
சென்னை: தீபாவளியையொட்டி நவ.9, 10, 11 ஆகிய தேதிகளில் 10,595 சிறப்பு பேருந்துகளும் நவ.13 முதல் 15 வரை 6,992 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திரரெட்டி, சிறப்புச் செயலாளர் தி.ந.வெங்கடேஷ், ஆணையர் சண்முகசுந்தரம், காவல்துறை, அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்