
சென்னை மாநகராட்சியில் 8 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி போடவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வீடுகளில் தனிமையில் உள்ள கரோனா நோயாளிகளால் உருவாகும் உயிரி மருத்துவக் கழிவுகள் அறிவியல் முறையில் அகற்றப்படுவதில்லை. பெரும்பாலானோர் பிற கழிவுகளுடன் சேர்த்து மருத்துவக் கழிவுகளை போடுகின்றனர். இந்த குப்பைகளை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர் என்ற செய்தி இணையதளம் மற்றும் நாளிதழில் வெளியானது. அதை அடிப்படையாக கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்