
கடலூர்: என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர் கள் மற்றும் கொடுக்க இருப்பவர் களுக்கான கோரிக்கைகளை முன் வைத்து, அனைத்துக் கட்சி சார்பில் நேற்று மாலை நெய்வேலியில் பேரணி நடைபெற்றது. இதில் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
2013-ம் ஆண்டு வெளியிட்டநில ஆர்ஜித சட்டத்தை முழுமையாக என்எல்சி நிர்வாகம் அமல்படுத்த வேண்டும். ஏற்கெனவே என்எல்சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்ததால் பாதிக்கப்பட்டு, இதுவரை வேலை பெறாதவர்களுக்கு நிரந்தர வேலை என்எல்சி நிறுவனத்தில் வழங்க வேண்டும். புதிதாக நிலம் எடுக்க உள்ளவர்களுக்கு அவார்டு வழங்கும் நாளிலேயே, நிரந்தர வேலைக்கான பணி ஆணையை வழங்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்