Saturday, July 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/04/large/689170.jpgமதுரையில் குழந்தைகளை விற்ற வழக்கில் திருப்பம்: கேரளாவுக்கு தப்ப முயன்ற காப்பக நிர்வாகி கைது

மதுரையில் ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்த குழந்தைகளை பல லட்ச ரூபாய்க்கு விற்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த காப்பக நிர்வாகி கேரளாவுக்கு தப்ப முயன்றபோது போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (40). இவர் மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே ’இதயம் டிரஸ்ட்’ என்ற பெயரில் முதியோர் காப்பகம் நடத்தினார். அதில் ஆதரவற்ற குழந்தைகளோடு, அவர்களது தாயாரும் தங்கியிருந்தனர். கடந்த மாதம் 13-ம் தேதி ஐஸ்வர்யா என்பவரின் ஒரு வயது ஆண் குழந்தை கரோனாவால் இறந்ததாகக் கூறி, காப்பக நிர்வாகி சிவக்குமார், காப்பக ஒருங் கிணைப் பாளர் கலை வாணி, ஊழி யர் மதர்ஷா ஆகியோர் நாடகமாடினர். இதனிடையே அதிகாரிகள் விசாரணை நடத்தி இஸ்மாயில்புரத்தில் கண்ணன் - பவானி தம்பதிக்கு விற்கப்பட்ட அக்குழந் தையையும், சக்கிமங்கலம் கல்மேடு பகுதியில் சகுபர்சாதிக், அனீஷ்ராணி தம்பதிக்கு விற்கப்பட்ட மற்றொரு 2 வயது பெண் குழந்தையையும் மீட்டு அவர்களின் தாயார்களிடம் ஒப்படைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...