Wednesday, June 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/01/large/688031.jpgசென்னை மாநகராட்சியில் 746 தற்காலிக பதவிகள் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

சென்னை மாநகராட்சியில் அனைத்து துறைகளிலும் தற்காலிகமாக 1,896 பதவிகள் தோற்றுவிக்கப்பட்டன. மாநகராட்சியின் செலவீனத்தை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 1,896 பதவிகளில் 1,150 பதவிகள் அவசியம் இல்லாததாக கருதி கடந்த 2012-ம் ஆண்டு 746 தற்காலிக பதவிகளாக குறைக்கப்பட்டது.

இப்பதவிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டு, மக்கள் தொகையும் பெருகி வரும் நிலையில், இப்பதவிகளுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்க மாநகராட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கு மாநகராட்சி சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டது. அதை ஏற்று கடந்த வாரம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...