
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான வரி, வாழ்நாள் வரி உயர்வு தொடர்பான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை தொடர்பான மசோதாவை அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து துறையில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு வரிகள் உயர்த்தப்படவில்லை. எனவே,வரி விதிப்பு முறைகளில் திருத்தம்செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அனைத்து வகை வாகனங்களுக்கும் புதிய வரி நிர்ணயிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்