுக்கு எதிராக கூட்டம் நடத்திய என்.ஆர்.காங் எம்எல்ஏக்கள் - சமாதானப்படுத்திய முதல்வர்

புதுச்சேரி: முதல்வரை விமர்சித்து போராட்டம் நடத்திய பாஜக ஆதரவு சுயேட்சை, அவருக்கு பாஜக எம்எல்ஏ ஆதரவு அளித்தது தொடர்பாக பேரவைத் தலைவர், அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்களிடம் பேச என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முடிவு எடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஆலோசித்தபிறகு கண்டனத்தை பதிவு செய்யுமாறு அறிவுறுத்திய எம்எல்ஏக்களை முதல்வர் ரங்கசாமி சமாதானம் செய்தார்.

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. இதில், அதிருப்தியடைந்த பாஜக எம்எல்ஏக்கள், ஆளும் கூட்டணியில் இருந்தும், அனைத்துவிதத்திலும் புறக்கணிக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமியை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இந்தநிலையில், பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏவான அங்காளனும், முதல்வர் ரங்கசாமி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி, முதல்வரை பதவியிலிருந்து நீக்கக்கோரி, சட்டப்பேரவை வளாகத்தில் அண்மையில் அவர் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினார். அதற்கு பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/26/large/874132.jpgகோவை | பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான இருவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு - காவல் ஆணையர் தகவல்

கோவை: கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள முத்துசாமி சேர்வை வீதியைச் சேர்ந்தவர் தியாகு(35). இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர். கடந்த 23-ம் தேதி இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மர்மநபர்கள் தீ வைத்தனர். இதில் கார் எரிந்து சேதமடைந்தது. அதேபோல், குனியமுத்தூரில் உள்ள ஞானபுரத்தை அடுத்த சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பரத். பாஜக பிரமுகர். கடந்த 23-ம் தேதி நள்ளிரவு இவரது வீட்டின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். பெட்ரோல் குண்டு வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் மீது விழுந்து தீ்ப்பிடித்தது. இதில் கார் எரிந்து சேதமடைந்தது. மேற்கண்ட இரு வழக்குகள் தொடர்பாக குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/26/large/874131.jpgமதுரை | கீழடியைப்போல் கரடிப்பட்டி மலையடிவாரத்திலும் தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிப்பு

மதுரை: கீழடியைப்போல் மதுரை மாவட்டத்தில் கரடிப்பட்டி மலையடிவாரத்திலும் தொல்லியல் எச்சங்கள் கிடைத்துள்ளன. இதில் பழங்கால இரும்பு உருக்கு ஆலை இருந்ததற்கான தடயம் கிடைத்துள்ளன.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வடபழஞ்சி கிராமம் அருகிலுள்ள கரடிப்பட்டி மலையடிவாரத்தில் பழங்கால இரும்பு உருக்கு ஆலை இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வடபழஞ்சியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் மதன்குமார், சுதர்சன் ஆகியோர் அளித்த தகவலின்படி, மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் அதன் வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் களஆய்வு செய்தார். இதில் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் இரும்பு உருக்கு ஆலை இருந்ததற்கான தடயங்களும் கிடைத்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, September 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/26/large/874034.jpgபண்டிகை காலத்தில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணங்கள்: உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்துத் துறை தீவிரம்

பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தும் முயற்சியில் போக்குவரத்துத் துறை ஈடுபட இருப்பதாக துறையின் அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மக்களுக்கு ஆம்னி பேருந்து கட்டணம் பெரும் சுமையாக உள்ளது. வழக்கமான நாட்களில் அரசு பேருந்துகள் அளவிலான விலைக்கு பயணச்சீட்டுகளை வழங்கும் ஆம்னி பேருந்துகள், பண்டிகை நாட்களில் மட்டும் அளவுக்கு அதிகமாகக் கட்டணத்தை வசூலிப்பதாக மக்கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/26/large/873720.jpgஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500 அரசு மருத்துவர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளில் தமிழக முதல்வர் தலையிடக் கோரி 500 அரசு மருத்துவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 118 மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், அரசு மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்நிலையில், அனைத்து அரசுமருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பதாகைகளை ஏந்தியபடி கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷமிட்டனர். அப்போது, அரசு மருத்துவர்கள் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொழிலாளர் விதிகளுக்கு புறம்பான வகையில் மருத்துவர்களின் பணி நேரத்தை நீடிக்கும் விதமாக உள்ள அரசாணை எண் 225-ஐ திரும்பப் பெற வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/26/large/873722.jpgஆட்டோ தொழிற்சங்கத்தினர் போக்குவரத்து அமைச்சருடன் சந்திப்பு: முன்பதிவு செயலியை விரைந்து தொடங்க வலியுறுத்தல்

சென்னை: ஆட்டோ முன்பதிவு செயலியை அரசு சார்பில் விரைந்து தொடங்கவேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரிடம், ஆட்டோ தொழிற்சங்கத்தினர் நேரில் வலியுறுத்தினர். சென்னை, பல்லவன் இல்லத்தில் உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சரின் அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கரை, அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் சந்தித்தனர்.

சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், தொமுச பொதுச் செயலாளர் எம்.சண்மும்எம்பி., பொருளாளர் கி.நடராஜன்ஆகியோர் தலைமையில் இந்தச்சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீட்டர் கட்டண உயர்வு, அரசு சார்பில்ஆட்டோ முன்பதிவு செயலி தொடங்குதல் உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கை மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/26/large/873723.jpgதிரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் நினைவு தினம் குடும்பத்தினர் அஞ்சலி: இன்னிசை கச்சேரி நடத்தி ரசிகர்கள் மரியாதை

திருவள்ளூர்: மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டு வளாகத்தில் சிவலிங்கம் வடிவிலான, அவருடைய நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

அவரது மனைவி சாவித்திரி, மகள் பல்லவி, சகோதரி சைலஜா உள்ளிட்ட குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, எஸ்பிபி-யின் நினைவிடத்தில் வரையப்பட்டுள்ள அவரின் உருவத்தை தொட்டு வணங்கி சாவித்திரி கண்கலங்கினார். தொடர்ந்து அவர் அங்கு மரக்கன்றுகளை நட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/26/large/873920.jpgமுதல்வர் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்: ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து முடிவு

சென்னை: ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டம் மற்றும் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்டிருந்த, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, சட்டப்பேரவையில் அறிக்கைகளை சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளை தடை செய்யும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவருவது குறித்தும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் ரம்மி தடைக்கான சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்யாத வகையில் வலுவான ஷரத்துகளை சேர்ப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. வல்லுநர் குழுவின் கருத்துகள், பொதுமக்கள் கருத்துகள் பெறப்பட்டு, அவையும் விவாதிக்கப்பட்டது. அவசரச் சட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/26/large/873917.jpgமகாளய அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்: ஸ்ரீரங்கத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ராமேசுவரம் / திருச்சி / விருதுநகர்: மகாளய அமாவாசையையொட்டி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடல், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்காவிரி ஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் புனிதநீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சதுரகிரியில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை, மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இது பிதுர்கர்மா செய்ய உகந்த நாளாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாதந்தோறும் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள், மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்தால், அது அனைத்து மாதங்களிலும் தர்ப்பணம் கொடுத்ததற்கு ஈடாகும்.

இதையொட்டி கடந்த சனிக்கிழமை முதலே தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, தெலங்கானா மற்றும் ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் வரத் தொடங்கினர். நேற்று அதிகாலை ராமநாதசுவாமி கோயில் நடை 4 மணியளவில் திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கால பூஜை, அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும், கோயில்வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளைதரிசனம் செய்தனர். இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம் நவபாஷணக் கோயில், திருப்புல்லாணி சேதுக்கரை, மாரியூா் முந்தல் கடற்கரை உள்ளிட்ட 4 இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் ராமேசுவரத்துக்கு இயக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/26/large/874024.jpgபொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

சென்னை: பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி சோதனை மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/25/large/873291.jpgதமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்ற மோசமான சூழ்நிலைக்கு திமுக அரசு தான் காரணம்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக சார்பில் பிரதமர் மோடி-20 புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி வில்லியனூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்றது. தென்னிந்திய மாநிலங்களுக்கான மோடி-20 புத்தகம் வெளியிடும் பொறுப்பாளர் ஹெச்.ராஜா, புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், எம்பி செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

முன்னதாக ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது. ‘‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மீது தேச விரோத நடவடிக்கைகளை உறுதி செய்த பிறகே என்ஐஏ சோதனை மேற்கொண்டது. 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு ஆவணங்கள் கைபற்றப்பட்டிருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, September 24, 2022

https://ift.tt/R59OL6e மாவட்டங்களுக்கு இன்று வேட்பு மனு தாக்கல்: திமுக மாவட்ட செயலாளர் தேர்தல் தீவிரம்

தமிழகத்தில் திமுக நிர்வாகரீதியிலான 72 மாவட்டங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மனுதாக்கல் கடந்த 22-ம்தேதி தொடங்கியது. முதல் நாளில் 19 மாவட்டங்களுக்கும், 2-வது நாளில் 21 மாவட்டங்களுக்கும் மனுக்கள் பெறப்பட்டன.

3-வது நாளான நேற்று புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை வடக்கு (மயிலாடுதுறை), நாகை தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய ஆகிய 16 மாவட்டங்களுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/25/large/873177.jpgகோவை | தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் - அமைதியை உறுதிப்படுத்த அனைத்துக் கட்சியினர் வலியுறுத்தல்

கோவை: கோவையில் பொது அமைதி, மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சியினர் ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

கல்வி, தொழில், மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற பலவித காரணங்களுக்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகம். கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்கள் உள்ளன. வெட்கிரைண்டர், மோட்டார், பம்பு செட் தயாரிப்பு, உதிரிபாகங்கள் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் கோவை முதன்மையாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/25/large/873181.jpgமுதல்வர் ஸ்டாலின் படத்தின் முன்பு மது பாட்டிலுடன் குஷியாக ஆட்டம் போட்ட திமுக ஒன்றிய கவுன்சிலர்

விருத்தாசலம்: காரில் மது போதையில், முதல்வர் ஸ்டாலின் படத்தின் முன்பு மது பாட்டிலை காண்பித்து, ஆட்டம் போட்ட அண்ணா கிராம ஒன்றிய திமுக கவுன்சிலரின் செயல் பொதுமக்கள் மட்டுமின்றி திமுகவினரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அண்ணா கிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்கவரப்பட்டு திமுக ஒன்றிய கவுன்சிலர் குமரகுரு. இவர் வழக்கறிஞராகவும் பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் புதுச்சேரி சென்ற இவர், அங்கு மது அருந்திவிட்டு, மது பாட்டில்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு கார் ஒன்றில் பயணம் செய்தவாறே ஊருக்கு திரும்பியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/25/large/873215.jpgஎன்ஐஏ சோதனையைத் தொடர்ந்து பாஜகவினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு - தலைமைச் செயலர் அவசர ஆலோசனை

சென்னை: நாடு முழுவதும் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவை, தாம்பரம், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் நேற்று பாஜக பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாலும், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதாலும் பதற்றம் நிலவுகிறது.

கோவை குனியமுத்தூரில் உள்ள ஞானபுரம் சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பரத். பாஜக பிரமுகரான இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பலத்த சப்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த பரத் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது, வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பக்கவாட்டுப் பகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவர்கள் தீயை அணைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/24/large/872737.jpgபுதுச்சேரி | முழு அடைப்பு போராட்டம் தேவையற்றது - மதசாற்பற்ற கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மனுதர்மம் எதிர்ப்பு போராட்டத்தின்போது பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே மத்திய அரசைக் கண்டித்து, பெரியாரிய-அம்பேத்கரிய இயக்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் வரும் 26-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேபோல் ஆ.ராசா மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி சார்பிலும் 27-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பந்த் போராட்டம் தொடர்பாக, புதுச்சேரி மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம், புதுச்சேரி தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, September 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/24/large/872616.jpgசின்னசேலம் பள்ளி கலவரம்: 5 யூ-டியூப் சேனல் நிர்வாகிகளிடம் விசாரணை

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளிமாணவி உயிரிழந்ததை தொடர்ந்து, அப்பள்ளியில் கடந்த ஜூலை 17-ம் தேதி கலவரம் நடந்தது. இதுதொடர்பாக வலைதளங்களில் பல வீடியோக்கள் வெளியாகின. இதுபற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

யூ-டியூப் சேனல் நடத்தி வரும் சென்னை முகமது ஷபி, செங்கல்பட்டு மாவட்டம் ராஜேஷ்,சேலம் மாவட்டம் நவீன்குமார், திருப்பூர் மாவட்டம் வடிவேல், சிவகங்கை மாவட்டம் கோபிநாத் ஆகிய 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீஸார் முன்புநேற்று முன்தினம் ஆஜரான 5 பேரிடமும் டிஎஸ்பி திருமால் தீவிர விசாரணை நடத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/24/large/872506.jpgமுதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்: அண்ணாமலையின் உதவியாளர் நிதியுதவி செய்துள்ளதாக தகவல்

சென்னை: கடந்த செப். 11-ம் தேதி வடசென்னை பகுதிகளில் முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி கிளைச் செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மண்ணடியைச் சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/24/large/872612.jpgஇந்து அமைப்பு ஆதரவாளர்களின் வீடு, கடை, வாகனங்களை குறிவைத்து கோவையில் 2-வது நாளாக பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை

கோவை/ பொள்ளாச்சி/ திருப்பூர்: கோவையில் இந்து அமைப்புகளின் ஆதரவாளர்களது கடைகள், வீடு, வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, கல்வீச்சு, தீவைப்புசம்பவங்கள் நடந்தன. இச்சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பதற்றத்தை தணிக்க போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கோவை காந்திபுரம் விகேகேமேனன் சாலையில் உள்ள பாஜகமாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.2-வது நாளாக நேற்றும் கோவை மாவட்டத்தில் சில இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/24/large/872515.jpgதலைமைச் செயலக சங்க தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

சென்னை: தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்றுமாலையுடன் முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

இதில், ஓட்டுநர்கள், சட்டப்பேரவைநிருபர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் மாநிலஅளவில் முக்கியமான சங்கம் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கமாகும்.இந்த சங்கத்தின் தற்போதைய தலைவராக பீட்டர் அந்தோணிசாமி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/24/large/872664.jpgதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரைகண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/24/large/872656.jpgமுதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் செப். 26-ல் நடக்கிறது - ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல்

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 26-ம் தேதி காலை 9.30 மணிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசரச் சட்ட மசோதாவை இறுதி செய்து ஒப்புதல் அளிக்கவும், புதிய முதலீடுகளுக்கு அனுமதி மற்றும் சலுகைகள் அளிக்கவும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளால் ஏராளமானோர் பணத்தைப் பறிகொடுத்து, தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, September 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/23/large/872184.jpgஅக்.23-ல் பயணிக்க பேருந்து முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகை அக்.24-ம் தேதி (திங்கள்) கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய 2 நாட்களும் (சனி, ஞாயிறு) வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் வெளியூரில் தங்கியிருக்கும் மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் அக்.21-ம் தேதி (வெள்ளி) இரவே தங்களது ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கிவிடுவர்.

அதன்படி அக்.21-ம் தேதி பயணிப்போருக்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...