Tuesday, July 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/14/large/693004.jpgநீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ராஜன் குழு இன்று அறிக்கை தாக்கல்: குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தனது அறிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இன்றுதாக்கல் செய்ய உள்ளது. இதற்கிடையில், இக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பாஜக தொடர்ந்தவழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் 10-ம் தேதி உத்தரவிட்டார். இக்குழுவில் சுகாதாரம், சட்டம், பள்ளிக்கல்வித் துறைகளின் செயலர்கள், மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் கூடுதல் இயக்குநர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், கல்வியாளர் ஜவஹர் நேசன் ஆகியோர் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...