
ஜோலார்பேட்டை அருகே கொட் டாறு தரைப்பாலம் பகுதியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய் யப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாகங்களை எரிந்த நிலையில் காவல் துறையினர் நேற்று மீட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகம்மியம்பட்டு- காவேரிப்பட்டு ஊராட்சிகளுக்கு இடையே ஏரியையொட்டி கொட்டாறு தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த தரைப்பாலம் அருகே எரிந்த நிலையில் மனித உடல் பாகங்கள் இருப்பது குறித்து பொதுமக்கள், நேற்று காலை கிராம நிர்வாக அலுவலர் மேகலாவுக்கும், ஜோலார்பேட்டை காவல் நிலையத் துக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப் பாளர் சாந்தலிங்கம், ஜோலார் பேட்டை காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அந்த உடல் பாகங்கள் இளம் பெண்ணின் கை மற்றும் கால் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இளம்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்