Sunday, July 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/12/large/692168.jpgகாரணையில் ரூ.1.80 கோடியில் கைவினை சுற்றுலா கிராம திட்டம்: ஊரகத் தொழில் துறை அமைச்சர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்சார்பில், கைவினை சிற்பங்களின் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவி மூலம் ரூ.5 கோடி மதிப்பில், கடற்கரை சாலையையொட்டி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், விற்பனை நிலையங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான பூங்கா, ஓய்வறை, உணவுக் கூடங்கள் அமைந்துள்ளன. எனினும், விற்பனை நிலையத்தில் கலைஞர்களுக்கு கடைகள் ஒதுக்குவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாலும், சரியான திட்டமிடல் இல்லாததாலும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இதற்கு வரவேற்பு இல்லை. இதனால் இங்கு கடைகள் அமைக்க கைவினைக் கலைஞர்கள் தயக்கம் காட்டும் நிலை உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...