Friday, October 13, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/14/large/1138033.jpgதிமுக ‘மகளிர் உரிமை மாநாடு’ | சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி: முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார் 

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு இன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது அமைச்சர்கள் நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி மற்றும் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் உடனிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...