
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியைக் கடந்தது. இதனால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியைக் கடந்த நீர்வரத்து நேற்று காலை 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேலும், பகலில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று மாலை விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியைக் கடந்தது. இதனால், தமிழக, கர்நாடக வனப்பகுதி எல்லையை தொட்டபடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்