Sunday, June 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/28/large/687049.jpgசென்னை உள்பட 21 இடங்களில் ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் கொள்ளை: தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய கும்பலை சேர்ந்த இளைஞர் ஹரியாணாவில் கைது

சென்னை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த நபர், தான் கொள்ளையடித்த பணத்தில் ஹரியாணாவில் சொகுசு வீடு, நிலங்கள் வாங்கி குவித்த தகவல் வெளியாகி உள்ளது. இவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.

சென்னையில் வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், தரமணி, பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களை குறி வைத்து கும்பல் ஒன்று நூதன முறையில் பணம் கொள்ளையடித்தது. அதாவது, எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் உள்ள பணம் செலுத்தும் வசதி கொண்ட சிடிஎம் இயந்திரங்களை குறி வைத்து ஒரே பாணியில் கடந்த 15-ம் தேதியிலிருந்து 18-ம்தேதிக்குள் அடுத்தடுத்து சுமார் ரூ.1 கோடி வரை சுருட்டியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...