
சிவகாசி: சிவகாசி அருகே ரெங்கபாளையம் கம்மாபட்டியில் பட்டாசு பரிசுப் பெட்டி பேக்கிங் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மாரனேரி கீச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பட்டாசு மருந்து கலவை தயாரித்தபோது, வெடி விபத்து ஏற்பட்டதில், ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்காகுளத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் ரெங்கபாளையம் கம்மாபட்டியில் கனிஷ்கர் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு விதிமீறலில் ஈடுபட்டதால் இந்த ஆலை உரிமம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், ஆலை அருகே மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்று, பட்டாசு விற்பனை கடையைநடத்தி வந்தார். இந்த கடையின் பின்புறம், விதியை மீறி தகர கொட்டகை அமைத்து, பட்டாசு பரிசுப் பெட்டி (‘கிஃப்ட் பாக்ஸ்’) பேக்கிங் செய்யும் பணியை மேற்கொண்டு வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்