Sunday, July 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/05/large/689527.jpgஆவடி போர் ஊர்தி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி: இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஆவடியில் அமைந்துள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சி சேர பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2019, 2020, 2021-ம் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்டேஷன், ஆட்டோமொபைல் பாடங்கள் படித்தவர்களும் மற்றும் நூலக அறிவியல் படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.boat-srp.com என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என ஆவடி போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரான விஞ்ஞானி வி.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...