
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் அன்று முதல்வர் ஸ்டாலின், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் ரூ.70 கோடியில் 2 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்டமாக கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என்று அறிவித்தார்.
அதற்காக, மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நிலம், உலக தமிழ்ச் சங்க வளாகம் உள்ளிட்ட 6 இடங்கள் பரிசீலனையில் உள்ளன. தற்போது வரை நூலகம் அமைக்கப்படும் இடம் அறிவிக்கப்படவில்லை. அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு ஆகியோர் இந்த 6 இடங்களையும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அவர்களிடம் மாணவர்கள், பொதுமக்கள் எளி தாக வந்து செல்லும் வகையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் சரியான தேர்வாக இருக்கும் என்று உள்ளூர் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்