
ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர் (75). விவசாயி. இவரது மனைவி மல்லிகா (58). மகள் தீபா (30). இவர்களது விவசாய தோட்டத்தில் குப்பம்மாள் (65) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர்கள் 4 பேரும் நேற்று வழக்கம்போல் தோட்டத்தில் பணியாற்றி கொண்டி ருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் இருந்து வந்ததாகக் கூறி பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை செய்துள்ளார். மேலும், தொற்று ஏற்படாமல் இருக்க சத்து மாத்திரை கொண்டு வந்துள்ளதாகக் கூறி மாத்திரைகளை கொடுத்துள்ளார். இதனை நம்பிய 4 பேரும் மாத்திரையை சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்