Monday, July 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/13/large/692642.jpgஎத்தனை பேர் பயணித்தனர் என்பதை அறிய அரசுப் பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் விநியோகம்

எந்தெந்த வழித்தடத்தில், எத்தனைபேர் பயணித்தனர் என்பதை அறியசாதாரண அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு நேற்றுமுதல் டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன், அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணிக்கலாம் என மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, ஆண் பயணிகளுக்கு மட்டுமே நடத்துநர்கள் டிக்கெட் கட்டணம் வசூலித்து வருகின்றனர். சிவப்பு நிற பேருந்துகள் தவிர, மற்ற நகர பேருந்துகளில் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கிக் கொள்ளலாம். பெண்களுக்கு டிக்கெட் ஏதும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று முதல் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...