Thursday, July 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/30/large/698904.jpg‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் சார்பில் அர்ப்பணிப்போடு பணியாற்றுவோருக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கும் விழா- சென்னையில் நாளையும், கோவையில் ஆக.1-ம் தேதியும் நடைபெறுகிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உடன் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன், இந்திய மெடிக்கல் அசோசியேசன் - தமிழ் மாநில பிரிவு, டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கும் விழாக்கள் சென்னையில் நாளை (ஜூலை 31, சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கும், கோவையில் நாளை மறுநாள் (ஆக. 1, ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கும் நடைபெற உள்ளன.

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிறப்பான அர்ப்பணிப்போடு பணியாற்றும் மருத்துவர்களை இந்திய மெடிக்கல் அசோசியேசன், தமிழ் மாநில பிரிவு தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருது வழங்கி, கவுரவிக்கப்பட உள்ளது. இவ்விருது வழங்கும் விழா, நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...