Monday, January 31, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/01/large/762841.jpgமயிலாப்பூர் கோயில் மயில் சிலை மாயமான விவகாரம்: உண்மை கண்டறியும் குழு விசாரணை 6 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புராதன மயில் சிலை மாயமான விவகாரம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் அறநிலையத் துறையின் உண்மை கண்டறியும் குழு தங்களது விசாரணையை 6 வார காலத்துக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பிறகு அங்குள்ள புன்னைவன நாதர் சன்னதியில் இருந்த புராதன மிக்க மயில் சிலை மாயமாகி வேறு ஒரு மயில் சிலை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/01/large/762844.jpgமாநகராட்சி தேர்தல் பணியில் 27 ஆயிரம் பணியாளர்கள்: முதல்கட்ட பயிற்சி வகுப்பில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தல் பணியில் 27,812 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்காக நேற்று நடைபெற்ற முதல்கட்ட பயிற்சி வகுப்பில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பங்கேற்று ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த 27,812 அலுவலர்கள் தேர்தல் பணி மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி மாநகரம் முழுவதும் உள்ள 24 மையங்களில் நேற்று நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/01/large/762848.jpgசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் செயற்கை வண்ணம் கலந்த 400 கிலோ பட்டாணி பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளில் செயற்கை வண்ணம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இந்த புகாரின் அடிப்படையில், கோயம்பேடு சந்தையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 20-க்கும் மேற்பட்ட கடைகளில் செயற்கை வண்ணம் கலந்த காய்கறிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் சோதனை செய்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/01/large/762843.jpgதை அமாவாசையையொட்டி கோயில் குளக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்

சென்னை: தை அமாவாசையையொட்டி கோயில் குளக்கரைகளில் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தமிழகம் முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/01/large/762840.jpgசென்னை மாநகராட்சியில் முதல்கட்டமாக 100 வார்டுகளுக்கு தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விஜயகாந்த் வெளியிட்டார்

சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான தேமுதிக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டார்.

தமிழகத்தில் நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்லில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. தேதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பட்டியலை மாவட்டசெயலாளர்கள் அனுப்ப வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தேமுதிக சார்பில் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/01/large/762930.jpgகுடிமைப்பணிகள் முதல்நிலை பயிற்சிக்கு பிப்.27-ல் நுழைவுத்தேர்வு

சென்னை: குடிமைப்பணிகள் முதல்நிலை பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு பிப்.27-ம் தேதி நடைபெறும் என அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பயிற்சித் துறைதலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த இளநிலை,முதுநிலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்திலும், கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வு பயிற்சி நிலையங்களிலும், மத்தியதேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/01/large/762934.jpgகுருப்-4 தேர்வுக்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு; கலந்தாய்வு பிப்.15-ம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: கடந்த 2019-ல் நடத்தப்பட்ட குருப்-4 தேர்வுக்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்கலந்தாய்வு, பிப்.15-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரிநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/01/large/762932.jpgதேர்தலையும் கரோனா தளர்வையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை பதிவிட வேண்டாம்: சுகாதாரத் துறை செயலர் அறிவுறுத்தல்

சென்னை: தேர்தல் வருவதால்தான் நோய் தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுவதாக சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது. தளர்வுகள் அறிவித்த நிலையில் தேர்தலையும் கரோனா பரவலையும் தொடர்படுத்தி தவறான கருத்துகளை பதிவிட வேண்டாம் என சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சை வார்டுக்கு, முழு கவச உடையுடன் சென்று சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.மருத்துவமனை டீன் தேரணிராஜன்உடன் இருந்தார். தொடர்ந்து நோயாளிகளுக்கான மருத்துவ வசதிகளையும் பார்வையிட்டார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://ift.tt/lxGwXgeN1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு; அனைத்து மாணவர்களுக்கும் இன்று முதல் நேரடி வகுப்புகள்: கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்புவரையிலான வகுப்புகள் மற்றும்கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இன்று (பிப்.1) முதல் நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அனைத்துமாணவர்களும் அறிவுறுத்தப்பட் டுள்ளனர்.

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜன.3-ம் தேதி திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால், கரோனாவின் புதிய வடிவமான ஒமைக்ரான் பரவத் தொடங்கியதால் பள்ளிகளுக்கு ஜன.31 வரை தொடர் விடுமுறை விடப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, January 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/31/large/762580.jpgஆர்எஸ்எஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டதை எதிர்த்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ஆர்எஸ்எஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இலுப்பூர் வட்டம், இருந்திரப்பட்டி அருகே உள்ள திம்மம்பட்டியைச் சேர்ந்த பிரேமா என்பவரின் வீட்டுக்கு சமாதானபுரத்தைச் சேர்ந்த ராணி மற்றும் தேவசாந்தி ஆகியோர் ஜன.21-ம் தேதி சென்று, மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மக்கள் தொடர்பாளரான திம்மம்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் கணேஷ்பாபு (38) உள்ளிட்ட சிலர், அந்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/31/large/762529.jpgகாலி பணியிடங்களை நிரப்பக் கோரி பிப். 17-ல் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி சென்னையில் வரும் பிப். 17-ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர்கள் ஒன்றமைப்பின் மாநிலத் தலைவர் சீ.ரகு, பொதுச் செயலர் முரளிதரன், பொருளாளர் மு.செந்தில்குமரன் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போக்குவரத்து ஆணையர் ஆகியோரிடம் போராட்ட அறிவிப்பு தொடர்பான கடிதம் வழங்கினர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/31/large/762525.jpgமநீம கட்சி 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். இதில், சென்னை மாநகராட்சி 2-வது வார்டுக்கு நித்யஸ்ரீ, 5-வது வார்டுக்கு முகமது பாஷா, 8-வது வார்டுக்கு உஷாராணி உட்பட 38 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஆவடி மாநகராட்சி 2-வது வார்டுக்கு சதீஷ், 30-வது வார்டுக்கு விக்டர் ஜான்சன் உள்ளிட்ட 4 வேட்பாளர்களும், தாம்பரம் மாநகராட்சி 5-வது வார்டுக்கு ஆண்டியப்பன், 7-வது வார்டுக்கு தாமோதரன், 8-வது வார்டுக்கு சந்திரன், 10-வது வார்டுக்கு ஸ்டீபன்ராஜ் உள்ளிட்ட 9 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/31/large/762527.jpgஞாயிறு முழு ஊரடங்கு ரத்து எதிரொலி; மீன் சந்தைகளில் அலைமோதிய கூட்டம்: வரத்து குறைவால் மீன்களின் விலை உயர்வு

சென்னை: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், காசிமேடு, கலங்கரை விளக்கம், சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. வரத்து குறைவாக இருந்ததால் மீன்களின் விலை உயர்ந்திருந்தது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால், சனிக்கிழமைகளில் மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், இரவுநேரம், ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/31/large/762622.jpgதேர்தல் பணி பயிற்சியை புறக்கணித்தால் நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் பணி பயிற்சியில் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்குமாறு பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது.வழக்கம்போல, தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாநில தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/31/large/762617.jpgதிமுக, கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக மனமுவந்து கூட்டணி கட்சியினருக்கு உரிய இடங்களை ஒதுக்க வேண்டும்: திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சியினருக்கு உரிய இடங்களை மனமுவந்து ஒதுக்கீடுசெய்ய வேண்டும் என்று திமுகநிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வரும்,திமுக தலைவருமான ஸ்டாலின்கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/31/large/762611.jpgகடற்கரைகளில் நாளை முதல் மக்களுக்கு அனுமதி: கரோனா கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்

மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைகளில் நாளை முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருந்தது. மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் கூட அரசு தடை விதித்திருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, January 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/30/large/762195.jpgவேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் மனுக்களை சரிபார்க்க வார்டுக்கு ஒரு மேஜை அமைக்க வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு அரசியல் கட்சியினர் கோரிக்கை

சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் வார்டுக்கு ஒரு மேஜை அமைத்து, வேட்புமனுக்களை சரிபார்க்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில், நடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/30/large/762295.jpgகோயில் சொத்து வாடகை பாக்கி விவரங்களை பிப்.15-க்குள் ஆன்லைனில் பதிவேற்ற உத்தரவு

கோயில் சொத்து வாடகை பாக்கிவிவரங்களை பிப். 15-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யஅதிகாரிகளுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை ஆணையர்ஜெ.குமரகுருபரன் இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/30/large/762296.jpgஎம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு ஆன்லைன் பதிவு இன்று தொடக்கம்: சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு மாணவர்கள் இன்றுமுதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்றுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து்ள்ளார்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்புப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/30/large/762289.jpgமாணவர்களின் வசதிக்காக புதிய ஏற்பாடு; இ-சேவை மையங்கள் மூலம் பள்ளி சான்றிதழ்கள் பெறலாம்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

பள்ளி மாணவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களைப் பெறலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை விவரம்:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/30/large/762286.jpgஊரக உள்ளாட்சி பதவியை ராஜினாமா செய்யாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் தகுதி நீக்கம்: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் ஊரக உள்ளாட்சி பதவி தகுதி நீக்கம் செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் கடந்த 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மறைமுக தேர்தல் மூலம் மொத்தம் 1,298 பதவிகளுக்கு, அதாவது மாநகராட்சி மேயர், துணை மேயர், நக ராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, January 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/29/large/761833.jpgஅதிமுக சார்பில் சமூக வலைதள தேர்தல் பரப்புரை தொடக்கம்

ஆவடி: 'உயிரைக் காப்பாத்த மாஸ்க் போடுங்க! - ஊரைக் காப்பாத்த இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்க’ என்ற வாசகத்துடன் சமூக வலைதளம் மூலம் ஆவடி அதிமுகவினர் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அதிக வாக்குகளைப் பெறலாம் என அதிமுக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெருநகராட்சியாக இருந்த ஆவடி, கடந்த 2019-ம் ஆண்டு மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. மாநகராட்சியாக உருவாக்கப்பட்டு, முதல் தேர்தலை தற்போது ஆவடி சந்திக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 48 வார்டுகளைக் கொண்ட ஆவடி மாநகராட்சியில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 33 வாக்காளர்கள் உள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/29/large/761836.jpgசெங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் முதல் தேர்தலை சந்திக்கும் புதிய நகராட்சிகள்

செங்கை/காஞ்சி/திருவள்ளூர்: சென்னையை ஒட்டியுள்ள செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் புதியதாக உருவாக்கப்பட்ட 5 நகராட்சிகள், முதல் முறையாக தேர்தலை சந்திக்கின்றன. நகராட்சியின் முதல் தலைவர் பதவியை கைப்பற்றுவது யார்? என்பதில் திமுக - அதிமுக கட்சி நிர்வாகிகளிடையே தேர்தல் களத்தில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மாங்காடு, குன்றத்தூர் ஆகியவை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்திவரம் - கூடுவாஞ்சேரி, திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர், பொன்னேரி ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/29/large/761844.jpgசென்னை காவல் ஆணையருக்கு கரோனா வைரஸ் தொற்று

சென்னை: கரோனா தொற்று பரவல் அண்மையில் மீண்டும் அதிகரித்தது. தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தொற்று பரவலை முற்றிலும் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

எனினும், கரோனா தொற்றால் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/29/large/761843.jpgசென்னை மாநகராட்சி தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு: ரூ.6 கோடியில் 6,000 சிசிடிவி கேமராக்கள் வாங்க திட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சித் தேர்தலில் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்ய சுமார் ரூ.6 கோடி மதிப்பில் 6 ஆயிரம் சிசிடிவி கேமராக்களை வாங்க மாநகாரட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கெனவே வாக்குச்சாவடி பட்டியல், வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/29/large/761845.jpgமெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயக்கம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கை ரத்து செய்திருப்பதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன.

வார நாட்களில் (திங்கள் முதல் சனிக்கிழமை வரை) காலை 5.30 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/29/large/761949.jpgதமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 20-வது தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றுஅச்சுறுத்தி வருவதால், கரோனாதடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 20-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசியும், இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் தகுதியுள்ளோருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/29/large/761950.jpgசெயலி மூலம் மின் கணக்கீடு செய்யும் முறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த மின்வாரியம் திட்டம்

சென்னை: செயலி மூலம் மின் கட்டணத்தை கணக்கீடு செய்யும் புதிய முறையை வரும் பிப்.1-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்த மின் வாரியம் திட்ட மிட்டுள்ளது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் வாரியம் கணக்கெடுத்து வருகிறது. வீடுகளுக்குகணக்கெடுக்கச் செல்லும் ஊழியர், அதுகுறித்த விவரங்களை பதிவுசெய்யும் கருவியை எடுத்துச் செல்கிறார். பின்னர் அவர் அலுவலகம் வந்து, அந்த விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்வார். பின்னர், நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு மின் கட்டண விவரம் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/29/large/761946.jpgமருத்துவக் கலந்தாய்வுக்கு வந்த ஓய்வுபெற்ற ஆசிரியரின் விண்ணப்பம் மறுப்பு

சென்னை: மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்து கலந்தாய்வுக்கு வந்த ஓய்வுபெற்ற ஆசிரியரின் விண் ணப்பத்தை ஏற்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

இதுதொடர்பாக, தருமபுரி மாவட்டம் பாப்ராபட்டியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம்(61) கூறியதாவது: “பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவே ஓய்வுக்குப் பின் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று விண்ணப்பித்தேன். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலிலும் இடம்பெற்றேன். கலந்தாய்வு அறையில், ‘மருத்துவம் படிக்க 10 மற்றும் 12-ம் வகுப்பு தகுதியாக உள்ளது. நீங்கள் பியூசி படித்திருப்பதால் உங்களுடைய விண்ணப்பத்தை ஏற்க முடியாது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு, நான் மருத்துவம் படிக்க வரவில்லை. நான் என்னுடைய இடத்தை மற்றொரு மாணவருக்கு விட்டுக்கொடுக்கத்தான் வந்திருக்கிறேன் என்று தெரிவித்தேன்’’ என்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/28/large/761636.jpg2030-க்குள் 46 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: 2030-க்குள் தமிழத்தில் 46 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தொழில்துறை மேம்பாடு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இருந்து:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, January 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/28/large/761611.jpgகுடியரசு தின விழாவின்போது எழுந்து நிற்காததால் சர்ச்சை: ‘தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடல் என்பதை உணர்கிறோம்’ - அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்த நிலையில் ரிசர்வ் வங்கி விளக்கம்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப்பாடல் என்பதை உணர்வதாக இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகம் அருகில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிமண்டல அலுவலகத்தில் 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்எம்என் சுவாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சிமுடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, ரிசர்வ் வங்கி பெண் அதிகாரி உட்பட சிலர் உட்கார்ந்திருந்தனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/28/large/761586.jpgபொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள்: குடிமைப் பொருள் வழங்கல் துறை தரக் கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட்

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, குடிமைப் பொருள் வழங்கல் முதுநிலைதரக் கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,296.88கோடி மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஜன.4-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/28/large/761552.jpgதனியார் நிறுவனத்துடன் இணைந்து ஐஐடி-ல் 5-ஜி தொழில்நுட்ப மேம்பாட்டு ஆராய்ச்சி

சென்னை: 5-ஜி தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பாக சென்னை ஐஐடி-ல் ஆராய்ச்சி நடைபெற உள்ளது.

தொலைத்தொடர்புத் துறையில் 5-ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பாக சென்னை ஐஐடி-யுடன் இணைந்து செயல்பட எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/28/large/761631.jpgராக்கெட் அறிவியல் பயிற்சியில் சிறப்பான திறனை வெளிப்படுத்தும் அரசு பள்ளி மாணவர்கள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர்: தொடக்க நிகழ்வில் பத்மபூஷன் சிவதாணு பிள்ளை தகவல்

சென்னை: ராக்கெட் அறிவியல் பயிற்சியில் சிறப்பான திறனை வெளிப்படுத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என ராக்கெட் அறிவியல் தொழில்நுட்ப தொடக்க நிகழ்வில் பத்மபூஷன் சிவதாணு பிள்ளை தெரிவித்தார்.

தமிழக அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு முதல்முறையாக ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் தொடக்க நிகழ்வு, ஆன்லைனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் கே.நந்தகுமார், ஐஏஎஸ் தலைமையேற்றார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/28/large/761632.jpgகடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர்எஸ்.பாலச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் உள் பகுதியில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/28/large/761630.jpgஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவினர் கலந்தாய்வில் 73 இடங்கள் நிரம்பின: 7.5% உள்ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு

சென்னை: மருத்துவப் படிப்புக்கான சிறப்புப்பிரிவினர் கலந்தாய்வில் 71 எம்பிபிஎஸ், 2 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 73 இடங்கள் நிரம்பின. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது.

அரசு மற்றும் சுயநிதி மருத்துவகல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு 6,999 எம்பிபிஎஸ் இடங்கள், 1,930 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,145 எம்பிபிஎஸ் இடங்கள், 635 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, January 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/27/large/761271.jpgமதுரையில் தொடங்கப்படாத எய்ம்ஸ் கட்டுமானப் பணி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு

மதுரை: மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 2019-ம் ஆண்டு ஜன.27-ம்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இன்றோடு அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் கடந்து விட்டன.ஆனால் தோப்பூரில் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை. பிரதமர் அடிக்கல் நாட்டும்போது ரூ.1,464 கோடி மதிப்பில் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி அமைக்கப்படும் என்று கூறினார். திட்டமிடப்பட்ட காலத்தில் கட்டுமானப் பணி தொடங்காத நிலையில், 2020-ம் ஆண்டு இறுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான கடனுதவியை ஜப்பானின் ஜெ.ஐ.சி.ஏ. நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை நிதி உதவி வராததால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/27/large/761201.jpgமுதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டும் குடியரசு தினத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கவில்லை: அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் அவலம்

சென்னை: குடியரசு தினத்தன்று சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டும், அதிகாரிகளின் அலட்சியத்தால் குடியரசு தினமான நேற்று சென்னையில் வ.உ.சிதம்பரனார், அன்னி பெசன்ட் அம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு ஆக. 13-ம் தேதி, `சுதந்திரம் மற்றும் குடியரசு தினவிழா நாட்களில் கேட்பாரற்று கிடக்கும் தலைவர்களின் சிலைகள்: அலங்கரித்து மரியாதை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்ற தலைப்பில் `இந்து தமிழ் திசை' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, “நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் சிலைகளுக்கு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ஆக. 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று முதன்முறையாக பெரும்பாலான தலைவர்களின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இருப்பினும் அதிகாரிகளின் அலட்சியத்தால் மெரினா கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்படவில்லை.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/27/large/761313.jpg‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி: ஆன்லைனில் ஞாயிறு காலை நடைபெறுகிறது

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி வரும் ஞாயிறு காலை 10.30 மணிக்கு இணையவழியில் நடைபெறுகிறது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு.ஆனால், அதற்கான அடிப்படை கல்வித் தகுதி, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதற்கான செலவு என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/27/large/761317.jpgபொதுநூலக சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள முன்னாள் துணைவேந்தர் எம்.ராஜேந்திரன் தலைமையில் குழு: தமிழக அரசு அரசாணை பிறப்பிப்பு

சென்னை: பொது நூலகச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்வதற்காக முன்னாள் துணைவேந்தர் எம்.ராஜேந்திரன் தலைமையில் ஓர் உயர்நிலைக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர்காகர்லா உஷா வெளியிட்டுள்ளஅரசாணையில் கூறியிருப்பதா வது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/27/large/761312.jpg‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ - சிறப்பு கலந்துரையாடல்: சனி மாலை 6 மணிக்கு ஆன்லைனில் நடக்கிறது

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணையவழி சிறப்பு கலந்துரையாடல் வரும் சனிக்கிழமை (ஜன.29) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

நாளைய இந்தியாவை வளமானதாகவும். அறிவியல் சிந்தனையோடும் வளர்த்தெடுக்க வேண்டுமென்று விரும்பியவர் மறைந்த அப்துல் கலாம். இளைய தலைமுறையினரிடம் உரையாடும் போதெல்லாம் தொடர்ந்து இதனைவலியுறுத்தி வந்தவர். கலாமின் மறைவுக்குப் பின்னர், அவரது அறிவியல் சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/27/large/761316.jpgபெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று (ஜன. 27) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜன.27-ம் தேதிகடலோர மாவட்டங்கள், புதுவை,காரைக்கால் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர். திருச்சி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, January 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/26/large/760947.jpgகுடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நாட்டின் 73-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்களுக்கு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: கடந்த காலங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில் மாநிலங்கள் வடிவமைக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மிகுந்த வரவேற்பையும், முக்கியத்துவத்தையும் பெற்றது. ஆனால், நடப்பு ஆண்டில் பாஜக அரசின் பாரபட்ச போக்கு காரணமாக குடியரசு தின அணிவகுப்பில் பாஜக ஆளும் மாநிலங்கள் சார்பாக அலங்கார ஊர்திகள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் ஆட்சிபுரியும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் அலங்காரஊர்திகள் பங்கேற்பது முற்றிலும்மறுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்துவதுடன், பன்முக கலாச்சாரத்தை ஏற்க மறுக்கிற போக்காகவே காண முடிகிறது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/26/large/760977.jpgதமிழகத்தில் இரவு ஊரடங்கு நீட்டிப்பா? - முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும்இரவு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பைத் தொடர்ந்து ஜன.6 முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தஊரடங்கு ஜன.31 வரை நீட்டிக்கப்பட்டது. இதுதவிர, ஜன.9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலானது. அதைத் தொடர்ந்து, ஜன.16, 23 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/26/large/760981.jpgபெண் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி; பெண் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்: ஐசிடிஎஸ் இயக்குநர் அமுதவள்ளி, ஐஏஎஸ் அறிவுறுத்தல்

சென்னை: பெண் குழந்தைகள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று ஐசிடிஎஸ் இயக்குநர்அமுதவள்ளி, ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.

11 முதல் 18 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இணையம் வழியே கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழக அரசின் ஐசிடிஎஸ் மற்றும் பாரதப் பிரதமரின் போஸ்ஹன் அபியானும் இணைந்து நடத்தின.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/26/large/760978.jpgஅரசுப் பள்ளி குழந்தைகளுக்கு முதல்முறையாக ராக்கெட் அறிவியலை அறிமுகம் செய்யும் நிகழ்வு ஆன்லைனில் இன்று தொடக்கம்: பத்மபூஷன் சிவதாணு பிள்ளை உரையாற்றுகிறார்

சென்னை: தமிழக அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு முதல்முறையாக ராக்கெட் அறிவியலை அறிமுகம்செய்யும் வகையில் இணையம்வழியே இன்று நடைபெறவுள்ளதொடக்க நிகழ்வில் பத்மபூஷன் சிவதாணு பிள்ளை பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும்குழந்தைகளிடம் ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தை முதல்முறையாக அறிமுகப்படுத்துகிற நிகழ்வின் தொடக்க விழா இன்று(ஜன.26) மாலை 6 மணிக்குஇணையம் வழியே நடைபெற உள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/26/large/760980.jpgதமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம் தொடக்கம் - ‘ஆராய்ச்சியில் சிறந்த தமிழகம்’ என்ற இலக்கை நோக்கி பயணிப்போம்: உயர்கல்வி நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: ‘ஆராய்ச்சியில் சிறந்த தமிழகம்’ என்ற இலக்கை நோக்கி உயர்கல்வி நிறுவனங்கள் பயணிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) பேரிடர் மேலாண்மை, விவசாயம், வரி திட்டமிடல், கட்டுமானக் கண்காணிப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறுதேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய் துள்ளது.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/26/large/760973.jpgசிறப்பாக பணிபுரிந்ததற்காக தமிழகத்தைச் சேர்ந்த 20 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது: செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் வழங்கப்படுகிறது

சென்னை: சிறப்பாக பணிபுரிந்த தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுகிறது.

காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுகின் றன. அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் விருது பெற தமிழக காவல் துறை அதிகாரிகள் 20 பேர் தேர்வாகியுள்ளனர்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, January 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/25/large/760575.jpgகுற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் மீது தொடக்கத்திலேயே நடவடிக்கை தேவை: டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஏ.எம்.விக்கிரமராஜா மனு

சென்னை: தமிழகத்தில் குற்றச் செயலில் ஈடுபடுவோரை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து கலைந்தெறிய வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஏ.எம்விக்கிரமராஜா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/25/large/760576.jpgவருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் சிறப்பாசிரியர் தேர்வு அறிவிப்பு இடம்பெறாதது பற்றி விளக்கம்: தேர்வு வாரிய தலைவர் அறிக்கை

சென்னை: வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு இடம்பெறாதது ஏன் என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜி.லதா விளக்கம் அளித்தார்.

2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு, இடைநிலை மற்றும் பட்டதாரி தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு உட்பட 7 தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் அவற்றுக்கான அறிவிக்கை எப்போது வெளியாகும், தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...