
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்தகனமழையை தொடர்ந்து கர்நாடக மாநில அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, அந்த அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தபடி இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்