
சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து அரசுப் பேருந்துகளில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு, தொலைதூரம் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து, நகரப் பேருந்துகளிலும் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இது நடைமுறைக்கு வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்