
சென்னை சேத்துப்பட்டில் ஆதரவற்ற இல்லத்தில் தங்கியிருக்கும் சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பயிற்சி மைய முதல்வர் எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் சூர்யா கடந்த 2013-ம்ஆண்டு மர்ம காய்ச்சலால் திடீரென உயிரிழந்தார். அவரது நினைவாக மருத்துவர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை குடும்பத்தினரால் தொடங்கப்பட்டது. அவரது நினைவு நாள் மற்றும் பிறந்த நாளன்று ஆதரவற்ற சிறார்கள் மற்றும் முதியோருக்கு ஆண்டுக்கு இருமுறை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்