Friday, August 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/28/large/709879.jpgகரோனா பரிசோதனை உபகரணங்கள் வீணடிக்கப்பட்ட விவகாரம்- செங்கை மருத்துவமனையில் மருத்துவ கல்வி இயக்குநர் ஆய்வு: நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த சிலர் மீது துறைரீதியான நடவடிக்கை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பல கோடி மதிப்புள்ள கரோனா பரிசோதனை உபகரணங்கள் (ஆர்.டி.பி.சி.ஆர்.) பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த சிலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. கரோனா உச்சத்தில் இருந்தபோது இந்த பரிசோதனை மையத்துக்கு அதிக அளவில் பரிசோதனை உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்தப் பரிசோதனை உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் அதிக அளவில் வீணடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...