Friday, July 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/17/large/694107.jpgசர்வதேச சாக்லேட் தினத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘குக் வித் சாக்லேட்’ சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி: ஜூலை 30 முதல் 3 நாட்கள் நடக்கிறது

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் வீடுகளிலேயே தனித்திருக்கும் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு பயன்படும் வகையில், சர்வதேச சாக்லேட் தினத்தை முன்னிட்டு, ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் சார்பில் சாக்லேட் செய்யக் கற்றுத்தரும் ‘குக் வித் சாக்லேட்’ சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி ஜூலை 30 முதல் 3 நாட்கள்நடைபெற உள்ளது.

ஜூலை 30, 31, ஆகஸ்ட் 1 ஆகிய நாட்களில் தினமும் மாலை 6 முதல்7 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை, 40 ஆண்டுகால சமையல் அனுபவமிக்க புகழ்பெற்ற செஃப் அசோக்குமார் நடத்தவுள்ளார். இந்த ஆன்லைன் நிகழ்வில்,சாக்லேட் ஸ்பான்ஜ், சார்ட் கிரஸ்ட் பேஸ்ட்ரி, சோகோ சிப்ஸ் குக்கீஸ், சாக்லேட் சபயன் கட்டன், பிளாக் ஃபாரஸ்ட், ஒயிட் ஃபாரஸ்ட், சாக்லேட் டிரஃபிள் கேக், பட்டர் ஸ்காட்ச்பிரலைன் உள்ளிட்ட சாக்லேட் தயாரிப்புகள் குறித்து விளக்கப்படும். கேட்டரிங் படிக்கும் மாணவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம். வீட்டிலேயே சுவையான சாக்லேட் செய்வதற்கான நுணுக்கங்களை அனைவருக்கும் கற்றுத்தருவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...