Sunday, July 11, 2021

https://ift.tt/3xzR3Cd மாத அனுமதி ஜூலை 31-ல் முடிவடைகிறது; ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடருமா?- உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்நோக்கும் வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதி ஜூலை 31-ல் முடிவடைகிறது. ஆக்சிஜன் தொடர்ந்து தயாரிக்க வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

கரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் இயக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி அனுமதி அளித்தது. ஸ்டெர்லைட் ஆலையில் மே 12-ம் தேதி இரவு மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிதற்போதுவரை நடந்து வருகிறது. வாயு நிலையிலான மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்யும் பணியையும் ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்காக ரூ.11 கோடியில் பாட்டிலிங் பிளான்டை அமைத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...