Monday, June 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/29/large/687300.jpgயூனியன் பிரதேசங்களில் முதன்முறையாக புதுச்சேரியில் ஆன்லைனில் கட்டிட அனுமதி தொடக்கம்

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் முதன்முறையாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுமைக்கும் ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி வழங்கும் முறையை முதல்வர் ரங்கசாமி நேற்று தொடக்கி வைத்தார்.

புதுச்சேரி தேசிய தகவலியல் வமயம் (NIC) வடிவமைத்த 'ஆன்லைன் கட்டிட அனுமதி வழங்கும் அமைப்பு மூலமாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நான்கு நகர அமைப்புக் குழுமங்கள் கட்டிட அனுமதி வழங்கும் முறை 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த முறையில் கட்டிட வரைபடங்களை தானாக ஆய்வு செய்யும் மென்பொருள் இணைக்கப்படவில்லை. இதற்காக பெங்களூரு நிறுவனத்துடன் புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்புத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. கட்டிட வரைபடங்களை, தானாக ஆய்வு செய்ய மென்பொருளை இலவசமாக வழங்கியது. இந்த மென்பொருளைத் தற்போதுள்ள ஆன்லைன் கட்டிட அனுமதி வழங்கும் அமைப்புடன் இணைக்க, புதுச்சேரி தேசிய தகவலியல் மையத்திற்குத் தொழில்நுட்ப உதவி செய்யவும் முன்வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...